MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Furniture Reuse: பழைய பர்னிச்சரை தூக்கி வீசாதீங்க.. ஒரு பைசா செலவில்லாமல் ஷோரூம் லுக்கிற்கு மாற்ற இதோ சூப்பர் டிப்ஸ்!

Furniture Reuse: பழைய பர்னிச்சரை தூக்கி வீசாதீங்க.. ஒரு பைசா செலவில்லாமல் ஷோரூம் லுக்கிற்கு மாற்ற இதோ சூப்பர் டிப்ஸ்!

Old Furniture: பழைய பர்னிச்சர்களை தூக்கி எறியாமல், சில கிரியேட்டிவ் ஐடியாக்கள் மூலம் அவற்றை மீண்டும் புதுப்பிக்கலாம். ஷோகேஸைப் புத்தக அலமாரியாக மாற்றுவது போன்ற வழிகளில் உங்கள் வீட்டுப் பொருட்களுக்குப் புதிய பொலிவைக் கொடுக்கலாம்.

2 Min read
Author : vinoth kumar
Published : May 24 2026, 12:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
பழைய பர்னிச்சர்கள்
Image Credit : Asianet News

பழைய பர்னிச்சர்கள்

வீட்டை அழகுபடுத்த வேண்டும் என்று நினைத்த உடனே பலரும் செய்யும் தவறு, பழைய பர்னிச்சர்களைக் குப்பையில் போடுவது அல்லது மிகக் குறைந்த விலைக்குப் பழைய இரும்புக்கடையில் விற்பதுதான். ஆனால், கொஞ்சம் கிரியேட்டிவிட்டியும் சில எளிய ட்ரிக்குகளும் இருந்தால் போதும், பழைய பர்னிச்சர்களை அச்சு அசலாக ஷோரூமிலிருந்து வாங்கியது போல் புதுசாக மாற்றிவிடலாம். அதற்கான 5 ஸ்மார்ட் ஐடியாக்களை பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
தேய்ந்துபோன டைனிங் டேபிளுக்கு கலர்ஃபுல் லுக்
Image Credit : pinterest

தேய்ந்துபோன டைனிங் டேபிளுக்கு கலர்ஃபுல் லுக்

காலப்போக்கில் டைனிங் டேபிளின் பாலிஷ் மங்கி, அதன் அழகு இல்லாமல் இருக்கும். அதற்கு மீண்டும் பழையபடி பாலிஷ் செய்ய அதிக செலவாகும் என்பதால், அதற்குப் பதிலாக உங்கள் வீட்டுச் சுவர்களுக்குப் பொருத்தமான பிரகாசமான வண்ணங்களில் பெயிண்ட் அடிக்கலாம். இது டைனிங் ஏரியாவையே ஒரு மாடர்ன் லுக் போல மாற்றிவிடும்.

Related Articles

Related image1
Small Living Rooms: சின்ன ரூமை லக்சரி லுக்காக மாற்றலாம்! பட்ஜெட் விலையில் வீட்டை அழகாக்க 5 ஸ்மார்ட் ஐடியாஸ்!
Related image2
Washing Machine: ஒரு ரூபாய் செலவில்லை! மெக்கானிக்கும் தேவையில்லை! வாஷிங் மெஷினை ஈஸியா கிளீன் செய்ய 5 சூப்பர் டிப்ஸ்!
36
தோட்டத்தில் கிடக்கும் நாற்காலிகளுக்கு புது உயிர்
Image Credit : pinterest

தோட்டத்தில் கிடக்கும் நாற்காலிகளுக்கு புது உயிர்

வெயில், மழை மற்றும் தூசியால் தோட்டத்தில் உள்ள நாற்காலிகள் பொலிவிழந்து பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும். இவற்றைத் தூக்கி எறியாமல், நன்றாகத் துடைத்துவிட்டு மெட்டல் அல்லது உட் பெயிண்ட் கொண்டு உங்களுக்குப் பிடித்த கலகலப்பான நிறங்களில் பெயிண்ட் செய்யுங்கள். விரும்பினால் அதன் மேல் சின்னச் சின்ன ஜியோமெட்ரிக் டிசைன்களை வரைந்து தோரணை காட்டலாம்.

