இந்த '7' மூலிகைகள் போதும்.. உடல் எடையை கிடுகிடுவென குறைக்கும் சக்தி உண்டு!!
Ayurvedic Herbs For Weight Loss : உடல் எடையை வேகமாக குறைக்க ஆயுர்வேத மூலிகைகள் என்னென்ன மற்றும் அதை பயன்படுத்துவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
Ayurvedic Herbs For Weight Loss In Tamil
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோரை பாடாய்படுத்தும் ஒரு பெரிய பிரச்சனை எதுவென்றால் அதிக உடல் பருமன் தான். கடந்த சில வருடங்களாகவே இந்த பிரச்சனையானது மக்கள் மத்தியில் வேகமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியம் அற்ற உணவு முறையே.
அதிக உடல் எடையால் பலர் பலவிதமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். உதாரணமாக சர்க்கரை நோய், உயரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற கடுமையான நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றன.
Ayurvedic Herbs For Weight Loss In Tamil
அதிகரித்த உடல் எடையை குறைக்க பலரும் பலவிதமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் ஜிம்மிற்கு சென்று கடுமையான உடற்பயிற்சி செய்கிறார்கள். இன்னும் சிலரோ சாப்பிடும் உணவில் கட்டுக்கோப்பாக இருக்கிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில், இவற்றுடன் ஆயுர்வேதத்தில் இருக்கும் சில மூலிகைகளையும் எடுத்துக்கொண்டால் உடல் எடையை சுலபமாக குறைத்து விடலாம். அவை உடலில் இருக்கும் கலோரிகள் மற்றும் கெட்ட கொழுப்பை எரிக்கவும், கொழுப்பு கட்டிகளை குறைக்கவும், ஹார்மோன் சமநிலைப்படுத்தவும் போன்ற பல விஷயங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே, உடல் எடையை குறைக்க ஆயுர்வேத மூலிகைகள் என்னென்ன என்றும், அதை சாப்பிடுவது எப்படி என்றும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: இந்த மாதிரி செஞ்சு மட்டும் உடல் எடையை குறைக்காதீங்க!! உடம்பு மோசமாகிடும்!
Ayurvedic Herbs For Weight Loss In Tamil
உடல் எடையை குறைக்க உதவும் ஆயுர்வேத மூலிகைகள் :
1. வெந்தயம்
எடையை குறைப்பதில் வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்தி வயிறை நிரம்பி இருக்க வைக்கிறது. எனவே அதிக உணவு சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. இதனால் உடல் எடையும் கட்டுப்படுத்தப்படும். அதுபோல வெந்தயம் செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. ஆகையால் உடலில் கொழுப்புகள் ஏதும் தங்காமல் இருக்கவும், வளர்ச்சிதை மாற்றத்தின் விகிதத்தை அதிகரிக்கவும் இது உதவுகிறது. இது தவிர, இது சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும், கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது.
2. மிளகு
மிளகு உடல் எடையை குறைக்க உதவுகிறது. எப்படியெனில், இதை சாப்பிடுவதன் மூலம் உடலில் இருக்கும் கலோரிகள் சீக்கிரமாகவே கரைய ஆரம்பிக்கும். இது தவிர, இது செரிமான சக்தியை அதிகரிக்க உதவுவதால் பசியும் கட்டுப்படுத்தும். இதன் மூலம் உடல் எடையை சுலபமாக குறையும்.
Ayurvedic Herbs For Weight Loss In Tamil
3. அஸ்வகந்தா
ஆயுர்வேதத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது இது பல அருகே நன்மைகளை நமக்கு வாரி வழங்குகிறது. இதில் பாக்டீரியா எதிர்ப்பு, அலர்ஜி எதிர்ப்பு, வலி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் உள்ளது. அவை மன அழுத்தம் மற்றும் உடல் எடையை குறைக்கும்.
4. திரிபலா
திரிபலா என்பது நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகியவற்றின் கலவையாகும். இது உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, செரிமான அமைப்பை சுத்தப்படுத்தி ஆரோக்கியமான எடை இழப்புக்கு உதவுகிறது. இது தவிர இது அஜீரணம் மலச்சிக்கல் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளை தீர்க்கவும் உதவுகிறது.
5. கடுக்காய்
உடல் எடையை இயற்கையான வழியில் குறைக்க நினைப்பவர்களுக்கு கடுக்காய் ரொம்பவே நல்லது. கடுக்காய் குடலை சுத்தப்படுத்தவும், வயிற்று பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகிறது. இதன் மூலம் உடல் எடையை மிக விரைவாக குறைக்க முடியும்.
Ayurvedic Herbs For Weight Loss In Tamil
6. சுக்கு
சுக்கு செரிமானம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும் ஒரு சக்தி வாய்ந்த ஆயுர்வேத மூலிகை என்று சொல்லலாம். இதில் இருக்கும் பண்புகள் கெட்ட கொழுப்பை எரிக்க பெரிதும் உதவுகிறது. இது தவிர இதில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் செரிமான அசெளகரியத்தை குறைத்து, முழு உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
7. நெல்லிக்காய்
நெல்லிக்காய் வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகியவற்றை சமன் செய்து உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது மற்றும் உடலுக்கு புத்துணர்ச்சியையும் வழங்குகின்றது. எனவே இதை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதோடு மட்டுமின்றி முடி உதிர்தல், சர்க்கரை நோய் மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளைத் தீர்க்கும்.
இதையும் படிங்க: வேகமா தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த ஜூஸை குடிங்க!