- Home
- Lifestyle
- Washing Machine Cleaning Tips: உங்க வாஷிங் மெஷின் லைஃப் லாங் வரணுமா? அப்போ மாசத்துக்கு ஒருமுறை இதை செய்யுங்க!
Washing Machine Cleaning Tips: உங்க வாஷிங் மெஷின் லைஃப் லாங் வரணுமா? அப்போ மாசத்துக்கு ஒருமுறை இதை செய்யுங்க!
Washing Machine: துவைத்த துணிகளில் கெட்ட வாசனை வருகிறதா? உங்கள் வாஷிங் மெஷினில் படிந்திருக்கும் அழுக்கு மற்றும் பூஞ்சைகளே காரணம். சமையலறைப் பொருட்களைக் கொண்டே உங்கள் வாஷிங் மெஷினைப் புதுசு போல மாற்றுவதற்கான எளிய வழிகள்.

வாஷிங் மெஷின்
தினமும் நம்ம துணிகளை பளிச்சுனு மாத்துற வாஷிங் மெஷினுக்குள்ளயும் ஏகப்பட்ட அழுக்கும், பூஞ்சைகளும், கெட்ட வாசனையும் ஒளிஞ்சிருக்கும்னு உங்களுக்குத் தெரியுமா? இதனாலதான் சில நேரங்கள்ல துவைச்ச துணிகள்ல ஒருவிதமான பேட் ஸ்மெல் அடிக்கும். விலையுயர்ந்த கெமிக்கல்கள் எதுவும் இல்லாம, உங்க வீட்டு சமையலறையில் இருக்கிற பொருட்களை வச்சே வாஷிங் மெஷினை அப்படியே புதுசு போல மாத்த சில சூப்பர் டிப்ஸ் இதோ!

எலுமிச்சை - டூத்பேஸ்ட் காம்போ
பாதி எலுமிச்சை பழத்தை எடுத்து, அதன் மேல் சிறிதளவு டூத்பேஸ்ட்டை தடவிக்கொள்ளுங்கள். அதை வாஷிங் மெஷினின் டிரம் (Drum) பகுதியின் உள்பக்கத்தில் நன்றாகத் தேய்க்க வேண்டும். அதன் பிறகு, துணிகள் எதுவும் போடாமல் வெறும் தண்ணீரை மட்டும் நிரப்பி ஒரு முறை 'Empty Cycle'-ல் மெஷினை ஓடவிட்டால், உள்ளே இருக்கும் கறைகள் நீங்கி மெஷின் பளபளப்பதோடு எலுமிச்சையின் சூப்பர் நறுமணமும் வீசும்.
கிருமிகளை அழிக்கும் மவுத்வாஷ்
வாய் கொப்பளிக்கப் பயன்படுத்தும் மவுத்வாஷில் பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி அதிகம் உள்ளது. டிடர்ஜென்ட் போடும் பாக்ஸில் இரண்டு மூடி மவுத்வாஷை ஊற்றி, மெஷினை 'Quick Wash' மோடில் ஆன் செய்யுங்கள். இது உள்ளே மறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் மற்றும் பூஞ்சைகளை வேரோடு அழித்துவிடும்.
ரப்பர் கேஸ்கெட் கறைகளுக்கு ஆப்பிள் சைடர் வினிகர்
முக்கியமாக ஃபிரன்ட் லோட் மெஷின்களின் கதவுப் பகுதியில் இருக்கும் ரப்பர் வளையத்தில்தான் தண்ணீர் தேங்கி கறுப்பு நிறக் கறைகளும், பாசியும் படியும். ஆப்பிள் சைடர் வினிகரில் ஒரு காட்டன் துணியை நனைத்து, அந்த ரப்பர் பகுதியை நன்றாகத் துடைத்தெடுத்தால் கறுப்பு கறைகள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
டிடர்ஜென்ட் பாக்ஸை புதுசாக்க பேக்கிங் சோடா
சோப்புத் தூள் அல்லது லிக்விட் ஊற்றும் பாக்ஸில் காலப்போக்கில் சோப்புத் துகள்கள் கெட்டியாகப் படிந்துவிடும். அந்த பாக்ஸை தனியாகக் கழற்றி, வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் பேக்கிங் சோடா கலந்து 10 நிமிடம் ஊற வையுங்கள். பிறகு, ஒரு பழைய டூத் பிரஷ்ஷை கொண்டு தேய்த்தால் பாக்ஸ் சுத்தமாகி புதுசு போல மாறும்.
ஃபில்டரை க்ளீன் செய்ய மறக்காதீங்க
துணிகளில் இருந்து வெளியேறும் நூல் இழை, அழுக்கு மற்றும் காசுகள் அனைத்தும் மெஷினின் கீழே இருக்கும் ஃபில்டரில் (Lint Filter) தான் போய் தங்கும். மாதத்திற்கு ஒரு முறையாவது இந்த ஃபில்டரை திறந்து அதில் சேர்ந்துள்ள குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். இது மெஷினின் ஆயுளை (Lifespan) பல வருடங்களுக்கு நீட்டிக்கச் செய்யும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

