MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Towel Planter DIY: பழைய டவலை தூக்கி போடாதீங்க! 5 மாடர்ன் செடித் தொட்டிகளை ஈஸியா செய்யலாம்!

Towel Planter DIY: பழைய டவலை தூக்கி போடாதீங்க! 5 மாடர்ன் செடித் தொட்டிகளை ஈஸியா செய்யலாம்!

வீட்ல பழைய டவல் இருக்கா? அதை வச்சு தரை துடைக்கலாம்னு நினைக்கிறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. அதே பழைய டவலை வச்சு சூப்பரான, ஸ்டைலான செடித் தொட்டிகளை நீங்களே செய்யலாம்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : May 21 2026, 03:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
டவல் பிளான்டர் செய்வது எப்படி?
Image Credit : chat gpt

டவல் பிளான்டர் செய்வது எப்படி?

முதல்ல, ஒரு பக்கெட்டில் சிமென்ட் மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியான கலவையா ரெடி பண்ணுங்க. இப்போ, பழைய டவலை இந்தக் கலவையில முழுசா முக்கி எடுங்க. பிறகு, ஒரு பக்கெட், பாத்திரம் அல்லது தொட்டியை தலைகீழா வச்சு, அது மேல இந்த டவலை விரிச்சு விடுங்க. உங்களுக்குப் பிடிச்ச டிசைன்ல ஓரங்களை மடிச்சு விடலாம். இதை 24 முதல் 48 மணி நேரம் நல்லா வெயில்ல காய விடுங்க. சிமென்ட் நல்லா காய்ந்து கெட்டியானதும், அந்த அச்சுல இருந்து மெதுவா பிரிச்சு எடுத்தா, அழகான, உறுதியான டவல் செடித் தொட்டி ரெடி!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
டப் டவல் பிளான்டர்
Image Credit : Pinterest

டப் டவல் பிளான்டர்

உங்ககிட்ட ஏற்கனவே செடி வச்ச பழைய டப் அல்லது கண்டெய்னர் இருக்கா? அதுக்கும் ஒரு கிரியேட்டிவ் லுக் கொடுக்கலாம். சிமென்ட் கலவையில நனைச்ச டவலை அந்த கண்டெய்னர் மேல டிசைனா விரிச்சு காய விடுங்க. காய்ஞ்சதும், அந்த கண்டெய்னர் மேல டவலோட அழகான டெக்ஸ்ச்சர் லேயர் உருவாகிடும். உங்களுக்கு விருப்பம்னா, பெயின்ட் அடிச்சு, கற்களை வச்சும் அலங்கரிக்கலாம்.

Related Articles

Related image1
DIY Planters: பழைய எண்ணெய் கேனை தூக்கிப் போடாதீங்க! பால்கனியை கலர்ஃபுல்லா மாத்த 4 சூப்பர் ஐடியாஸ்
Related image2
Dry Flower DIY: பூஜைக்கு பயன்படுத்திய பூக்களை தூக்கி எறியாதீங்க.! ஊதுபத்தி முதல் சோப் வரை 5 சூப்பரான பொருட்கள் செய்யலாம்.!
35
சின்ன டவலில் இன்டோர் பிளான்டர்
Image Credit : Pinterest

சின்ன டவலில் இன்டோர் பிளான்டர்

உங்ககிட்ட சின்ன கைத் துண்டுகள் (Hand Towels) இருந்தா, அத வச்சும் இன்டோர் பிளான்டர்ஸ் செய்யலாம். ஒரு கூல்டிரிங்ஸ் கேன் அல்லது சின்ன கண்டெய்னர் மேல, சிமென்ட்ல நனைச்ச டவலை தலைகீழா தொங்க விடுங்க. 24-லிருந்து 48 மணி நேரம் காய்ஞ்ச பிறகு, அதுல மண்ணை நிரப்பி சின்ன செடிகள் அல்லது சக்குலன்ட்ஸ் (succulents) நடலாம். வீட்டுக்குள்ள அழகா அலங்கரிக்க இது ஒரு சூப்பர் ஐடியா.

45
ஸ்டாண்டுடன் கூடிய டவல் பிளான்டர்
Image Credit : Pinterest

ஸ்டாண்டுடன் கூடிய டவல் பிளான்டர்

பழைய ஸ்டாண்ட் இருந்தா, அத வச்சும் ஸ்டைலான டவல் பிளான்டர் செய்யலாம். ஸ்டாண்ட் மேல ஒரு பெரிய பாத்திரத்தை (bowl) வைங்க. இப்போ, சிமென்ட்ல முக்கின டவலை அந்த பாத்திரத்தின் மேல விரிச்சு விடுங்க. காய்ஞ்சதும், பார்க்குறதுக்கு துணியைத் தொங்க விட்ட மாதிரி ஒரு லுக் கிடைக்கும். இதுக்கு மேல கோல்டன், சில்வர் அல்லது பல வண்ண மெட்டாலிக் பெயின்ட் அடிச்சா இன்னும் சூப்பரா இருக்கும்.

55
பிளாக் டவல் பிளான்டரில் எஸ்தெடிக் லுக்
Image Credit : Pinterest

பிளாக் டவல் பிளான்டரில் எஸ்தெடிக் லுக்

உங்க பிளான்டருக்கு ஒரு மாடர்ன் மற்றும் எஸ்தெடிக் (aesthetic) லுக் கொடுக்கணுமா? அப்போ அதுக்கு பிளாக் மெட்டாலிக் பெயின்ட் அடிங்க. சாதாரண சிமென்ட் கலவையில டவலை முக்கி, ஒரு பக்கெட் மேல வச்சு டிசைன் பண்ணுங்க. காய்ஞ்சதும், அதோட ஓரங்களைச் சரிசெய்து, மேல பிளாக் அல்லது சாம்பல் நிற (charcoal shade) மெட்டாலிக் பெயின்ட் அடிங்க. இப்படி செஞ்சா, பிளான்டர் பார்க்க ரொம்ப ஸ்டைலா தெரியும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வாழ்க்கை முறை
ஏசியாநெட் நியூஸ்
செய்திகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Men's Bracelets: ராக்கிக்கு அண்ணன், தம்பிக்கு என்ன கிஃப்ட்? இந்த ஸ்டைலான பிரேஸ்லெட்ஸ் சூப்பர் சாய்ஸ்!
Recommended image2
ஃபிரிட்ஜ் அலமாரிகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க உதவும் எளிய அலுமினியம் ஃபாயில் ஹேக்!
Recommended image3
Goosebumps: திடீர்னு உடம்பெல்லாம் புல்லரிக்குதா? அந்த நொடியில் உங்களுக்குள் என்ன நடக்குது தெரியுமா?
Related Stories
Recommended image1
DIY Planters: பழைய எண்ணெய் கேனை தூக்கிப் போடாதீங்க! பால்கனியை கலர்ஃபுல்லா மாத்த 4 சூப்பர் ஐடியாஸ்
Recommended image2
Dry Flower DIY: பூஜைக்கு பயன்படுத்திய பூக்களை தூக்கி எறியாதீங்க.! ஊதுபத்தி முதல் சோப் வரை 5 சூப்பரான பொருட்கள் செய்யலாம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved