- Home
- Lifestyle
- புது வீட்டுக்கு போக போறீங்களா? கொஞ்சம் இருங்க அதுக்கு முன்னால இந்த 3 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!!
புது வீட்டுக்கு போக போறீங்களா? கொஞ்சம் இருங்க அதுக்கு முன்னால இந்த 3 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!!
புதிய வீட்டுக்கு செல்லும் முன்பாக பின்பற்ற வேண்டிய 3 விஷயங்களை இங்கு காணலாம்.

புதிய வீட்டிற்கு மாறுவதற்கான அவசரத்தில், மக்கள் பெரும்பாலும் சில வேலைகளைச் செய்ய மறந்துவிடுகிறார்கள் அல்லது சில விஷயங்களைக் கவனிக்காமல் இருப்பார்கள், இதன் காரணமாக அவர்கள் பின்னர் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் ஒரு புதிய வீட்டிற்கு மாறப் போகிறீர்கள் என்றால், புதிய வீட்டிற்கு மாறுவதற்கு முன் நீங்கள் என்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்வோம்.
பேக் செய்ய டிப்ஸ்:
வீட்டிற்கு மாறுவதற்கு முன், பொருட்களை பேக் செய்வது கடினமான வேலை. பொருட்களை பேக் செய்யும் போது மக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். பொருட்களை பேக் செய்யும் போது, அனைத்து பெட்டிகளிலும் பொருட்கள் எவை என தெளிவாக குறிக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.
உதாரணமாக, சமையலறை பொருட்கள் இருந்தால், பெட்டியில் சமையலறை என்று எழுதுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், புதிய வீட்டில் பெட்டியைத் திறக்கும் போது குழப்பம் ஏற்படாது, பொருட்களை விரைவாக எடுத்து அடுக்கிவிடலாம்.
பேக்கிங்:
பெரும்பாலும் புதிய வீட்டிற்கு பொருட்களைக் கொண்டு வந்து ஏனோதானோ என கிடக்கும் வகையில் வைத்திருப்பார்கள். நீங்கள் பொருட்களை ஒழுங்கான முறையில் ஒரு இடத்தில் வைத்திருக்க வேண்டும். பின்னர் படிப்படியாக உங்கள் வீட்டில் அனைத்து பொருட்களையும் அடுக்கி வைக்க வேண்டும். இப்படிச் செய்வதால் வீடு அழகாக இருக்கும். புதிய வீட்டில் ஏதேனும் வேலைகள் செய்ய வேண்டியிருந்தால், முதலில் அந்த வேலைகளை முடித்துவிடுங்கள். புதிய வீட்டிற்குள் குடியேறுவதற்கு முன், அனைத்து வேலைகளையும் முடிக்க வேண்டும். பேக்கிங் செய்யும் பெட்டிகள் நல்ல தரமானதாகவும், வலுவானதாகவும் இருக்க வேண்டும். அப்போது பொருள்கள் கீழே விழாது. சேதமடையாது. கண்ணாடி பொருள்களை தனிக்கவனமெடுத்து அடுக்கி வையுங்கள். அவசியமான பொருள்களை முன்னதாகவே பேக் செய்து அட்டை பெட்டியின் மீது பெயர் ஒட்டிவிடுங்கள்.
இதையும் படிங்க: பணம் பெருக!! உங்க வீட்டில் படிகாரம் வச்சு பாருங்க.. எப்படி பண மழை பொழியும் தெரியுமா?
சுத்தம்:
புதிய வீட்டிற்கு மாறும் முன்பாக நீங்கள் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். பொருட்களை இடம் மாற்றும்போது, சுத்தம் செய்வதில் அதிக சிரமம் ஏற்படும். ஆகவே புதிய வீட்டை முன்கூட்டியே சுத்தம் செய்துவிட்டால் வேலை சுலபமாகும். இதன் பின்னர் வீடு மாறும்போது ரொம்ப அழுக்காகத் தெரியாது. முதல் நாளிலே புதிய வீட்டிற்கு அழகான தோற்றம் கிடைக்க மெனகெட வேண்டாம். மெதுவாக எல்லா பொருள்களையும் ஒழுங்குபடுத்துங்கள்.
இதையும் படிங்க: இந்தப் பூச்செடிகளை வீட்டில் வைத்தால் பணம் மழை பொழியும்!!