46
சோபா கவருக்கு 'பெட்ஷீட்' மேஜிக்
Image Credit : pinterest

சோபா கவருக்கு 'பெட்ஷீட்' மேஜிக்

சோபாவின் கட்டமைப்பு நன்றாக இருக்கும். ஆனால் அதன் மேலிருக்கும் கவர் பல வருட பயன்பாட்டால் கிழிந்தோ அல்லது கறை படிந்தோ இருக்கும். புது கவர் மாற்ற காசு அதிகமாக செலவாகும். உங்கள் வீட்டில் இருக்கும் பயன்படுத்தாத, ஆனால் நல்ல பிரின்ட் மற்றும் தரமான துணியுடன் இருக்கும் பெட்ஷீட்களை சோபா கவராக மாற்றிக் தைக்கலாம். இது சோபாவுக்கு முற்றிலும் ஒரு புது பொலிவைத் தருவதோடு, உங்கள் பணத்தையும் அப்படியே மிச்சமாக்கும்.

56
பழைய ஷோகேஸ் இனி ஸ்டடி ரூம் ஹீரோ
Image Credit : pinterest

பழைய ஷோகேஸ் இனி ஸ்டடி ரூம் ஹீரோ

வரவேற்பறையில் இருக்கும் பழைய மாடல் ஷோகேஸ் பார்ப்பதற்கு அவுட்-ஆஃப்-பேஷன் போலத் தோன்றும். அதற்குப் பிரகாசமான வண்ணங்கள் அல்லது வுட்டன் டெக்ஸ்சர் பெயிண்ட் அடித்து அதன் தோற்றத்தை மாற்றுங்கள். அதை அப்படியே டிராயிங் ரூமிலோ அல்லது பிள்ளைகளின் ஸ்டடி ரூமிலோ வைத்துப் புத்தக அலமாரியாகப் பயன்படுத்தலாம்.

66
மங்கிப்போன சென்டர் டேபிளுக்கு 'ஆர்ட்' டச்
Image Credit : pinterest

மங்கிப்போன சென்டர் டேபிளுக்கு 'ஆர்ட்' டச்

ஹாலின் நடுவே இருக்கும் சென்டர் டேபிள் கலர் மங்கி, வீட்டின் அழகையே கெடுப்பது போல் இருக்கும். புதிய டேபிள் வாங்க காசு செலவழிக்காமல், அதற்கு பேஸ் பெயிண்ட் அடித்துவிட்டு, உங்களுக்குப் பிடித்த மண்டலா ஆர்ட் அல்லது வார்லி டிசைன்களை அதன் மேல் வரையலாம். அதன் மேல் ஒரு கண்ணாடி கிளாஸ் போட்டுவிட்டால், பிரீமியம் லுக் சென்டர் டேபிள் ரெடி.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
வீட்டு அலங்காரம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
முதலீடே இல்லாமல் வீட்டில் இருந்தே பணம் சாம்பாதிக்க சூப்பரான 5 ஐடியாக்கள்
Recommended image2
காலை ஆபீஸ் செல்லும் முன் இந்த 5 மந்திரங்கள் சொல்றீங்களா? நாள் முழுக்க Positive Energy தேடி வரும்..
Recommended image3
வாஷிங் மெஷின் Modes-களை சரியாக பயன்படுத்துவது எப்படி? துணிகள் பாழாகாமல் இருக்க இதோ டிப்ஸ்!
Related Stories
Recommended image1
Small Living Rooms: சின்ன ரூமை லக்சரி லுக்காக மாற்றலாம்! பட்ஜெட் விலையில் வீட்டை அழகாக்க 5 ஸ்மார்ட் ஐடியாஸ்!
Recommended image2
Washing Machine: ஒரு ரூபாய் செலவில்லை! மெக்கானிக்கும் தேவையில்லை! வாஷிங் மெஷினை ஈஸியா கிளீன் செய்ய 5 சூப்பர் டிப்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved