- Home
- Lifestyle
- Village Style House: கிராமப்புறங்களில் பாரம்பரிய அழகும் நிறைந்த வீடு கட்டணுமா? டாப் 5 அசத்தல் ஹவுஸ் டிசைன்கள்!
Village Style House: கிராமப்புறங்களில் பாரம்பரிய அழகும் நிறைந்த வீடு கட்டணுமா? டாப் 5 அசத்தல் ஹவுஸ் டிசைன்கள்!
Village Style: கிராமங்களில் வீடு கட்டுபவர்கள் வெறும் பழமையான பாணியை மட்டும் பின்பற்றுவதில்லை. பாரம்பரிய அழகோடு சேர்த்து சொகுசு, நவீன தொழில்நுட்பம், போதிய வசதிகள் என அனைத்தையும் எதிர்பார்த்தே திட்டமிடுகிறார்கள்.

கிராமங்களில் பழமையான பாணியில் வீடு
இன்றைய காலகட்டத்தில் கிராமங்களில் வீடு கட்டுபவர்கள் வெறும் பழமையான பாணியை மட்டும் பின்பற்றுவதில்லை. பாரம்பரிய அழகோடு சேர்த்து சொகுசு, நவீன தொழில்நுட்பம், போதிய வசதிகள் என அனைத்தையும் எதிர்பார்த்தே திட்டமிடுகிறார்கள். நீங்கள் கிராமப்புறத்தில் ஒரு அழகான கனவு இல்லத்தைக் கட்டத் திட்டமிட்டிருந்தால், உங்களைக் கவரக்கூடிய 5 சிறந்த 'வில்லேஜ் ஸ்டைல்' (Village Style) வீட்டு வடிவமைப்புகள் இதோ:
திறந்த முற்றம் கொண்ட பாரம்பரிய வீடு
கிராமங்களில் திறந்த முற்றம் கொண்ட வீடுகளை இன்றும் மக்கள் அதிகம் விரும்புகின்றனர். வீட்டின் நடுவில் இருக்கும் பெரிய முற்றம், இயற்கையான வெளிச்சத்தையும், சுத்தமான காற்றையும் உள்ளே கொண்டு வரும். இந்த வடிவமைப்பு, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசவும், பண்டிகைகள் அல்லது குடும்ப நிகழ்ச்சிகளைக் கொண்டாடவும் போதுமான இடத்தை வழங்குகிறது. கோடைக்காலத்தில் இதுபோன்ற வீடுகள் குளு குளுவென இருக்கும்.
திண்ணை வைத்த கிளாசிக் கிராமத்து வீடு
வீட்டிற்குள் வரும் விருந்தினர்களை இன்முகத்தோடு வரவேற்று, அவர்கள் சற்று அமர்ந்து இளைப்பாற திண்ணையை விடச் சிறந்த இடம் வேறொன்றும் இருக்க முடியாது. இதமான கிராமத்துக் காற்றை ரசித்தபடி, சுடச்சுட டீயுடன் குடும்பத்தினருடனும், அக்கம் பக்கத்தினருடனும் மனவிட்டுப் பேசி மகிழும் ஒரு உன்னதமான இடமாக இது பயன்படுகிறது. மதிய வேளையில் ஒரு குட்டித் தூக்கம் போடவோ அல்லது அமைதியாகப் புத்தகம் படிக்கவோ பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தேடும் 'ஃபேவரிட் ஸ்பாட்' இந்தத் திண்ணை தான்.
சாய்வான கூரை கொண்ட வீடு
அதிகப்படியான மழைப்பொழிவு இருக்கும் பகுதிகளுக்கு இந்த 'சாய்வான கூரை'வடிவமைப்பு ஒரு வரப்பிரசாதமாகும். இந்த கூரையின் தனித்துவமான சாய்வு அமைப்பு, மழை நீரை தேங்க விடாமல் மிக எளிதாகக் கீழே இறக்கி, வீட்டின் ஆயுளைக் கூட்டுகிறது. பாரம்பரியக் கேரளா பாணி ஓடுகள் அல்லது இன்றைய நவீன ரூஃபிங் மெட்டீரியல்களைப் பயன்படுத்தி, இந்த வீடுகளை அலாதியான அழகுடனும், அசுர பலத்துடனும் கட்ட முடியும்.
நவீன வசதிகளுடன் கூடிய கிராமப்புற வீடு
உங்களுக்குப் பாரம்பரியத்தின் அழகும் வேண்டும், அதே நேரத்தில் நகரத்து நவீன வசதிகளும் வேண்டும் என்றால், இந்த 'ஃப்யூஷன்' டிசைன் தான் உங்களுக்கான பெஸ்ட் சாய்ஸ். வெளியிலிருந்து பார்க்கும்போது, அழகிய திண்ணை மற்றும் தூண்களுடன் அசல் கிராமத்து வீட்டின் பாரம்பரியக் கம்பீரத்தோடு காட்சியளிக்கும். வீட்டிற்குள் நுழைந்தால் பெரிய ஹால், அட்டாச்டு பாத்ரூம்கள், அல்ட்ரா-மாடர்ன் மாடுலர் கிச்சன் மற்றும் பிரமாதமான காற்றோட்ட வசதிகளுடன், சொகுசான மாடர்ன் லைஃப்ஸ்டைலை அப்படியே கண்முன் நிறுத்தும்.
தோட்டம் மற்றும் பசுமையால் சூழப்பட்ட வீடு
வீட்டைச் சுற்றி இயற்கை அன்னை அரவணைப்பது போன்ற ஒரு சூழலை விரும்புபவர்களுக்கான கச்சிதமான வடிவமைப்பு இது. வீட்டைச் சுற்றி ஒரு சிறிய நந்தவனம், வண்ணமயமான பூச்செடிகள், நிழல் தரும் மரங்கள் எனப் பசுமையை அமைக்கும் போது, அது பார்ப்பவர் கண்களுக்கு மட்டுமல்லாமல் நம் மனதிற்கும் அளப்பரிய நிம்மதியைத் தரும். இந்த நேச்சுரல் கார்டன் டிசைன், கிராமத்துச் சூழலோடு கச்சிதமாகப் பொருந்துவதோடு மட்டுமல்லாமல், வீட்டின் வெப்பநிலையைக் குறைத்து வீட்டை ஜிலுஜிலுவென்று வைத்திருக்க உதவும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

