- Home
- Lifestyle
- Armpit Acne : அக்குளில் வரும் குட்டிப் பருக்களை நீக்கும் சிம்பிளான வீட்டு வைத்திய குறிப்புகள்
Armpit Acne : அக்குளில் வரும் குட்டிப் பருக்களை நீக்கும் சிம்பிளான வீட்டு வைத்திய குறிப்புகள்
அக்குளில் இருக்கும் குட்டி குட்டி பருக்கள் வர காரணம் என்ன? அதை நீங்க சிம்பிளான சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

Home Remedies For Armpit Acne
அக்குளில் பருக்கள், கட்டிகள் வருவது ஒரு பொதுவான பிரச்சனை. நாம் எல்லோருமே வாழ்க்கையில் கண்டிப்பாக இந்த பிரச்சினையை ஒரு முறையாவது அனுபவித்து இருப்போம். இந்த பருக்கள் முகப்பருவைப் போல கிடையாது. இது வலியை ஏற்படுத்தும். எனவே, அகுளில் பருக்கள் வர காரணங்களும், அதற்கான சில வீட்டு வைத்தியங்கள் குறித்தும் இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
அகுளில் பருக்கள் வர காரணங்கள் :
அகுளில் பருக்கள் வரை பல காரணங்கள் உள்ளன அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- அதிகப்படியான முடி இருத்தல் -தோல் அலர்ஜி - ஈஸ்ட் தொற்று - அக்குள் பகுதியில் போதுமான அளவு சுத்தம் இல்லாமை - பாக்டீரியாக்கள் அழுக்குகள் குவிவதால் - இறுக்குமான ஆடை அணிவதால் ஏற்படும் ஒரு ஆய்வு அல்லது ஷேவிங் - அதிகப்படியான வியர்வை - சில டியோடரண்டுகள் போன்றவை ஆகும்.
அக்குள் பருக்களை நீக்க வீட்டு வைத்தியங்கள் :
கற்றாழை ஜெல்
சூட்டின் காரணமாக அக்குளில் பருக்கள் வந்தால் அதை சரி செய்ய கற்றாழை ஜெல் பெரிதும் உதவியாக இருக்கும். இதற்கு பிரெஷ்ஷான கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் வேகமாக அங்குளில் இருக்கும் கட்டி மறைய ஆரம்பிக்கும்.
மஞ்சள் மற்றும் தேன் :
அகுளில் இருக்கும் பருக்கள் மற்றும் வீக்கத்தை குறைக்க இவை இரண்டும் உதவி செய்யும். இதற்கு சிறிதளவு மஞ்சள் பொடியுடன் சில துளிகள் தேன் கலந்து அந்த பேச்சை பருக்கள் மீது தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு சூடான நீரில் கழுவ வேண்டும். வாரத்திற்கு 2-3முறை இப்படி செய்யலாம்.
சூடான நீர் ஒத்தடம்
அக்குளில் இருக்கும் பருக்கள் மீது சூடான நீர் கொண்டு ஒத்தடம் கொடுத்து வந்தால் பருக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பிக்கும். இதற்கு ஒரு துணியை சூடான நீரில் நனைத்து பிழுந்து அதை கொண்டு அக்குளில் இருக்கும் பருக்கள் மீது ஒத்தி எடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை இப்படி செய்து வந்தால் விரைவில் அக்குளில் இருக்கும் பருக்கள் மறையும்.
டீ ட்ரீ ஆயில் ;
இதில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. எனவே இது அகுல் பகுதியில் இருக்கும் பருக்கள் கொப்புளங்கள் மற்றும் வீக்கத்தை குறைக்க பெரிதும் உதவும். குறிப்பாக இதற்கு ஒரு காட்டன் துணியில் இந்த ஆயிலைத் தொட்டு பருக்கள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் பருக்கள் விரைவில் மறையும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

