New house : புது வீடு கட்டுறீங்களா? இந்த 6 ரகசியம் தெரியாம இறங்காதீங்க!
சொந்த வீடு கட்டுவது பலரின் வாழ்நாள் கனவு. ஆனால், அனுபவமின்மையால் பட்ஜெட் எகிறி பலர் வருத்தப்படுவதுண்டு. இந்த சிரமங்களை தடுத்து, திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள் கச்சிதமாக வீட்டை கட்டி முடிக்க உதவும் 6 ரகசிய வழிகளை இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

பிளான் பண்ணின பட்ஜெட்ல வீடு கட்ட முடியாது:
என்னதான் இன்ஜினியர் கரெக்ட்டா கொட்டேஷன் கொடுத்தாலும், வீடு கட்டி முடிக்கும் போது 15% முதல் 20% வரை செலவு அதிகமாகும். இதுதான் எதார்த்தம். உங்க பட்ஜெட் 50 லட்சம்னா, 40 லட்சத்துக்கு பிளான் பண்ணுங்க. மீதி 10 லட்சத்தை அவசர கால தேவைக்கு (Buffer Money) கைவசம் வைங்க. டென்ஷன் இல்லாம வீடு முடியும்.
எதிர்காலத்துக்கான 'ஸ்மார்ட்' பிளானிங்:
இப்போது எல்லாம் எல்லோர் வீட்டுலயும் எலக்ட்ரிக் வண்டி (EV) வந்துடுச்சு. ஆனா, கார் பார்க்கிங்ல சார்ஜிங் பாயிண்ட் வைக்க பலரும் மறந்துடுறாங்க. சோபாவுக்கு பக்கத்துல, பெட் பக்கத்துல மொபைல்/லேப்டாப் சார்ஜ் செய்ய எக்ஸ்ட்ரா பாயிண்ட்ஸ் வைங்க. வீட்டின் முக்கிய இடங்களில் வைஃபை (Wi-Fi) ரௌட்டருக்கான வயரிங்கை சுவற்றுக்குள்ளேயே (Concealed) பிளான் பண்ணுங்க.
'சூரிய ஒளி' மற்றும் 'காற்றோட்டம்' :
வீட்டின் கிழக்கு மற்றும் வடக்கு திசையில் பெரிய ஜன்னல்கள் வைப்பது வீட்டுக்குள்ளே பாசிட்டிவ் எனர்ஜியைக் கொண்டு வரும். ஜன்னல்களை நேருக்கு நேர் (Cross Ventilation) அமையுங்கள். இதனால் கரண்ட் பில் மிச்சமாவதுடன், ஏசி (AC) பயன்பாடும் குறையும். இயற்கை வெளிச்சம் இருக்கும் வீடு எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.
'நெகிழ்வான' அறைகள் :
இன்னைக்கு இருக்குற காலகட்டத்துல 'வொர்க் ஃபிரம் ஹோம்' (Work from home) ரொம்ப சாதாரண ஆகிடுச்சு. அதனால தனித்தனியா ரூம் கட்டி இடத்தை வேஸ்ட் பண்ணாதீங்க. கிட்ஸ் ரூம் அல்லது கெஸ்ட் ரூமை, தேவைப்படும் போது ஹோம் ஆபீஸ் ஆகவோ அல்லது ஸ்டடி ரூம் ஆகவோ மாற்றும் வகையில் 'மல்டி பர்பஸ்' ஃபர்னிச்சர்களுக்கு ஏத்த மாதிரி டிசைன் பண்ணுங்க.
டைல்ஸ் விலையை விட பேஸ்மென்ட் முக்கியம்:
வீட்டின் இன்டீரியர், பெயிண்டிங் அழகை விட பேஸ்மென்ட் மற்றும் மேல்தளத்தின் (Roof) வாட்டர் புரூஃபிங் தான் வீட்டின் ஆயுளைத் தீர்மானிக்கும். பவுண்டேஷன் போடும் போதும், பாத்ரூம் கட்டும் போதும் தரமான வாட்டர் புரூஃபிங் கெமிக்கல்களைப் பயன்படுத்துங்கள். இல்லையெனில், சில வருடங்களிலேயே சுவர்களில் பூஞ்சை காளான் பூத்து, பெயிண்ட் உரிய ஆரம்பித்துவிடும்.
'மெட்டீரியல்' வாங்குவதில் அவசரம் வேண்டாம்:
சிமெண்ட், கம்பி போன்றவற்றை இன்ஜினியர் பார்த்துக் கொண்டாலும், டைல்ஸ், சானிட்டரி ஃபிட்டிங்ஸ் (Sanitary fittings), ஸ்விட்ச் போர்டுகளை நீங்களே நேரில் சென்று தேர்ந்தெடுங்கள். ஒரே கடையில் எல்லாவற்றையும் வாங்காமல், 3-4 கடைகளில் விலை மற்றும் தரத்தை ஒப்பிட்டுப் பார்த்து வாங்குங்கள் (Whole Sale Market). இது ஆயிரக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்தும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

