- Home
- Lifestyle
- Nighttime Bathing : நீங்க இரவில் குளிக்கும் நபரா? நிபுணர்கள் சொல்ற இந்த விஷயம் தெரியுமா??
Nighttime Bathing : நீங்க இரவில் குளிக்கும் நபரா? நிபுணர்கள் சொல்ற இந்த விஷயம் தெரியுமா??
தினமும் இரவில் குளிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்

Bath Before Bed
குளியல் என்பது வெறும் சுத்தம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. உடல் மற்றும் மனதின் சோர்வை கிட்டத்தட்ட பாதி அளவாக குறைக்கும் ஒரு தினசரி வழக்கமாகும். பலர் காலையில் மட்டும் குளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இன்னும் சிலரோ காலை மட்டுமல்ல, இரவு தூங்க செல்லுவதற்கு முன்பும் குளிப்பதை பழக்கமாக வைத்துள்ளனர். இரவு தூங்க செல்வதற்கு முன் குளிப்பது உண்மையில் நல்லதா? அதனால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இரவு தூங்கும் முன் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் :
- இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன் குளிப்பது மனதை அமைதிப்படுத்தி, நன்றாக தூங்குவதற்கு உதவும். எனவே உடல் சோர்வு தூக்கமின்மை பிரச்சனைகள் அவதிப்படுபவர்கள் தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன் குடியுங்கள்.
- தினமும் இரவு குளித்து வந்தால் சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக சரும பாதிப்புகளை நீக்கி சருமத்தை பொலிவாக்க உதவும்.
- தூங்கு செல்வதற்கு முன் குளித்தால் உடலில் ரத்த ஓட்டம் சீராக நடக்கும். மேலும் மனதை புத்துணர்ச்சி அடைய வைக்கும்.
- இரவு தூங்கும் முன் சூடான நீரில் குளித்தால் உடல் மற்றும் தசை சோர்வுகளை ரிலாக்ஸ் ஆக வைக்கும்.
இரவு தூங்கும் முன் குளிப்பதால் கிடைக்கும் தீமைகள் :
- இரவில் மிக அதிக சூடான அல்லது குளிர்ந்த நீரில் குளிப்பது சிலருக்கு உடல்நிலை பாதிப்புகளை ஏற்படுத்தும்.
- நள்ளிரவில் குளிப்பது பக்கவாதம், மாரடைப்பு போன்ற கடுமையான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.
- அதிக தாமதமாக குளித்தால் சளி, இருமல், தலைவலி, தலை சுற்றல் போன்ற உடல்நல பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
- இரவு குளியல் மூட்டு வலி, வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
- சிலருக்கு இரவு நேரத்தில் குளித்தால் இதயத்துடிப்பு இரத்த ஓட்டம் பாதிப்படையும்.
- சில சமயங்களில் இரவு குளியல் பழக்கத்தால் சிலரது உடலில் வளர்ச்சிதை மாற்றம் பாதிக்கப்படும்.
நினைவில் கொள் :
நீங்கள் இரவு நேரத்தில் குளிக்க விரும்பினால் படுக்கைக்கு செல்வதற்கு சுமார் 2-3 மணி நேரத்திற்கு முன்னதாக குளிப்பது தான் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஏனெனில் இரவு நேரத்தில் குளிப்பது சில சமயங்களில் பாதகமான விளைவை ஏற்படுத்தும். எனவே இந்த முறையில் குளித்தால் பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

