MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Breast Feeding Week 2022: உலக தாய்ப்பால் வாரம் 2022...இதன் வரலாறு என்ன? ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது

Breast Feeding Week 2022: உலக தாய்ப்பால் வாரம் 2022...இதன் வரலாறு என்ன? ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது

Breast Feeding: உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதிவரை கொண்டப்படுகிறது. ஏன் இது ஒவ்வொரு வருடமும், இவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதை தெரிந்து வைத்து கொள்வோம் வாருங்கள். 

2 Min read
Author : Anija Kannan
| Updated : Aug 01 2022, 12:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
breastfeeding

breastfeeding

ஆகஸ்டு மாதம் முதல் வாரம் உலக  தாய்ப்பால் வாரமாக அறிவித்து, ஆகஸ்டு 1 முதல் 7 ஆம் தேதி வரை தொடர்ந்து 7 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்காக இன்று முதல் வருகின்ற 7-ஆம் தேதிவரை விழிப்புணர்வு பிரச்சாரங்கள், நாடகங்கள், நிகழ்ச்சிகள் என தாய்ப்பாலின் மகிமைகளை, அவசியத்தை மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாக கொண்டப்படுகிறது. 


மேலும் படிக்க...Health Tips: காலையில் ஜில் தண்ணீரில் குளித்தால் இவ்வளவு நன்மைகளா? அடடே..இவ்வளவு நாள் தெரியாம போச்சே..?

25
breastfeeding

breastfeeding

உலக தாய்ப்பால் வாரம் வரலாறு அறிக..?

 ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு, தாய்ப்பால் புகட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன் உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச குழந்தைகள் நல அமைப்பு (UNICEF) 1990 இல் ஒரு ஆணையை உருவாக்கியது. அதன்படி 1992ஆம் ஆண்டு ’வேர்ல்டு அலையன்ஸ் பிரஸ்ட் அமைப்பால் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதிவரை ‘உலக தாய்ப்பால் வாரம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. ஆரம்பத்தில், சுமார் 70 நாடுகள் வாரத்தை நினைவுகூர்ந்து வந்த நிலையில், தற்போது 170 நாடுகளால் கொண்டாடப்படுகிறது.

35
breastfeeding

breastfeeding

உலக தாய்ப்பால் வாரம் முக்கியத்துவம்:

உலக சுகாதார அமைப்பு, தாய்ப்பால் கொடுப்பதன் நன்மைகள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தாய்மார்களுக்கும் சேர்த்து தான் என்கின்றது. தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு டைப் 2 நீரிழிவு, மனஅழுத்தம், மார்பகப்புற்றுநோய், கருப்பை புற்றுநோய் பாதிப்பு குறைவு. அதேபோன்று, தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியால், ஆஸ்துமா, ஒவ்வாமை, உடல்பருமன் போன்ற நோய்கள் எதுவும் ஏற்படாமல் இருக்கும் என்கின்றது. 

மேலும் படிக்க...Budhan Peyarchi: புதன் கன்னி ராசிக்கு பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு கஜகேசரி யோகம் ஆரம்பம்...உங்கள் ராசி என்ன..?

45
breastfeeding

breastfeeding

நன்மைகள்:

1. தாய்ப் பாலில் இருந்துதான் குழந்தைக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன. எனவே 6 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்கவேண்டும். தாய்ப்பாலை தவிர வேற எந்த செயற்கை உணவுகள் கொடுப்பது கெடுதலாகும்.

2. தாய்ப்பால் மூலம் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான கொழுப்பு, சர்க்கரை நீர், புரோட்டீன், மினரல் போன்ற சக்திகள் சரியான அளவில்  கிடைக்கிறது . மேலும், குழந்தைகளுக்கு நோய்த்தொற்றுகள், சுவாசக் கோளாறுகள் அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. 

55

உலக தாய்ப்பால் வாரம் கருப்பொருள் என்ன..?

உலக தாய்ப்பால் வாரத்திற்கான இந்த ஆண்டு கருப்பொருள் "தாய்ப்பால் கொடுப்போம் வாருங்கள் அறிவூட்டல் மற்றும் ஆதரவளித்தல்" என்ற பெயரில் நடைபெறுகிறது.  தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நெருக்கம் அதிகரிக்கிறது. குழந்தையை நெருக்கமாக வைத்திருப்பதன் மூலம் ஆக்ஸிடோசின் சுரக்கிறது.  இவை தாய், குழந்தை இருவரின் நலன் காக்க உதவுகிறது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
டாக்டர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved