MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Papaya : பப்பாளியை வெறும் வயித்துல சாப்பிடலாமா? கூடாதா? பலருக்கும் தெரியாத ரகசியம்

Papaya : பப்பாளியை வெறும் வயித்துல சாப்பிடலாமா? கூடாதா? பலருக்கும் தெரியாத ரகசியம்

வெறும் வயிற்றில் பப்பாளி பழத்தை சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு என்ன ஆகும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Sep 16 2025, 12:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Papaya Benefits
Image Credit : chatgpt AI

Papaya Benefits

பப்பாளி பழத்தின் இனிப்பான சுவை மற்றும் அதன் புத்துணர்ச்சியூட்டும் தன்மைக்காக பலரும் அதை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கொண்ட பப்பாளி பழம் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக கருதப்படுகிறது. நாம் அன்றாட சந்திக்கும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கு கூட பப்பாளி பழம் நிவாரணம் அளிக்கும். இத்தகைய சூழ்நிலையில், காலையில் வெறும் வயிற்றில் பப்பாளி பழம் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் உடல் நலத்திற்கு என்ன ஆகும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
Image Credit : Getty

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

பப்பாளி பழத்தில் வைட்டமின் சி மட்டுமல்லாமல், பிற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. வெறும் வயிற்றில் பப்பாளி பழத்தை சாப்பிட்டால் அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்பட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இதனால் பருவ கால தொற்று நோய்களிலிருந்து நாம் பாதுகாக்கப்படுகிறது.

36
எடை இழப்புக்கு உதவும்
Image Credit : Getty

எடை இழப்புக்கு உதவும்

எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு பப்பாளி பழம் ஒரு பெஸ்ட் சாய்ஸ். ஏனெனில் இந்த பழத்தில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் இது வயிறை நீண்ட நேரம் நிரப்பிய உணர்வை ஏற்படுத்தும். பசியை கட்டுப்படுத்தும். வெறும் வயிற்றில் பப்பாளி பழத்தை சாப்பிட்டால் அதிலிருக்கும் நார்ச்சத்து, நாள் முழுவதும் குறைவான கலோரிகள் சாப்பிடுவதை உறுதி செய்யும்.

46
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
Image Credit : Getty

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

பப்பாளி பழத்தில் வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் அவை சருமத்தை பொலிவாக மற்றும் இளமையாக வைக்க உதவுகிறது. காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பப்பாளி பழத்தை சாப்பிட்டால் சருமம் இயற்கையாகவே பொலிவு பெறும்.

56
கண் ஆரோக்கியத்திற்கு நல்லது
Image Credit : Getty

கண் ஆரோக்கியத்திற்கு நல்லது

பப்பாளி பழத்தில் இருக்கும் வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால் அவை கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே நீங்கள் எப்போதும் போல பப்பாளி பழத்தை சாப்பிடாமல் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கண் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கண் பார்வை தெளிவாக இருக்கும்.

66
இதய ஆரோக்கியம் மேம்படும்
Image Credit : Getty

இதய ஆரோக்கியம் மேம்படும்

பப்பாளி பழத்தில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. வெறும் வயிற்றில் இந்த பழத்தை சாப்பிடும் போது இது உடலின் நச்சு நீக்க செயல்முறையை தூண்டி, இதய நோய்க்கு காரணமாக இருக்கும் உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களை வெளியேற்றும். அதுமட்டுமல்லாமல் இதிலிருக்கும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து பக்கவாதம் மற்றும் பிற இதய சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tattoo meaning : டாப் 10 பாப்புலர் டாட்டூக்களுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? ஒவ்வொரு டிசைனுக்குப் பின்னாலும் ஒரு சுவாரஸ்யமான கதை!
Recommended image2
Water Tank: வாட்டர் டேங்க்கை எங்கு வைப்பது நல்லது? தரையில் வைத்தால் இவ்வளவு ஆபத்துகளா? முழு விவரம்!
Recommended image3
Duplicate Branded Product : பிராண்டட் பெயரில் டூப்ளிகேட் விற்பனை..எந்தெந்த பொருட்களில் உஷார்?
Related Stories
Recommended image1
avoid after eating a papaya: மக்களே உஷார்...பப்பாளி சாப்பிட்ட பிறகு இந்த 9 உணவுகளை சாப்பிட்டால் அவ்வளவு தான்
Recommended image2
Papaya: பப்பாளியில் நன்மைகள் ஏராளம்...ஆனால் பக்க விளைவுகள் பற்றி தெரியுமா? யாரெல்லாம் சாப்பிட கூடாது...
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved