MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • அடிக்கடி தலைவலி தைலம் தடவினால் நல்லதா? கெட்டதா? உண்மை என்ன? 

அடிக்கடி தலைவலி தைலம் தடவினால் நல்லதா? கெட்டதா? உண்மை என்ன? 

Thailam For Headaches : தலைவலியில் இருந்து நிவாரணம் பெற அடிக்கடி தைலம் பயன்படுத்துபவரா நீங்கள்? அப்படியானால் இந்த பதிவை முழுவதும் படியுங்கள்.  

3 Min read
Author : Kalai Selvi
Published : Sep 11 2024, 07:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Thailam For Headaches In Tamil

Thailam For Headaches In Tamil

தலைவலி வந்தால் எந்த வேலையும் செய்ய முடியாது. தலைக்குள் வினோதமான உணர்வு ஏற்படுவது போல் இருக்கும். தலைவலியை உடனே சரி செய்தால் போதும் என தோன்றும். அதற்காக எல்லோரும் உடனடியாக நாடும் ஒரே தீர்வு தைலம் தான். 

தலைவலி பலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனையாகும். தலைவலி ஏற்பட மன அழுத்தம், நீரிழப்பு, சரியாக சாப்பிடாதது உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கும். தலைவலிக்கு காரணங்கள் எதுவாக இருந்தாலும் பெரும்பாலான மக்கள் நாடுவது தைலம் தேய்க்கும் ஒரே தீர்வு தான். இப்படி தைலம் தேய்ப்பது பலருக்கு ஒரு பழக்கமாகவே மாறி இருக்கும். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Thailam For Headaches In Tamil

Thailam For Headaches In Tamil

சிலருக்கு தைலம் இல்லாமல் ஒரு வேலையும் ஓடாது.  தைலத்தின் வாசனையால் தினமும் உறங்குபவர்களும் உண்டு. இந்தியாவைப் பொறுத்தவரை பலருக்கு இரவில் தைல வாசனையில்லாமல் உறக்கம் என்பது துளியும் வராது. தலைவலி மட்டுமல்லாது உடல் வலிக்கும் சிலர் தைலத்தை பயன்படுத்துகின்றனர். இப்படி தைலத்தால் மட்டும் தலைவலியை கட்டுக்குள் கொண்டு வருவது சரியா? தலைவலிக்கு தைலம் தடவுவது நல்லதா? என்பதை இந்த பதிவில் காணலாம். 

இதையும் படிங்க: காலையில் தலைவலியுடன் எழுந்திருக்கிறீர்களா? அதற்கு என்ன காரணம்? எப்படி சரிசெய்வது?

36
Thailam For Headaches In Tamil

Thailam For Headaches In Tamil

தைலம் பயன்கள்: 

கடுமையான தலைவலியால் அவதிப்படும்போது தைலம் உடனடியாக பலன் தரும். பொதுவாக இந்தியாவில் கிடைக்கும் தைலங்கள் வலிக்கான நிவாரணியாக விளங்குகின்றன. தலைவலியை மட்டுமின்றி தசை பிடிப்பையும் குணப்படுத்தும் உட்பொருள்கள் தைலத்தில் காணப்படுகின்றன. 

கடுமையான தலைவலிக்கு தைலத்தை பயன்படுத்தும் போது நன்கு மசாஜ் செய்வோம். இதனால் தசைகளின் இறுக்கம் தளர்கிறது. இதனால் ரத்த ஓட்டமும் சீராகிறது. இதன் காரணமாக அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைத்து தலைவலி குறைகிறது. 

பொதுவாக தலைவலி தைலங்கள் வாசனையுடன் தயாரிக்கப்படுகின்றன. இந்த நறுமணம் மனதை தளர்வடைய செய்கிறது. மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலி குறைய தைலங்கள் இவ்வாறாக உதவுகின்றன. போதுமான உறக்கமின்மை காரணத்தினால் சிலருக்கு தலைவலி ஏற்படும். இரவில் தைலத்தை நுகர்ந்து பார்ப்பதால் நன்றாக தூக்கம் வரும். தூக்கமின்மை பிரச்சனைக்கு தலைவலி தைலம் தீர்வாக உள்ளது. 

