MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Small Living Rooms: சின்ன ரூமை லக்சரி லுக்காக மாற்றலாம்! பட்ஜெட் விலையில் வீட்டை அழகாக்க 5 ஸ்மார்ட் ஐடியாஸ்!

Small Living Rooms: சின்ன ரூமை லக்சரி லுக்காக மாற்றலாம்! பட்ஜெட் விலையில் வீட்டை அழகாக்க 5 ஸ்மார்ட் ஐடியாஸ்!

Smart Home Decor: உங்கள் வீட்டில் இடம் சிறியதாக உள்ளதா? சரியான திட்டமிடல் மற்றும் சில எளிய மாற்றங்கள் மூலம் உங்கள் சிறிய அறையை ஒரு சொகுசு இடமாக மாற்றுவதற்கான 5 சூப்பர் பட்ஜெட் ஐடியாக்களை பார்க்கலாம். 

2 Min read
Author : vinoth kumar
Published : May 22 2026, 10:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
சிறிய அறைகளை அழகாக்க 5 சூப்பர் ஐடியாக்கள்
Image Credit : Asianet News

சிறிய அறைகளை அழகாக்க 5 சூப்பர் ஐடியாக்கள்

வீட்டில் இடம் சிறியதாக இருக்கிறது என்று இனி கவலைப்படத் தேவையில்லை. சரியான திட்டமிடல் மற்றும் சில எளிய மாற்றங்கள் மூலமாக உங்களது சிறிய அறையைக் கூட ஒரு சொகுசு ஹோட்டல் அறை போல பிரம்மாண்டமாக மாற்ற முடியும். கெமிக்கல் அல்லது காஸ்ட்லியான பொருட்கள் இல்லாமல், பட்ஜெட் விலையில் சிறிய அறைகளை அழகாக்குவதற்கான 5 சூப்பர் ஐடியாக்களை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
நீள மரப்பலகை மேஜிக் (Sleek Wooden Planks)
Image Credit : pinterest

நீள மரப்பலகை மேஜிக் (Sleek Wooden Planks)

சிறிய அறைகளில் இடத்தை மிச்சப்படுத்த சுவரையொட்டி அலங்காரங்களைச் செய்வது ஒரு புத்திசாலித்தனமான வழியாகும். சுவரையொட்டி மெலிதான, நீளமான ஒரு மரப்பலகையை அமையுங்கள். அதன் மேல் ஒரு மென்மையான மெத்தையை விரித்து, கலர் கலரான குஷன்களை அடுக்கி வைத்தால், அறையின் தோற்றமே அட்டகாசமாக மாறிவிடும்.

36
சிம்பிள் சோபா & கார்னர் லேம்ப் (Simple Sofa with Lamp)
Image Credit : pinterest

சிம்பிள் சோபா & கார்னர் லேம்ப் (Simple Sofa with Lamp)

சிறிய அறைகளில் பெரிய சோபா செட்களை வைத்தால் நடப்பதற்கே இடம் இல்லாமல் போய்விடும். அறைக்கு ஏற்றவாறு ஒரு சிறிய, எளிமையான சோபாவைத் தேர்ந்தெடுங்கள். அந்தச் சோபாவிற்குப் பொருத்தமான டிசைனர் கவர்கள் மற்றும் குஷன்களைப் பயன்படுத்துங்கள். அதன் பக்கத்தில் ஒரு சிறிய ஸ்டாண்ட் டேபிள் வைத்து, அதன் மேல் ஒரு அழகான விளக்கை எரியவிட்டால், அது வீட்டிற்கு வருபவர்களைச் சுண்டி இழுக்கும்.

46
தரையமைப்பில் சொகுசு (Cosy Floor Seating)
Image Credit : pinterest

தரையமைப்பில் சொகுசு (Cosy Floor Seating)

உங்கள் அறையில் சோபா வைப்பதற்குக்கூட இடவசதி இல்லையென்றால், 'ஃப்ளோர் சீட்டிங்' முறையைப் பயன்படுத்தலாம். தரையில் ஒரு தடிமனான, தரமான மெத்தையை விரித்துப் போடுங்கள். அதன் மேல் கண்ணைக் கவரும் வண்ணங்களில் பெட்ஷீட்களை விரித்து, சுற்றிலும் குஷன்களை வையுங்கள். அறையின் மூலைகளில் சில செயற்கை செடிகளை வைப்பதன் மூலம் அறை மிகவும் பசுமையாகவும், அழகாகவும் மாறும்.

56
புதுமையான சௌக்கி பெஞ்ச் (Trendy Wooden Bench)
Image Credit : pinterest

புதுமையான சௌக்கி பெஞ்ச் (Trendy Wooden Bench)

அறைக்கு ஒரு பாரம்பரிய மற்றும் அதேசமயம் மாடர்ன் லுக் தர நினைப்பவர்கள் 'சௌக்கி' எனப்படும் மர பெஞ்சுகளைப் பயன்படுத்தலாம். சோபாவிற்குப் பதிலாக ஒரு சிறிய மர பெஞ்சை அறையில் போடுங்கள். அதன் மேல் வண்ணமயமான விரிப்புகளை விரித்து அலங்கரிக்கலாம். இந்த பெஞ்சிற்குப் பின்னால் உள்ள சுவரில் உங்களது அழகான புகைப்படங்கள் அல்லது ஓவியங்களை மாட்டி வைத்தால் அறைக்கு ஒரு புது தோற்றம் கிடைக்கும்.

66
எல்-ஷேப் சோபா (Sleek L-Shaped Sofa)
Image Credit : pinterest

எல்-ஷேப் சோபா (Sleek L-Shaped Sofa)

அறையின் மூலைகளை வீணாக்காமல் பயன்படுத்த எல்-ஷேப் சோபாக்கள் பெரிதும் உதவுகின்றன. சிறிய அளவிலான, மெலிதான ஒரு L-Shaped சோபாவை அறையின் மூலையில் செட் செய்யுங்கள். சோபாவிற்கு மேட்சிங்கான கவர்கள் மற்றும் சைடு டேபிள் வைப்பதன் மூலம், குறைவான இடத்திலும் அதிகப்படியான சொகுசான அமரும் வசதியை உருவாக்க முடியும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
வீட்டு அலங்காரம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pressure Cooker: ஒரே குக்கரை ரொம்ப நாள் யூஸ் பண்றீங்களா? உடனே மாத்துங்க.. ஏன் தெரியுமா?
Recommended image2
Chennai Budget Shopping: டிமார்ட், ஜியோமார்ட் மட்டுமல்ல! சென்னையில் இந்த சந்தைகளுக்குப் போங்க… குறைந்த விலையில் அள்ளிக்கிட்டு வரலாம்!
Recommended image3
Coffee Powder Storage : காபி பொடி கட்டியாக மாறுகிறதா? மணமும் சுவையும் மாறாமல் பாதுகாக்க இந்த சூப்பர் டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!
Related Stories
Recommended image1
Cockroach Repellent Plants: கிச்சனில் கரப்பான்பூச்சி தொல்லையா? இந்த 4 செடிகள் வீட்டில் இருந்தால் அலறியடித்து ஓடும்!
Recommended image2
Natural Wall Cooling: வெயிலில் இருந்து வீட்டை பாதுகாக்கும் இயற்கை ஏசி ! சுவர்களை குளிர்ச்சியாக்கும் 5 சூப்பர் பூங்கொடிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved