MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ரத்தக் குழாய்கள சுத்தப்படுத்துற இந்த '7' பழங்கள்ல மட்டும் அடிக்கடி சாப்பிட்டா "மாரடைப்பு' வரவே வராது!!

ரத்தக் குழாய்கள சுத்தப்படுத்துற இந்த '7' பழங்கள்ல மட்டும் அடிக்கடி சாப்பிட்டா "மாரடைப்பு' வரவே வராது!!

Heart Healthy Fruits : இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒருசில பழங்கள் பற்றி இங்கு நாம் பார்க்கலாம்.

3 Min read
Author : Kalai Selvi
| Updated : Oct 07 2024, 10:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Heart Healthy Fruits In Tamil

Heart Healthy Fruits In Tamil

ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு அவனது உடலில் இருக்கும் முக்கியமான உறுப்பு எதுவென்றால் அது இதயம் தான். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். அந்தவகையில், இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை மாரடைப்பால் இருப்போரின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. 

இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன், ரத்த கொதிப்பு, ரத்த கொழுப்பு ரத்த சர்க்கரை போன்றவை ஆகும். அதிலும் குறிப்பாக இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் கெட்ட கொழுப்புகள் படிந்து ரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்துவதால் மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணமாகிறது. இப்படி ரத்தக்குழாயில் கெட்ட கொழுப்புகள் தங்குவதற்கு முக்கிய காரணம் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதும் தான்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Heart Healthy Fruits In Tamil

Heart Healthy Fruits In Tamil

இப்படி இரத்தக் குழாயில் படிந்து இருக்கும் கெட்ட கொழுப்புகளை சில பழங்களை சாப்பிடுவதன் மூலம் அவற்றை சுலபமாக அகற்றி விடலாம். ஆம், உண்மையில் தினமும் நாம் ஒரு சில பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். இதனால் ரத்தக்குழாய் சுத்தமாக இருக்கும். மாரடைப்பு வரும் அபாயத்தையும் மிகவும் எளிதாக தடுத்து விடலாம்.

அந்த வகையில் இப்போது இந்த பதிவு இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒருசில பழங்கள் பற்றி இங்கு நாம் பார்க்கலாம். அவை..

இதையும் படிங்க:  இதய நோயாளிகளுக்கு சிறந்த சமையல் எண்ணெய்கள் இவை தான்!

35
Heart Healthy Fruits In Tamil

Heart Healthy Fruits In Tamil

இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் பழங்கள் :

1. ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வாருங்கள் என்று மருத்துவர்கள் அடிக்கடி சொல்லுவதை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆம் உண்மையில்,தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால்களின் அளவு குறைந்து மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை தடுக்கும். எனவே மாரடைப்பு வரக்கூடாதெனில், தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள்.

2. கொய்யா

கொய்யாவில் ஆப்பிளிக்கு இணையான சத்துக்கள் உள்ளன. இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் இதயத்திற்கு செல்லும் தமனிகளில் பிளேக்குகள் தடுக்க பெரிதும் உதவுகின்றது. எனவே மாரடைப்பு வரக்கூடாது என்று நீங்கள் நினைத்தால் தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வாருங்கள்.

இதையும் படிங்க:  "இதயத்தை பாதிக்கும் பேராபத்து" 40 வயதை கடந்த ஆண்கள் கட்டாயம் கவனிக்கணும் - உங்கள் உடலே கொடுக்கும் அலர்ட்!

45
Heart Healthy Fruits In Tamil

Heart Healthy Fruits In Tamil

3. மாதுளை

மாதுளை பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பது மட்டுமின்றி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர கெட்ட கொலஸ்ட்ராலின் அளவையும் குறைக்க பெரிதும் உதவுகின்றது. ஆகவே, தினமும் ஒரு மாதுளை சாப்பிட்டு வந்தால் இதயம் வலுவாக இருக்கும். முயற்சி செய்துதான் பாருங்களேன்.

4.  ஆரஞ்சு

ஆரஞ்சு சிட்ரஸ் பழங்களில் ஒன்றாகும். இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்களும் உள்ளன. இவை இரண்டும் இதயத்திற்கு செல்லும் தமனிகளில் பிளேக்குகள் உருவாவதை தடுப்பது மட்டுமின்றி, கெட்ட கொலஸ்ட்ரால் அளவையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க உதவுகின்றது. ஆகவே உங்களால் முடிந்த அளவுக்கு ஆரஞ்சு பழங்களை அவ்வப்போது வாங்கி சாப்பிடுங்கள்.

5. திராட்சை

திராட்சையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகமாகவே உள்ளன. நீங்கள் திராட்சையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு அபாயத்தை தடுக்கலாம்.

55
Heart Healthy Fruits In Tamil

Heart Healthy Fruits In Tamil

6. பெர்ரி

ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி என பெர்ரி பழங்களில் பல வகைகள் உள்ளன. இவை அனைத்திலும் ஆன்ட்டி ஆக்ஸடென்ட்கள் அதிகமாகவே உள்ளது. இது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும், ரத்தக்குழாய்களில் பிளேக்குகள் உருவாவதை தடுக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே உங்களால் முடிந்தால் அவ்வப்போது பெர்ரி பழங்களை வாங்கி சாப்பிடுங்கள்.

7. பப்பாளி

அனைத்து பருவ காலத்திலும் கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்றுதான் பப்பாளி. இதில் வைட்டமின் சி மற்றும் பாப்பைன் உள்ளது. இவை இரண்டும் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்யாமல் தடுக்கும் மற்றும் ரத்தக்குழாய்களில் பிளேக்குகள் உருவாவதை தடுக்கும். எனவே இந்த பழத்தையும் நீங்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு அபாயத்தை தடுக்கலாம்.

முக்கிய குறிப்பு :

மேலே சொன்ன பழங்களில் ஏதாவது ஒன்றை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு மாரடைப்பு வரவே வராது!!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
90s Kids vs 2K Kids : அன்றைய ஃபேஷன் vs இன்றைய டிரெண்டிங் ஆடைகள்! ஒரு சுவாரஸ்ய ஒப்பீடு!
Recommended image2
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved