- Home
- Lifestyle
- Health Tips: காலையில் ஜில் தண்ணீரில் குளித்தால் இவ்வளவு நன்மைகளா? அடடே..இவ்வளவு நாள் தெரியாம போச்சே..?
Health Tips: காலையில் ஜில் தண்ணீரில் குளித்தால் இவ்வளவு நன்மைகளா? அடடே..இவ்வளவு நாள் தெரியாம போச்சே..?
Health Tips: காலை எழுந்ததும் முதல் வேலையாய் குளிர்ந்த நீரில் குளிப்பதால் அந்த நாள் முழுக்க உங்களது மூளை சுறுசுறுப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Health Tips:
இரவு தூங்கி காலை எழுந்ததும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம் இருக்கும், சிலருக்கு காலையில் சூடாக காபி குடிப்பது, காபி, டீயை விட்டு விட்டுவிடுவது ஒருவருக்கு அவ்வளவு எளிதானது ஒன்றும் அல்ல, சிலருக்கு காபி, டீ, குடித்ததால் தான் வயிற்று கோளாறு சரியாகி, பாத்ரூம் போக முடியும் என்பவர். சிலரோ காபி, டீ குடித்தால் தான் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும் என்பர். சிலருக்கு உடற்பயிற்சி செய்வது, சிலருக்கு ஏதேனும் ஆரோக்கிய பானம் அருந்துவது. இப்படி ஒவ்வொருவருக்கும் காலை எழுந்ததும் ஒரு ஒரு பழக்கம் இருக்கும்.
Health Tips:
ஆனால், இவை அனைத்தையும் விட உங்களது உடலை மிகவும் சுறுசுறுப்பாகவும், உடலுக்கு நல்லதையும் தருவது என்னவென்றால் காலி நேரத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது தான். காலையில் குளிர்ந்த நீர் குளியல் டெஸ்டோஸ்டிரான் வெளியீட்டை தூண்டுவதன் மூலம் ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலையிலேயே குளிர்ந்த நீரில் குளிப்பது என்பது பெரும்பாலான நபர்களுக்கு பிடிக்காத ஒன்று, குளிர்ந்த நீரில் குளிப்பது நமக்கு உடல் சுறுசுறுப்பு ஏற்படுகிறது, நமது மெட்டபாலிசத்தை தூண்டுகிறது மற்றும் மன அமைதியையும் தருகிறது.
Health Tips:
குளிர்ந்த நீரில் குளிப்பதால் காலையில் நீங்கள் முழு ஆற்றலுடன் சுறுசுறுப்பாக செயல்படலாம், உடற்பயிற்சிகளிலிருந்து விரைவாக மீட்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. சூடான நீர் குளியல் தசைகளின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது. மற்றும் புண் தசைகளை தளர்த்த உதவுகிறது. இதுதவிர, மனநிலை மற்றும் மன உறுதியை மேம்படுத்த, நாள்பட்ட வலியைக் குறைக்கவும், மன அழுத்தத்தின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.
Health Tips:
மேலும், காலை நேர குளியல், உங்களது மூளையை விழிப்பாக இருக்க செய்கிறது. குறிப்பாக குளிர் காலங்களில் காலை நேரத்தில் கொஞ்சம் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதை தான் பலரும் விரும்புவார்கள், அந்த சமயத்தில் யாரும் குளிர்ந்த நீரில் குளிப்பதை விரும்பமாட்டார்கள். ஆனால், இது உங்கள் உடம்பில் நோயெதிர்ப்பு சக்தையை உண்டு பண்ணுகிறது, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.