தினமும் சாப்பாட்டில் கொஞ்சம் கருப்பு மிளகு சேர்த்தால்.. உங்க உடலில் தானாக இந்த அற்புதங்கள் நடக்கும்..
Black Pepper: கருப்பு மிளகில் நம்ப முடியாத பல மருத்துவ குணங்கள் உள்ளன.
கருப்பு மிளகு குறைவான கலோரிகள் கொண்டது. தாதுக்கள், வைட்டமின்கள், நல்ல கொழுப்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவை நிரம்பி காணப்படுகின்றன. நாள்தோறும் உணவில் இதை சேர்ப்பதால் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
கருப்பு மிளகு நம்முடைய செரிமானத்திற்கு ரொம்பவே உதவி செய்கிறது. நம் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை மிளகும் வெளியிடுகிறது. இதனால் நாம் உண்ணும் புரதங்கள் உடையும். இதனால் குடல் சுத்தமாகிறது. இதனால் பல இரைப்பை, குடல் சார்ந்த நோய்களிலிருந்து தற்காத்து கொள்ளலாம்.
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் கருப்பு மிளகை உணவில் சேர்க்க வேண்டும். இப்படி மிளகுத்தூளை உணவில் சேர்ப்பதால் எல்லா சிக்கலும் தீரும். கருப்பு மிளகை கிரீன் டீயில் போட்டு அருந்தலாம். தினமும் இப்படி அருந்துவதால் எடை இழப்புக்கு உதவும்.
கருப்பு மிளகு கீல்வாதத்தைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. மூட்டு, முதுகெலும்பில் வலி இருப்பவர்கள் உண்ணலாம். வலி நிவாரணியாக கூட செயல்படும். நீரிழிவு நோயாளிகள் உணவில் கண்டிப்பாக கருப்பு மிளகு தூவி உண்ணலாம். இது நல்ல பலனை தரும்.
இதையும் படிங்க: வெறும் வயிற்றில் தினமும் துளசி சாறு.. சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க துளசியை இப்படி யூஸ் பண்ணனும்..
சளி தொந்தரவுக்கு கருப்பு மிளகு நல்ல தீர்வாக இருக்கும். தினமும் கருப்பு மிளகு சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையும். இதில் உள்ள நார்ச்சத்து உடலுக்கு நல்லதும் கூட. தினம் கருப்பு மிளகை தின்றால் மூளையை செயல்பாட்டை மேம்படுத்தும். வயதாவதால் வரும் பிரச்சனைகளான மறதி, அல்சைமர், மூளைக்கோளாறுகள் வராமல் தடுக்க வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: நீற்றுப்பூசணியின் நிகரில்லாத மருத்துவ நன்மைகள்..!