46
Thailam For Headaches In Tamil

Thailam For Headaches In Tamil

தைலம் பக்க விளைவுகள்: 

தைலம் தலைவலியிலிருந்து தற்காலிக விடுதலை அளித்தாலும், இதனால் சில பக்க விளைவுகளும் ஏற்படும். தைலங்களில் தயாரிக்கும்போது பயன்படுத்தும் சில பொருள்கள் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இதனை சருமத்தில் தடவும் போது அரிப்பு, வீக்கம், முகப்பருக்கள்  ஆகிய பிரச்சனைகள் ஏற்படும். சிலருக்கு தோல் பிரச்சனைகள் தீவிரமாகலாம்.  

நீங்கள் தலையில் தைலம் தடவும் போது உங்களை அறியாமல் கண்களை தைலம் படுவதால் கண்களில் எரிச்சல் ஏற்படும். சில நேரம் தைலத்தை தலையில் தடவும் போது தலைமுடியில் படுகிறது. இப்படி படுவதால் முடி உதிர்வை ஏற்படுத்தக் கூடியவை. தலைவலி தைலத்தை பயன்படுத்துவதால் சில நிமிடங்கள் தலைவலியில் இருந்து விடுதலை பெறலாம். ஆனால் உண்மையாகவே தலைவலி எந்த காரணத்திற்காக வந்ததோ அதை சரி செய்யாமல் தலைவலியை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. அதை சரி செய்யும் ஆற்றலும் தைலத்திற்கு கிடையாது. 

56
Thailam For Headaches In Tamil

Thailam For Headaches In Tamil

அடிக்கடி தைலத்தை பயன்படுத்தினால் அது சரும  பிரச்சனையாக வந்து நிற்கும். முகத்தில் உள்ள தோல் உடலின் மற்ற பகுதியில் உள்ள தோலைவிட உணர்திறன் அதிகம் கொண்டது. ஆகவே தைலம் அடிக்கடி  தேய்க்காமல் இருப்பதே சருமத்திற்கு நல்லது. 

தைலம் சில வகை மூலிகைகள் அடங்கியது. இது தலைவலியை குறுகிய காலம் குணப்படுத்தக் கூடிய தற்காலிக தீர்வு. இதில் உள்ள கற்பூரம்(camphor), மெந்தால் (menthol), யூக்லிப்டஸ் (eucalyptus) போன்றவை வலியிலிருந்து நிவாரணம் தருகின்றன. ஆனால் இதனை நீண்ட காலமாக பயன்படுத்துவது நல்ல தீர்வு அல்ல. தொடர்ச்சியான தலைவலிக்கு மருத்துவரை அணுகவேண்டும்.

இதையும் படிங்க:  Exercise செய்த பிறகு தலைவலி வருதா..? காரணம் இதுதாங்க..!

66
Thailam For Headaches In Tamil

Thailam For Headaches In Tamil

சிலருக்கு வெறும் தலைவலி வராமல் அதனுடன் வாந்தி, காய்ச்சல் உள்ளிட்ட சுகவீனங்களும் வரும். இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அவர் பரிந்துரையின்றி தைலமோ மற்ற மருந்துகளோ பயன்படுத்த வேண்டாம். நீங்கள் ஒவ்வொரு முறை தைலம் பயன்படுத்தும் போதும் உங்களுக்கு தலைவலியில் இருந்து தற்காலிக தீர்வு கிடைக்கும்.  அதற்காக தலைவலி வந்தால் தைலம் மட்டுமே பயன்படுத்துவது நல்லதல்ல. 

நல்ல தூக்கம், ஆரோக்கியமான உணவு, வாழ்க்கை முறை மாற்றம், நல்ல இசை, மகிழ்ச்சியான மனநிலை போன்றவை உங்களை தலைவலியிலிருந்து தள்ளி வைக்கும். ஆகவே தினமும் தியானம், உடற்பயிற்சி போன்றவை செய்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள். தலைவலியில் இருந்து விடுதலை பெறுங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
(37.2 ov)121/3
SLSL
98
Day 1
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
15th T20 • WBBLT20
Result
SS-WSS-W
162/2
ST-WST-W
158
Sydney Sixers Women Won by 9 runs (D/L) method
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Shoe Cleaning Tips: வாஷிங் மெஷினில் ஷூ துவைக்கிறீங்களா? இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க!
Recommended image2
மணிக்கணக்கில் மொபைல் பார்ப்பவர்களா நீங்க? கண் பாதிப்பை தடுக்க மருத்துவர்கள் தரும் முக்கிய டிப்ஸ்!
Recommended image3
Healthy Idli Recipe: வெறும் அரிசி, உளுந்துல இட்லி செய்யாதீங்க; இந்த 5 பொருளை சேர்த்தா செம ஹெல்தி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved