- Home
- Lifestyle
- Winter Bathing Tips : சாதாரண நீர் vs வெந்நீர் : குளிர்காலத்தில் எதில் குளித்தால் நல்லது தெரியுமா?
Winter Bathing Tips : சாதாரண நீர் vs வெந்நீர் : குளிர்காலத்தில் எதில் குளித்தால் நல்லது தெரியுமா?
குளிர்காலத்தில் ஆரோக்கியத்திற்கு எது உண்மையிலே நல்லது? சுடு தண்ணீர் குளியலா அல்லது பச்ச தண்ணீர் குளியலா என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

Winter Bathing Tips
குளிர்காலம் ஆரம்பமாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் பனியின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். ஏனெனில் இந்த சீசனில் தான் வைரஸ்கள், பாக்டீரியா தொற்றுகள் மிக வேகமாக பரவி டெங்கு, மலேரியா போன்ற நோய்களை ஏற்படுத்தும். ஆகவே கை கால்களை எப்போதும் சுத்தமாக கழுவி வைத்திருக்க வேண்டும். காலை, மாலை என இரண்டு வேளையும் குளிக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், குளிர் காலத்தில் சுடு தண்ணீர் குளியலா அல்லது பச்ச தண்ணீர் குளியலா? எந்த தண்ணீரில் குளிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது தான் தற்போது பலரது கேள்வி. இதற்கான பதிலை இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
குளிர்காலத்தில் வெந்நீரில் குளியல் ஏன் சிறந்தது?
குளிர்காலத்தில் சூடான நீரில் குளிப்பது தான் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. ஏனெனில் இதுதான் உடலுக்கு தேவையான சூட்டை வழங்கும், நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைக்க பெரிதும் உதவும். ஆனால் சூடான நீரை நேரடியாக தலைக்கு ஊற்றுவது ஆபத்தாக முடியும். மேலும் அதிக சூட்டில் குளித்தால் சருமமும் வறண்டு போகும். இதனால் உடலில் இருக்கும் இயற்கையான எண்ணெய் அகன்று விடும்.
குளிர்காலத்தில் ஏன் சாதாரண நீரில் குளிக்க கூடாது?
குளிர்காலத்தில் சாதாரண நீரில் குளிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இந்த நீரில் குளிப்பது குளிர்காலத்தில் குளிர்ச்சியை மேலும் அதிகரிக்கும். இதனால் இரத்த நாளங்கள் சுருங்கி இரத்த அழுத்தம், இதயத்துடிப்பில் திடீர் அதிகரிப்பு போன்ற உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதுவும் குறிப்பாக இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சூடான நீர் குளியல் :
குளிர்காலத்தில் சூடான நீர் குளிப்பதற்கு சிறந்த வழியாகும். ஆனால் அதிக சூடான நீரில் குளிக்க கூடாது. சூடான நீர் குளியலானது உடல் சோர்வை நீக்கும், சருமத்தை ஈரப்பதுடன் வைத்திருக்கும், உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் தசைகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.