- Home
- Lifestyle
- Breast Feeding: உலக தாய்ப்பால் வாரம்: பாலூட்டும் தாய்மார்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய 8 விஷயங்கள்...
Breast Feeding: உலக தாய்ப்பால் வாரம்: பாலூட்டும் தாய்மார்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய 8 விஷயங்கள்...
Breast Feeding Week 2022: இன்றைய நவீன காலத்து இளம் தாய்மார்கள், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்.

breastfeeding
பிறந்த பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பாலை விட ஒரு சிறந்த உணவு இருக்க முடியாது. இதனால் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு, தாய்ப்பால் புகட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன் ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதிவரை ‘உலக தாய்ப்பால் வாரம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த வாரம் இன்றைய இளம் தாய்மார்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் குழந்தையை எப்படி கையில் ஏந்தி பால் புகட்ட வேண்டும் என்று தெரிந்து வைத்து கொள்வதுதான்.
breastfeeding
1. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தையை அணைத்து தாயின் உடலோடு ஒட்டி இருக்க செய்தால் வேண்டும். அப்போது தான் தாய்ப்பால் சுரப்பு சீராக இருக்கும். குழந்தையும் கவனமாக பசியாறக்கூடும்.
2. தாய்ப்பால் கொடுக்கும் போது, தாய் சரியான உணவை உட்கொள்வது அவசியம். அப்போது தான் உடல் ஆண்டியாக்சிடெண்ட் ஹார்மோனை வெளியிடுகிறது. இது குழந்தைகளின் ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், தாய் மற்றும் குழந்தையின் பிணைப்பையும் பலப்படுத்துகிறது.
breastfeeding
3. அதேபோன்று, பாலூட்டும் பெண்கள் காரமான, மசாலா பொருட்கள் சேர்த்த உணவை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிக காரமான உணவை சாப்பிட்டால், அந்த காரத்தன்மை பாலிலும் கலந்து குழந்தையின் மிருதுவான வயிற்றை பாதிக்கக்கூடும்.
4. பாலூட்டும் பெண்களுக்கு காபி குடிப்பது குழந்தைகளுக்கு வயிற்று வலி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே இது இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
breastfeeding
5. பாலூட்டும் அல்லது அல்லது கருவுற்ற பெண்கள் புகைப்படித்தல், மது அருந்துதல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், குழந்தைக்கு பல்வேறு வியாதிகளை உண்டு பண்ணும்.
6. புகைப்பிடிக்கும் தாய்மார்கள் ஊட்டும் தாய்பாலின் பாதிப்பு குழந்தைகளிடம் ஆரம்பகட்டத்தில் காண்பிப்பதில்லை என்ற போதிலும் குழந்தைகளின் 6 முல் 7 வயதுகளில் அவர்களின் அறிவாற்றல் திறமைகளை குறிவைத்து தாக்குகிறது
breastfeeding
7. கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு தாய்பால் தால் முக்கிய ஊட்டச்சத்து ஆகும். எனவே அந்த தாய்பாலையே விஷமாக மாற்றாமல் இருக்க பெண்கள் புகைப்பிடித்தல், குடிப்பழக்கங்களை கைவிடுதல் அவசியமாகிறது.
8. பாலூட்டும் தாய்மார்கள் கோதுமையால் செய்யப்படும் ரொட்டியை சாப்பிடக்கூடாது. ஏனெனில் கோதுமையில் குளூடன் என்ற புரதம் உள்ளது. இது பல சமயம் பச்சிளம் குழந்தைகளுக்கு பிரச்சனையை ஏற்படுத்துகிறது.