Asianet News TamilAsianet News Tamil

Papaya: பப்பாளியில் நன்மைகள் ஏராளம்...ஆனால் பக்க விளைவுகள் பற்றி தெரியுமா? யாரெல்லாம் சாப்பிட கூடாது...

பப்பாளி ஆரோக்கியமானதுதான் ஆனால், எந்தெந்த நபர்கள் பப்பாளி சாப்பிட்டால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படும் என்று தெரிந்துகொள்வது அவசியம்.

Papaya Side effects
Author
Chennai, First Published Jan 21, 2022, 12:33 PM IST

பப்பாளி சாப்பிடுவது எப்போதும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. இதில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் (Vitamins and Fibre) போன்ற பல சத்துக்கள் உள்ளன. செரிமானம், உடல் எடை அதிகரிப்பு, சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து என்று கூறப்படுகிறது. பப்பாளியின் நன்மை அனைவருக்கும் தெரியும்,  ஆனால் 'அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு' என்ற பழமொழி நாம் உணவாக உட்கொள்ளும் அனைத்து உணவுபொருளுக்கும் பொருந்தும். பல சமயங்களில் உடலில் ஏற்கனவே இணை நோய்கள் இருக்கும் போது, ​​நாம் நமது உடல் நலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அப்படியாக, பப்பாளி சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, எந்தெந்த நபர்கள் பப்பாளியை சாப்பிடக்கூடாது என்று பார்ப்போம்.

Papaya Side effects

1. இதயத் துடிப்பு பிரச்சனையின் போது பப்பாளி சாப்பிடக்கூடாது

இதயம் தொடர்பான நோய்களுக்கு எதிராக பப்பாளி சாப்பிடுவது நன்மை பயக்கும். அதே நேரத்தில், இதயத் துடிப்பு கட்டுப்பாடில்லாமல் இருந்தால், அதன் நுகர்வு தவிர்க்கப்பட வேண்டும். பப்பாளியில் (Papaya) சயனோஜெனிக் கிளைகோசைட் அமினோ அமிலம் உள்ளது. இந்த அமிலம் செரிமான அமைப்பில் ஹைட்ரஜன் சயனைடை ஏற்படுத்தும். இது தீங்கு செய்யாது, ஆனால் இதயத் துடிப்பு கட்டுப்பாடில்லாமல் இருந்தால் அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். அத்தகைய சூழ்நிலையில், மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு உட்கொள்வது மிகவும் பாதுகாப்பானது.

2. கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டும:

கர்ப்ப காலத்தில், பெண்கள் தங்கள் உணவுப் பழக்கங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதே சமயம், பப்பாளிப் பழத்தைப் பொறுத்தவரை, கர்ப்பிணிப் பெண்கள் அதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், பப்பாளியில் உள்ள லேடெக்ஸ் கருப்பைச் சுருக்கத்தைத் தூண்டும். இது நடந்தால், பிரசவத்தில் சிக்கல்கள் ஏற்படலாம். அதேபோன்று, பப்பாளி பழத்தின் விதைகள் மற்றும் வேர்களுக்கு கருக்கலைப்பை ஏற்படுத்தும் தன்மை உள்ளது. இது கருப்பையின் சுருங்கி விரியும் தன்மையை அதிகப்படுத்தி விடுகிறது. எனவே கர்ப்ப காலத்தில் பப்பாளி பழத்தை தவிர்ப்பது நல்லது.

3. சிறுநீரக கல் இருந்தால்:

பப்பாளியில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் சிறுநீரக கற்கள் (Kidney Stones) பிரச்சனையின் போது, ​​பப்பாளியை அதிகமாக உட்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தும். பப்பாளியை அதிகமாக உட்கொள்வதால் உடலில் கால்சியம் ஆக்சலேட்டின் அளவு அதிகரிக்கும். இதன் காரணமாக சிறுநீரக கற்களின் அளவு அதிகரிக்கும். 

4. அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளியை சாப்பிடக்கூடாது:

அலர்ஜி பிரச்சனையால் அவதிப்படுபவர்களும் பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பப்பாளியில் உள்ள சிட்டினேஸ் என்சைம் மரப்பால் மீது மோசமான விளைவை ஏற்படுத்தும். இதனால் சுவாசப் பிரச்சனை, தும்மல்-இருமல், கண்களில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

Papaya Side effects

5. இரத்தச் சர்க்கரைக் குறைவில் பப்பாளியை உட்கொள்ள வேண்டாம்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பப்பாளி ஆரோக்கியமானது. பப்பாளியை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. ஆனால் சர்க்கரை நோய்க்கான மருந்து உட்கொள்பவர்களில் சர்க்கரையின் அளவு ஏற்கனவே குறைவாகவே இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், பப்பாளியின் அதிகப்படியான நுகர்வு தீங்கு விளைவிக்கும்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios