MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த உடனே தயிர் சாப்பிடலாமா? நிபுணர்களின் ஷாக் அட்வைஸ்!

ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த உடனே தயிர் சாப்பிடலாமா? நிபுணர்களின் ஷாக் அட்வைஸ்!

Health Tips: ஃபிரிட்ஜில் இருந்து எடுத்தவுடன் தயிரை அப்படியே சாப்பிடலாமா? நீங்கள் தினமும் இப்படித்தான் செய்றீங்களா? நிபுணர்களின் ஷாக் அட்வைஸை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 17 2026, 06:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த உடனே தயிர் சாப்பிடலாமா?
Image Credit : AI

ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த உடனே தயிர் சாப்பிடலாமா?

மழைக்காலம் வந்தாலே நம் வீடுகளில் தயிர், மோர், ஐஸ்கிரீம் சாப்பிடுவதை முழுமையாக நிறுத்திவிடுவார்கள். மழைக்காலம் அல்லது குளிர்காலத்தில் இவற்றைச் சாப்பிட்டால் சளி, நெஞ்சகச் சளி, இருமல் வரும் என்ற ஒரு பலமான நம்பிக்கை நம்மிடம் உள்ளது. ஆனால் மழைக்காலத்தில் தயிர் அல்லது ஐஸ்கிரீம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது வெறும் கட்டுக்கதை என்று மருத்துவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். அப்படியானால் மழைக்காலத்தில் இவற்றைச் சாப்பிடலாமா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று முழுமையாகப் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தயிர் ஒரு சிறந்த ப்ரோபயாடிக்
Image Credit : Asianet News

தயிர் ஒரு சிறந்த ப்ரோபயாடிக்

மருத்துவர்களின் கூற்றுப்படி, தயிர் நம் உடம்புக்கு ரொம்பவே பயனுள்ள ஒரு உணவு. இதில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகமாக உள்ளது. இது நம் குடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. அதனால் எந்தக் காலத்திலும் தயிரை முழுமையாகத் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

ஃபிரிட்ஜில் வைத்த தயிரை சாப்பிடும்போது கவனம் தேவை

மழைக்காலத்தில் தயிர் சாப்பிட்டால் சளி பிடிப்பதற்கு தயிர் காரணம் அல்ல, நாம் அதைச் சாப்பிடும் முறைதான் காரணம். ஃபிரிட்ஜில் இருந்து எடுத்தவுடன், ரொம்ப சில்லென்று இருக்கும் தயிரை அப்படியே சாப்பிடும்போது தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டு, வறட்டு இருமல் வர வாய்ப்பு உள்ளது. ஃபிரிட்ஜில் இருந்து தயிரை எடுத்தவுடன் சாப்பிடாதீர்கள். கொஞ்ச நேரம் வெளியே வைத்து, சாதாரண வெப்பநிலைக்கு வந்த பிறகு சாப்பிடுவதுதான் உடம்புக்கு நல்லது

34
இரவு நேரத்தில் தயிர் சாப்பிடக் கூடாது, ஏன்?
Image Credit : Asianet News

இரவு நேரத்தில் தயிர் சாப்பிடக் கூடாது, ஏன்?

தயிர் உடம்புக்கு நல்லதுதான் என்றாலும், இரவு நேரத்தில் அதைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இரவில் நம் செரிமான மண்டலம் மெதுவாகத்தான் வேலை செய்யும். சிலருக்கு இரவில் தயிர் சரியாக செரிமானம் ஆகாது. அதுமட்டுமில்லாமல், தயிரில் இருக்கும் புளிப்புத் தன்மை சிலருக்கு நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

மழைக்காலத்திலும் நீங்கள் எந்தப் பயமும் இல்லாமல் தயிர் அல்லது ஐஸ்கிரீம் சாப்பிடலாம். ஆனால், அது ரொம்ப சில்லென்று இருக்கக் கூடாது. பகல் நேரத்தில், அளவாகச் சாப்பிட்டால் உடம்புக்கு எந்தப் பாதிப்பும் வராது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

44
மழைக்காலத்தில் தயிர் சாப்பிடும்போது இதை பண்ணுங்க‌
Image Credit : Asianet News

மழைக்காலத்தில் தயிர் சாப்பிடும்போது இதை பண்ணுங்க‌

மழைக்காலத்தில் தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று உங்களுக்குப் பயம் இருந்தால், தயிரில் ஒரு சிட்டிகை மிளகுத் தூள் அல்லது வறுத்த சீரகத் தூள் மற்றும் கொஞ்சம் உப்பு சேர்த்து சாப்பிடுங்கள். இது தயிரின் குளிர்ச்சியைக் கட்டுப்படுத்தி, செரிமானத்தையும் எளிதாக்கும்.

இவர்கள் மட்டும் கவனமாக இருப்பது நல்லது

சைனஸ், ஆஸ்துமா, அலர்ஜி அல்லது டான்சில் பிரச்சனை இருக்கிறவர்கள் மழைக்காலத்தில் ரொம்ப சில்லென்று இருக்கும் தயிர் மற்றும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது அவர்களுக்கு தொண்டை தொற்றை அதிகரிக்கலாம்.

தயிரை விட மோர் ரொம்ப நல்லது

மழைக்காலத்தில் தயிருக்குப் பதிலாக, அதில் தண்ணீர், இஞ்சி, கொத்தமல்லி மற்றும் பெருங்காயம் சேர்த்து நீர்த்த மோராகக் குடிப்பது செரிமான மண்டலத்துக்கு ரொம்பவே நல்லது.

ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள் இதைப் பண்ணுங்க..

மழைக்காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடலாம், ஆனால் அதிகமாகச் சாப்பிடக் கூடாது. ஐஸ்கிரீமில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், இது தற்காலிகமாக நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும். அதுமட்டுமில்லாமல் மழைக்காலத்தில் தொண்டை ரொம்ப சென்சிட்டிவாக இருக்கும். அதனால் ஐஸ்கிரீம் சாப்பிட்டவுடன் கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது நல்லது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஆரோக்கிய குறிப்புகள்
சுகாதார நன்மைகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kanadukathan Chettinad Homes : இது கிராமமா? அரண்மனைகளின் ஊரா? கானாடுகாத்தான் வீடுகளின் பின்னணியில் இருக்கும் ஆச்சரிய ரகசியம்!
Recommended image2
Fridge Power Usage: 24 மணி நேரமும் ஓடும் ஃப்ரிட்ஜ்! மாதம் எவ்வளவு மின்சாரச் செலவு தெரியுமா?
Recommended image3
Store Green Chillies: பச்சை மிளகாய் மாசக்கணக்கா ஃப்ரெஷ்ஷா இருக்கணுமா? இத பண்ணுங்க!
Related Stories
Recommended image1
Instant Curd: வெறும் 1 மணி நேரத்தில் கெட்டித் தயிர் ரெடி! செம கிரீமியான தயிர் வேண்டுமா? இதை செய்ங்க
Recommended image2
Fish and Curd: மீன் குழம்புடன் தயிர் சாப்பிடலாமா? பலரும் சொல்வது உண்மையா? தெரிஞ்சுக்கோங்க..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved