MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • "இதயத்தை பாதிக்கும் பேராபத்து" 40 வயதை கடந்த ஆண்கள் கட்டாயம் கவனிக்கணும் - உங்கள் உடலே கொடுக்கும் அலர்ட்!

"இதயத்தை பாதிக்கும் பேராபத்து" 40 வயதை கடந்த ஆண்கள் கட்டாயம் கவனிக்கணும் - உங்கள் உடலே கொடுக்கும் அலர்ட்!

Signs of Heart Attack in Men : இக்கால வாழ்க்கை சூழலில் மனிதர்களின் ஆரோக்கியம் மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது என்றால் அது மிகையல்ல.

2 Min read
Ansgar R
Published : Sep 12 2024, 09:09 PM IST| Updated : Sep 12 2024, 09:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Fast Foods

Fast Foods

மாறிவரும் வாழ்க்கை சூழலில் மனிதர்கள் உட்கொள்ளும் உணவுகளின் தரமும் மாறி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு காலத்தில் உடல் உழைப்பு என்பது அதிக அளவில் இருந்தது. அதனால் அவர்கள் உட்கொண்ட சத்தான ஆகாரங்கள், உடலுக்கு வலுவையும், நீண்ட ஆயுளையும் கொடுத்தது. ஆனால் இப்போது அந்த நிலையே வேறு, ஒரு அறையில் உள்ள மேசை நாற்காலியை தாண்டி நமக்கு வேலையில்லா. அதனோடு இணைந்து இந்த துரித உணவுகளும் மனிதனின் வாழ்க்கையை பாதித்து வருகின்றன.

அதிலும் குறிப்பாக 40 வயதை கடந்த ஆண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எதிர்காலத்தை எண்ணி ஓய்வு உறக்கமின்றி ஓடும் அதே நேரம், அந்த எதிர்காலத்தை நல்ல உடல் சுகத்தோடு அனுபவிக்கவேண்டும் என்பதையும் நினைவில்கொள்ளவேண்டும். நிச்சயம் அதற்காக பல முன்னெடுப்புகளை இப்போதிருந்தே செய்யவேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

எச்சில் தொட்டு மட்டும் பணத்தை ஒருபோதும் எண்ணாதீங்க.. நம்ப முடியாத காரணம் இருக்கு!!

24
Heart Problems

Heart Problems

சரி உடலை எப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது என்பதை பற்றி தெரிந்துகொள்ளும் முன், 40 வயதை கடந்த ஆண்கள் எந்தெந்த விஷயத்தில் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது என்பதை இப்பொது பார்க்கலாம். இளம் வயது ஆண்களில் இப்பொது அதிகமாக இருப்பது இருதயம் சம்மந்தமான நோய்கள் தான். குறிப்பாக 35 முதல் 40 வயதிலேயே மாரடைப்பு என்பது சர்வ சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. ஆகையால் 40 வயதை கடந்த ஆண்கள் முதலில் தங்கள் இதயம் சமந்தா விஷயங்களில் அலட்சியம் காட்டக்கூடாது.  

பொதுவாக மாரடைப்பின் அறிகுறிகள் என்று சில விஷயங்களை கூறுவார்கள், அதாவது நெஞ்சு எரிச்சல், சுவாசிப்பதில் சிரமம், தலைசுற்றல், இதயத்தின் நடுப்பகுதியில் வலி அல்லது கடுமையான எரிச்சல், தலைசுற்றல் போன்ற விஷயங்கள் இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறிகளான இருக்கலாம் என்று கூறுவார்கள். ஆனால் மருத்துவர்களின் அறிவுரைப்படி, ஆண்களுக்கு காலில் ஏற்படும் சில அசௌகரியங்கள் கூட இதய நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம் என்கிறார்கள்.

34
Heart problem symptoms

Heart problem symptoms

மார்பு வலி என்பது மேலே குறிப்பிடப்பட்ட இந்த அறிகுறிகள் மூலம் மட்டுமல்லாமல், நமது உடலே வேறு சில வகைகளிலும் அதை எடுத்துக்காட்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். தொடை அல்லது பின்பக்கத்தில் ஏற்படும் வலி அல்லது மரபுத்தன்மை உள்ளிட்டவை போன்ற அறிகுறிகள் இருந்தால், நீங்கள் உடனே ஒரு முறை மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது. காரணம் உங்கள் கால்களுக்கு செல்லும் இதய தமனிகளில் அடைப்பு இருப்பதன் காரணமாகத்தான் தொடைகள் அல்லது பின்பக்கத்தில் வலி, அசௌகரியம் அல்லது மரபுத்தன்மை போன்றவை ஏற்படுகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.

அதுமட்டுமல்லாமல் உங்கள் உள்ளங்கால்கள் சிறிது நேரத்தில் மரத்துப் போகிறது என்றாலும், அல்லது உங்கள் கால்கள் மிகவும் பலவீனமாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தாலும், அது எதிர்காலத்தில் உங்களுக்கு மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். தமணியில் ஏற்படும் அடைப்பு காரணமாக ரத்த ஓட்டம் இல்லாமல் போவதே இதனால் ஏற்படும் மாரடைப்புக்கு காரணமாக மாறுகிறது.

44
Chill Legs

Chill Legs

அது மட்டுமல்ல உங்கள் பாதங்கள் மற்றும் உள்ளங்கால்களில் உள்ள தோள்களின் நிற அமைப்பு மாறினாலும் அது இதய அடைப்பை தான் சுட்டிக்காட்டுகிறதாம். அதாவது உங்கள் இதயத்தில் இருந்து பம்ப் செய்யப்படும் ரத்தமானது, பாதங்களை நீண்ட நேரமாக சென்றடையாவிட்டால் அப்போது உங்கள் பாதங்கள் மற்றும் உள்ளங்கால்களில் தோள்கள் சற்று நிறம் மாறி காணப்படும். இதுவே உங்களுக்கு இதய நோய்கள் வர வழிவகுக்கும். 

அது மட்டுமல்லாமல் வெப்பமான கால நிலைகளில் கூட உங்கள் பாதங்கள் அல்லது கால் விரல்கள் குளிர்ச்சி அடைகிறது என்றால் அது மிகவும் ஆபத்தான ஒரு அறிவுரையாக இருக்கலாம். தமனிகளில் உள்ள ரத்த ஓட்டத்தை பெரிய அளவில் பாதித்திருக்கிறது என்பதற்கு அது ஒரு முக்கியமான அறிகுறி. வெகு சீக்கிரத்தில் உங்கள் கால்கள் குளிர்ச்சி அடைகிறது, ஆனால் நீங்கள் இருக்கும் இடம் வெப்பமாகத்தான் இருக்கிறது என்றால் நீங்கள் உடனேயே மருத்துவர் அணுகுவதில் தவறில்லை.

சர்க்கரை நோயாளிகள் இந்த ஒரு சாக்லேட் கண்டிப்பா சாப்பிடலாம்!! அது என்ன தெரியுமா?

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved