MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Cockroach Repellent Plants: கிச்சனில் கரப்பான்பூச்சி தொல்லையா? இந்த 4 செடிகள் வீட்டில் இருந்தால் அலறியடித்து ஓடும்!

Cockroach Repellent Plants: கிச்சனில் கரப்பான்பூச்சி தொல்லையா? இந்த 4 செடிகள் வீட்டில் இருந்தால் அலறியடித்து ஓடும்!

Kitchen: வீட்டின் சமையலறை, ஸ்டோர் ரூம் மற்றும் ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களில் கரப்பான்பூச்சிகள் மிக வேகமாகப் பெருகிவிடும்? இதை கெமிக்கல் இல்லாமல் எளிமையாக விரட்ட உதவும் 4 செடிகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

2 Min read
Author : vinoth kumar
Published : May 21 2026, 04:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கரப்பான்பூச்சி விரட்டும் செடிகள்
Image Credit : Asianet News

கரப்பான்பூச்சி விரட்டும் செடிகள்

வீட்டின் சமையலறை, ஸ்டோர் ரூம் மற்றும் ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களில் கரப்பான்பூச்சிகள் மிக வேகமாகப் பெருகிவிடும். இவற்றைக் கட்டுப்படுத்த கடைகளில் விற்கும் ரசாயன ஸ்ப்ரேக்களைப் பயன்படுத்தினால், அது நம் ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக உணவுகள் இருக்கும் சமையலறைக்கு நல்லதல்ல. இதற்கு ஒரு சூப்பர் இயற்கை தீர்வு உள்ளது. சில குறிப்பிட்ட செடிகளை வீட்டில் வளர்ப்பதன் மூலம், அவற்றிலிருந்து வரும் நறுமணத்திற்கே கரப்பான் பூச்சிகள் வீட்டை விட்டு ஓடிவிடும். இந்த செடிகள் வீட்டிற்கு அழகைத் தருவதோடு, பூச்சிகளையும் இயற்கையாக விரட்டுகின்றன. அவை என்னென்ன செடிகள் என்பதை பார்ப்போம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
புதினாச் செடி
Image Credit : AI

புதினாச் செடி

சமையலறையில் உணவுப் பொருட்கள் இருப்பதால் அங்குதான் கரப்பான்பூச்சிகள் அதிகம் படையெடுக்கும். இதைத் தடுக்க புதினா ஒரு எளிய அஸ்திரமாகும். புதினாவின் அசாத்தியமான நறுமணம் கரப்பான்பூச்சிகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். மிகக் குறைந்த இடமே இருந்தால் கூட ஒரு சிறிய பிளாஸ்டிக் பாட்டில் அல்லது தொட்டியில் புதினா தண்டை வைத்தே இதை எளிதாக வளர்க்கலாம். சமையலறை ஜன்னல் அல்லது சிங்க் (Sink) அருகில் இதை வைக்கலாம். இதனால் கரப்பான்பூச்சி மட்டுமின்றி, ஈ மற்றும் சிறிய பூச்சிகளும் வராது.

Related Articles

Related image1
Towel Planter DIY: பழைய டவலை தூக்கி போடாதீங்க! 5 மாடர்ன் செடித் தொட்டிகளை ஈஸியா செய்யலாம்!
Related image2
Natural Wall Cooling: வெயிலில் இருந்து வீட்டை பாதுகாக்கும் இயற்கை ஏசி ! சுவர்களை குளிர்ச்சியாக்கும் 5 சூப்பர் பூங்கொடிகள்!
35
பிரியாணி இலைச் செடி
Image Credit : pinterest

பிரியாணி இலைச் செடி

பிரியாணி இலை உணவிற்கு நறுமணமும் சுவையும் தருவதோடு மட்டுமல்லாமல், சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது. இந்த இலையில் இருந்து வெளிவரும் ஒருவித காரமான வாசனை கரப்பான்பூச்சிகள் மற்றும் கொசுக்களுக்குப் பிடிக்காது. இந்தச் செடியைச் சமையலறையிலோ அல்லது பால்கனியிலோ வளர்க்கலாம். செடி வளர்க்க முடியாதவர்கள், காய்ந்த பிரியாணி இலைகளைக் கரப்பான்பூச்சிகள் நடமாடும் இடங்களில் தூவி வைக்கலாம்.

45
லாவெண்டர் செடி
Image Credit : gemini

லாவெண்டர் செடி

லாவெண்டர் பூக்களின் வாசனை மனிதர்களாகிய நமக்கு மன அமைதியைத் தந்தாலும், பூச்சிகளுக்கு அது எமனாக மாறும். இதன் கடுமையான வாசனை கரப்பான்பூச்சிகளின் நுகர்வுத் திறனைப் பாதிக்கும் என்பதால் அவை இந்தச் செடி இருக்கும் பக்கமே வராது. வரவேற்பறை அல்லது பால்கனியில் லாவெண்டர் செடியை வளர்க்கலாம். காய்ந்த லாவெண்டர் இலைகளைப் பூச்சிகள் வரும் நுழைவாயில்களில் போட்டு வைப்பதும் நல்லது.

55
ரோஸ்மேரி செடி
Image Credit : Getty

ரோஸ்மேரி செடி

ரோஸ்மேரி ஒரு சிறந்த மூலிகைச் செடியாகும். இதன் நறுமணம் வீடு முழுக்க ஒரு புத்துணர்ச்சியான சூழலை உருவாக்கும். கொசுக்கள் மற்றும் கரப்பான்பூச்சிகளை விரட்டுவதில் ரோஸ்மேரிக்கு முக்கியப் பங்கு உண்டு. சூரிய ஒளி நன்றாகப் படும் இடத்தில் இந்தச் செடியை மிக எளிதாக வளர்த்துவிடலாம். உங்களது கிச்சன் கார்டன் அல்லது ஜன்னல் ஓரங்களில் இதை வைத்தால் வீடு பசுமையாவதோடு, கரப்பான்பூச்சித் தொல்லையும் நிரந்தரமாக நீங்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sunflower Oil: சன்ஃபிளவர் எண்ணெய் உண்மையிலேயே ஆரோக்கியமானதா? நிபுணர்கள் கூறும் ஷாக்கிங் உண்மை.!
Recommended image2
Towel Planter DIY: பழைய டவலை தூக்கி போடாதீங்க! 5 மாடர்ன் செடித் தொட்டிகளை ஈஸியா செய்யலாம்!
Recommended image3
Gas Burner Cleaning: கேஸ் ரொம்ப செலவாகுதா? பர்னரை இப்படி சுத்தம் பண்ணுங்க.! 15 நாள் கேஸ் எக்ஸ்ட்ரா வரும்.!
Related Stories
Recommended image1
Towel Planter DIY: பழைய டவலை தூக்கி போடாதீங்க! 5 மாடர்ன் செடித் தொட்டிகளை ஈஸியா செய்யலாம்!
Recommended image2
Natural Wall Cooling: வெயிலில் இருந்து வீட்டை பாதுகாக்கும் இயற்கை ஏசி ! சுவர்களை குளிர்ச்சியாக்கும் 5 சூப்பர் பூங்கொடிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved