அவசர காலை உணவுக்கு ஏற்றது ''தயிர் சாண்ட்விச்''! - ஸ்பீடா செஞ்சு சாப்பிட்டு போயிட்டே இருக்கலாம்!!
வேலை நேரங்களில் பசியைக் போக்க சாண்ட்விச் சாப்பிடுகிறீர்கள் என்றால் இந்த தயிர் பிரட் சாண்ட்விச் உங்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும்.
பிறகு மற்றொரு கிண்ணத்தில் தண்ணீர் நீக்கப்பட்ட கட்டித் தயிர், சோளம், முட்டைக்கோஸ், கேரட், குடை மிளகாய் என அனைத்தையும் நன்றாக சேர்த்து கலக்கவும். அதன்பிறகு அதில் தேவையாள அளவு தூள் சர்க்கரை, உப்பு மற்றும் மிளகு பொடியை தூவி ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும்.
அதன் பிறகு பிரட் ரொட்டியின் ஓரங்களை வெட்டிவிட்டு தயாரித்து வைத்துள்ள கலவையை ஒரு ரொட்டியின் மேற்பரப்பில் சமமாக பரப்பவும். அதன் பிறகு அந்த தயிர்க் கலவையை மற்றொரு பிரட் ரொட்டி துண்டைக் கொண்டு மூடவும்.
பிரட்டை டோஸ்ட் செய்து சாப்பிட நினைப்பவர்கள், கலவையைக் கலக்கும் முன்பே, ரொட்டியை தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ரத்த சோகையை போக்கும் ''சோளம் சுகியன்''! - எளிதாக சமைக்கலாம் வாங்க!!
பின்னர், முன்பு செய்தது போலவே கலவையை பிரட்டின் இடையே பரப்பி விடவும்.இப்போது சுவையான தயிர் சாண்ட்விச் ரெடி. இந்த ஆரோக்கியமான உணவை எளிதாக செய்யலாம். காலை உணவுக்கு ஏற்றது.