கேரட் ஜூஸில் இந்த 1 பொருள் கலந்து குடிங்க.. நன்மைகள் இரண்டு மடங்காக கிடைக்கும்
கேரட் ஜூஸில் சில பொருட்களை கலந்து குடித்தால் ஆரோக்கிய நன்மைகளை இரட்டிப்பாக பெறலாம். அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

Carrot Juice Combinations
கேரட் சுவையான காய்கறி மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட. குறிப்பாக இது கண் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால் கண் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமல்லாமல், சருமம் பளபளப்பாகவும், பொலிவாகவும் இருக்கும்.
கேரட்டில் இதில் இருக்கும் நார்ச்சத்து சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். அதில் இருக்கும் கால்சியம் மற்றும் வைட்டமின் கே எலும்புகளை வலுவாக்கும். இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் தினமும் காலையில் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் அதனுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள 5 பொருட்களை கலந்து குடித்து வந்தால் இரட்டிப்பான நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்ன பொருட்கள் என்பதை இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
தேன்
கேரட் ஜூஸ் தயாரித்த பிறகு அதில் தேனில் இருக்கும் ஆன்டி-பாக்டரியல் பண்புகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
இஞ்சி :
ஒரு சின்ன இஞ்சித்துண்டை கேரட் ஜூஸ் தயாரிக்கும் போது சேர்த்தால், குடிப்பதற்கு சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், பல வைட்டமின்கள் கனிமச்சத்துக்கள் போன்றவைகள் கிடைக்கும். மேலும் செரிமானம் மற்றும் மெட்டாபாலிசம் மேம்படும், அலர்ஜி பிரச்சனை குறையும்.
ஆப்பிள் சாறு :
கேரட் ஜூஸில் ஆப்பிள் சாறு கலந்து குடித்தால் உடலை சுத்திகரிக்கும் மற்றும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதுதவிர இதய நோய், சர்க்கரை நோய், ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களின் அபாயத்தை குறைக்கும்.
ஆரஞ்சு சாறு :
வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆரஞ்சு பழத்தில் அதிகமாக உள்ளன. அவை இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைக்கும் மற்றும் அலர்ஜியை குறைக்கும். எனவே கேரட் ஜூஸ் தயாரித்த பிறகு அதில் சிறிதளவு ஆரஞ்சு சாற்றை கலந்து குடியுங்கள். இரட்டிப்பான நன்மைகளை பெறுவீர்கள்.
எலுமிச்சை சாறு :
ஆரஞ்சு பழத்தைப் போல எலுமிச்சை பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளன. கேரட் ஜூஸில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும், சரும ஆரோக்கியம் மேம்படும் மற்றும் உடலில் கொலாஜன் உற்பத்தி செய்யப்படும்.