- Home
- Lifestyle
- Health Alert: பாகற்காயுடன் சேர்த்து சாப்பிட கூடாத சில உணவுகள்..தெரியாமல் கூட தொடவே கூடாதாம்..
Health Alert: பாகற்காயுடன் சேர்த்து சாப்பிட கூடாத சில உணவுகள்..தெரியாமல் கூட தொடவே கூடாதாம்..
Pagarkai: Health Alert: பாகற்காய் நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அருமருந்து ஆகும். ஆனால், பாகற்காயுடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Pagarkai: Health Alert:
பாகற்காய் உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும். ஆனால், பாகற்காயில் இருக்கும், கசப்பு சுவை கருதி பெரும்பாலானோர், தங்கள் உணவில் சேர்த்து கொள்வதில்லை. ஆனால், இதில் பல்வேறு மருத்துவ குணம் நிறைந்துள்ளது. ஆம் குறிப்பாக, பாகற்காய் நீரிழிவு, மலச்சிக்கல், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பல நோயாளிகளுக்கு அருமருந்து எனலாம்.
Pagarkai: Health Alert:
ஆனால், பாகற்காய் சாப்பிட்ட பிறகு, சிலவற்றை சாப்பிடாமல் இருப்பது நல்லது. இல்லையென்றால், உடல் நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பாகற்காய் சாப்பிட்ட பிறகு என்னென்ன பொருட்களை உட்கொள்ளக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.
பாகற்காய் சாப்பிட்ட பிறகு எடுத்துக் கொள்ளக் கூடாத உணவுகள்:
Pagarkai: Health Alert:
பால்:
பாகற்காய் சாப்பிட்ட பிறகு, பாலை மறந்தும் எடுத்துக் கொள்ளக் கூடாது. இது உங்களுக்கு பல்வேறு உடல் நலம் தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும். ஆம், பாகற்காய் சாப்பிட்ட பிறகு பால் குடிப்பதால், மலச்சிக்கல், வயிற்று வலி மற்றும் வயிற்றில் எரியும் உணர்வு ஏற்படும். எனவே, ஒருவர் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்..
Pagarkai: Health Alert:
முள்ளங்கி:
பாகற்காய் சாப்பிட்ட பிறகு, முள்ளங்கி சாப்பிடும் போது, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு, சீறுநீரக செயலிழப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். ஏனென்றால் முள்ளங்கி மற்றும் பாகற்காய் எதிர் எதிர் தன்மை கொண்டவை . அதனால் தொண்டையில் அமிலத்தன்மை மற்றும் சளி பாதிப்பு ஏற்படலாம். எனவே, பாகற்காய் சாப்பிட்ட பிறகு, முள்ளங்கியைத் தவிர்க்க வேண்டும்.
Pagarkai: Health Alert:
தயிர்:
பாகற்காய் சாப்பிட்ட பிறகு, தயிர் சாப்பிட கூடாது. ஆனால் பாகற்காய் காய்கறியுடன் தயிரை உட்கொண்டால், நீங்கள் பல உடல் நல பிரச்சனைகளுக்கு ஆளாகலாம். மேலும், தயிர் எடுத்துக்கொள்வது கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தினமும் பாகற்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மறுபுறம், உங்களுக்கு கல்லீரல் தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருந்தால், பாகற்காய் தொடவே கூடாது.