- Home
- Lifestyle
- Bird House Balcony: உங்க பால்கனி ஒரு மினி கார்டனா மாறணுமா? இதோ 5 க்யூட் 'பேர்ட்ஸ் ஹவுஸ்' டிசைன்கள்!
Bird House Balcony: உங்க பால்கனி ஒரு மினி கார்டனா மாறணுமா? இதோ 5 க்யூட் 'பேர்ட்ஸ் ஹவுஸ்' டிசைன்கள்!
பேர்ட்ஸ் ஹவுஸ் உங்கள் பால்கனியை அழகாக்கி, பறவைகளுக்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது. மரத்தாலான, வண்ணமயமான, மறுசுழற்சி செய்யப்பட்ட மற்றும் மல்டி-லேயர் போன்ற பல்வேறு ஸ்டைலான டிசைன்களில் உள்ளன.

பேர்ட்ஸ் ஹவுஸ்
நீங்கள் உங்கள் பால்கனியை இயற்கையான, அமைதியான இடமாக மாற்ற வேண்டும் என்று நினைத்தால் பேர்ட்ஸ் ஹவுஸ் ஒரு சூப்பர் சாய்ஸ். இது பறவைகளுக்கு பாதுகாப்பான இடம் தருவது மட்டுமல்லாமல் உங்கள் பால்கனியோடு அழகையும் கூட்டுகிறது. இப்போது மார்க்கெட்டில் பலவிதமான க்யூட் மற்றும் ஸ்டைலான பேர்ட்ஸ் ஹவுஸ் டிசைன்ஸ் கிடைக்கிறது. உங்கள் விருப்பத்துக்கும் இடத்திற்கும் ஏற்ற மாதிரி நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். உங்க விருப்பத்துக்கும் இடத்துக்கும் ஏற்ற மாதிரி நீங்க தேர்ந்தெடுக்கலாம். சரியான டிசைன், சரியான இடத்தில் வைத்துக்கொண்டால் உங்கள் வீடு ஒரு மினி கார்டன் மாதிரி சூப்பராக இருக்கும்.
மரத்தால் செய்யப்பட்ட பேர்ட்ஸ் ஹவுஸ்
மரத்தால் செய்யப்பட்ட ஹேங்கிங் பேர்ட்ஸ் ஹவுஸ்தான் ரொம்ப பாப்புலர். இது ஒரு இயற்கையான லுக்கை கொடுக்கும். பால்கனியில் இருக்கின்ற செடிகளோடு பார்க்க ரொம்ப அழகாக இருக்கும். இதை நீங்கள் சுலபமாக கொக்கி அல்லது பால்கனி கைப்பிடியில மாட்டிவிடலாம்.
கலர்ஃபுல் டெக்கரேட்டிவ் பேர்ட்ஸ் ஹவுஸ்
உங்கள் பால்கனிக்கு ஒரு பிரைட் மற்றும் ஃபன் லுக் கொடுக்க வேண்டும் என்றால் கலர்ஃபுல் பேர்ட்ஸ் ஹவுஸ் தேர்வு செய்து கொள்ளலாம். இது பல நிறங்களையும், டிசைன்களையும் வருகிறது. இதனால் உங்கள் பால்கனி இன்னும் அட்ராக்டிவா தெரியும்.
மினி காடேஜ் ஸ்டைல் பேர்ட்ஸ் ஹவுஸ்
காடேஜ் ஸ்டைல் பேர்ட்ஸ் ஹவுஸ் பார்க்க ஒரு சின்ன வீடு மாதிரியே இருக்கும். ரொம்ப க்யூட்டாவும் இருக்கும். இந்த டிசைன் குழந்தைங்கள், வீட்டுக்கு வருகின்ற விருந்தாளிகளுக்கு எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். உங்கள் பால்கனிக்கு ஒரு யூனிக் லுக் கொடுக்கும்.
ரீசைக்கிள்டு மெட்டீரியல் பேர்ட்ஸ் ஹவுஸ்
பழைய பாட்டில், தேங்காய் ஓடு அல்லது டின் பாக்ஸ் வைத்து செய்த பேர்ட்ஸ் ஹவுஸ் இப்போது ரொம்ப டிரெண்டிங்கில் இருக்கு. இது பட்ஜெட் ஃபிரெண்ட்லி மட்டும் இல்லை சுற்றுச்சூழலுக்கும் ரொம்ப நல்லது.
மல்டி-லேயர் பேர்ட்ஸ் ஹவுஸ்
உங்கள் பால்கனியில நிறைய இடம் இருந்தால், மல்டி-லேயர் பேர்ட்ஸ் ஹவுஸ் வைக்கலாம். இதில் நிறைய சின்ன சின்ன வீடுகள் இருக்கும். இதனால் ஒரே நேரத்தில் பல பறவைகள் வந்து தங்க முடியும். உங்க பால்கனியும் எப்போதும் கலகலப்பா இருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

