காலை எழுந்த உடனே காபி குடிக்கலாமா? ஒரு நாளைக்கு எத்தனை கப் குடிப்பது நல்லது?
காபி குடிப்பதால் பல நன்மைகள் இருந்தாலும், அதிகமாக குடிப்பது மற்றும் தவறான முறையில் உட்கொள்வது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். காபியை எப்போது, எப்படி குடிக்க வேண்டும், எவ்வளவு குடிக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
நம்மில் பலரும் காலை எழுந்த உடன் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். காபி குடிப்பதால் பல நன்மைகள் கிடைப்பதாக பல ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. சில ஆய்வுகள் இது நீண்ட ஆயுளை அதிகரிக்கிறது என்று தெரிவித்துள்ளது. நாள்பட்ட நோய்களை தடுக்கவும் காபி உதவுகிறது.. ஆனால் காபி குடிக்கும் போது சில காரணிகளை கருத்தில் கொள்வது அவசியம்.
மிதமான அளவில் காபி குடித்ஹால் அது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2 முதல் 5 கப் காபி உங்கள் ஆரம்பகால மரணம், டைப் 2 நீரிழிவு நோய், இதய நோய், கல்லீரல், எண்டோமெட்ரியல் புற்றுநோய்கள், பார்கின்சன் நோய் மற்றும் மனச்சோர்வை உருவாக்கும் அபாயத்தை குறைப்பதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், 5 கப்களுக்கு மேல் உட்கொள்வது கவலை, மனச்சோர்வு, அமைதியின்மை, குமட்டல் மற்றும் பிற பக்க விளைவுகள் போன்ற தேவையற்ற பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
காபி குடிக்கும் நாம் செய்யும் பொதுவான காபி தவறுகளைப் புரிந்துகொள்வோம். உங்களுக்கு காபி குடித்துவிட்டால் நீங்கள் விரைவில் அதற்கு அடிமையாகலாம். இங்கிருந்து தான் பிரச்சனை தொடங்குகிறது.. அதிக அளவு காபி குடிப்பதால் தூக்கமின்மை, இதய துடிப்பு அதிகரிப்பு, பதட்டம், செரிமான பிரச்சனைகள் மற்றும் இதய படபடப்பு கூட ஏற்படலாம்.
காபியில் அதிக சர்க்கரையைச் சேர்ப்பதால் நன்மைகளை விட தீமைகள் அதிகம் கிடைக்கலாம். அதிக அளவு சர்க்கரை அல்லது சுவையூட்டப்பட்ட சிரப்களைச் சேர்ப்பது ஆரோக்கியமான கப் காபியை கலோரி நிறைந்த பானமாக மாற்றும், எடை அதிகரிப்பு, நீரிழிவு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
வெறும் வயிற்றில் காபி குடிப்பது: காலை எழுந்த உடன் வெறும் வயிற்றில் காபி குடிக்காமல் 1 மணி நேரம் கழித்து காபி குடிப்பது நல்லது. காலையில் வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் வயிற்றில் அமிலம் அதிகரித்து, செரிமான கோளாறுகள், அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் பிற இரைப்பை குடல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உங்கள் காபிக்கு முன் ஒரு சிறிய சிற்றுண்டி அல்லது காலை உணவை சாப்பிடுங்கள்.
சுறுசுறுப்பாக இருக்க காபியை மட்டுமே நம்புவது மிகப்பெரிய தவறு. போதிய தூக்கம், சரியான ஊட்டச்சத்து மற்றும் வழக்கமான உடற்பயிற்சி ஆகியவற்றைப் பெறுவதற்குப் பதிலாக காபியை ஆற்றலின் முதன்மை ஆதாரமாகப் பயன்படுத்துவது காபிக்கு அடிமையாகும் போக்கை கொண்டு வரும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
போதுமான தண்ணீர் அருந்தாமல் இருப்பது தவறு தான். காபி ஒரு டையூரிடிக் ஆகும், அதாவது இது சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும். ஆனால் நீங்கள் போதுமான அளவு தண்ணீர் உட்கொள்ளவில்லை என்றால் அது நீரிழப்புக்கு வழிவகுக்கும். நீரேற்றமாக இருக்க நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
காபி சாப்பிடும்போது நாம் அனைவரும் செய்யும் பொதுவான தவறுகளை தெரிந்து கொள்வது போலவே காபியை சரியான முறையில் எப்படி குடிக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வது முக்கியம்.
coffee
உங்கள் காபி நுகர்வு ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக 4 கப் வரை குறைக்க வேண்டும், ஏனெனில் அதிகப்படியான நுகர்வு நன்மைகளை விட அதிக தீமைகளை ஏற்படுத்தலாம் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்.
காலை எழுந்த உடன் காபி குடிக்காமல், ஒரு மணி நேரத்திற்கு பின்னர் காபி குடிப்பதை உறுதி செய்யுங்கள். குறிப்பாக காபி சாப்பிடுவதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். இந்த விதி உங்களை நன்கு நீரேற்றம் செய்வதை உறுதி செய்யும். காபி குடிப்பதால் ஏற்படும் நீர்ச்சத்து குறைவதைத் தடுக்க, உங்கள் உணவில் நீர்ச்சத்து நிறைந்த பழங்களைச் சேர்க்கவும்.
காபி சாப்பிடுவதற்கான சரியான மற்றும் தவறான நேரம்
காலை 9:30 மணி முதல் 11 மணி வரை சாப்பிடுவது சிறந்தது, இரவு 7 மணிக்குப் பிறகு காஃபினைத் தவிர்ப்பது நல்லது, ஏனெனில் அது உங்கள் தூக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும்.
எத்தனை கப் காபி குடிக்க வேண்டும்?
ஒரு நாளைக்கு 3-4 கப் காபி குடிப்பது நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். அதிகளவில் காபி குடிக்காமல் மிதமான அளவில் குடிப்பதன் மூலம் ஆரோக்கியத்தை உறுதி செய்ய முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.