MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Dry Flower DIY: பூஜைக்கு பயன்படுத்திய பூக்களை தூக்கி எறியாதீங்க.! ஊதுபத்தி முதல் சோப் வரை 5 சூப்பரான பொருட்கள் செய்யலாம்.!

Dry Flower DIY: பூஜைக்கு பயன்படுத்திய பூக்களை தூக்கி எறியாதீங்க.! ஊதுபத்தி முதல் சோப் வரை 5 சூப்பரான பொருட்கள் செய்யலாம்.!

Dry Flower Reuse Ideas : பூஜைக்கு பயன்படுத்திய பூக்களை தூக்கி எறியாமல் ஊதுபத்தி முதல் சோப் வரை பல பயனுள்ள பொருட்களை செய்ய முடியும். அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

1 Min read
Author : Ramprasath S
Published : May 01 2026, 04:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Dry Flower Reuse Ideas
Image Credit : AI Generated

Dry Flower Reuse Ideas

வீட்ல பூஜை செஞ்சதுக்கு அப்புறம் பூக்களை என்ன பண்றீங்க? ஒரு நாள்ல வாடிப்போனதும் தூக்கி குப்பையில போடுறீங்களா? இனிமே அப்படி செய்யாதீங்க. அந்த காய்ந்த பூக்களை வெச்சு பல பயனுள்ள பொருட்களை செய்யலாம். அது எப்படின்னு பார்க்கலாம் வாங்க.

26
ஊதுபத்திகள்
Image Credit : Chat GPT

ஊதுபத்திகள்

பூஜைக்குப் பயன்படுத்திய காய்ந்த பூக்களை வைத்து ஊதுவத்தி அல்லது சாம்பிராணி செய்யலாம். காய்ந்த பூக்களை மிக்ஸி ஜாரில் போட்டு, அதனுடன் கற்பூரம், நெய் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு, அதை சின்ன சின்ன கூம்புகளாகவோ அல்லது ஊதுவத்தி போலவோ வடிவமைத்து, மீண்டும் பூஜைக்கே பயன்படுத்தலாம்.

Related Articles

Related image1
நிறத்துக்காக தர்பூசணியில் போடப்படும் ஊசி.! விஷமாக மாறும் பழங்கள்? கலப்பட தர்பூசணியை வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?
Related image2
ஏசி இல்லாமலேயே ஜில்லுனு தூங்கலாம்.! கோடைக்காலத்திற்கு ஏற்ற இந்த 5 சிறந்த பாய் வகைகளை டிரை பண்ணுங்க.!
36
சோப்
Image Credit : Chat GPT

சோப்

காய்ந்த பூக்களின் இதழ்களை வைத்து, நீங்களே ஆர்கானிக் மற்றும் வாசனை சோப் தயாரிக்கலாம். உங்கள் வழக்கமான சோப்பைத் துருவி, லேசாக உருக்கிக்கொள்ளுங்கள். அதில், காய்ந்த பூக்களின் இதழ்களைச் சேர்க்கவும். குறிப்பாக ரோஜா, செம்பருத்தி இதழ்கள் நல்ல வாசனையைத் தரும். மேலும், இது சருமத்திற்கும் நல்லது.

46
ரெசின் ஆர்ட்
Image Credit : Chat GPT

ரெசின் ஆர்ட்

காய்ந்த பூக்களை வைத்து ரெசின் ஆர்ட் போன்ற கிரியேட்டிவ்வான விஷயங்களையும் செய்யலாம். குழந்தைகள் கிராஃப்ட், நகைகள், கோஸ்டர்கள் அல்லது போட்டோ ஃபிரேம் செய்யும்போது இந்தப் பூக்களைப் பயன்படுத்தலாம். அதன் மேல் ரெசின் திரவத்தை ஊற்றினால், அது எளிதாக செட் ஆகி, அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.

56
ஹெர்பல் டீ
Image Credit : Chat GPT

ஹெர்பல் டீ

ரோஜா, செம்பருத்தி போன்ற சில பூக்களை ஹெர்பல் டீ தயாரிக்கவும் பயன்படுத்தலாம். பூக்களின் இதழ்களைத் தனியாக எடுத்து, வெயிலில் காயவைத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். இதை தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். அது இளஞ்சூடாக ஆனதும், வடிகட்டி, தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து ஹெர்பல் டீயாகப் பருகலாம்.

66
மெழுகுவர்த்திகள்
Image Credit : Chat GPT

மெழுகுவர்த்திகள்

வீட்டை அலங்கரிக்க அழகான மெழுகுவர்த்திகள் செய்ய ஆசையா? அப்போ இந்த காய்ந்த பூக்களைப் பயன்படுத்தலாம். மெழுகுவர்த்தியை உருக்கி, அதில் காய்ந்த பூக்களின் இதழ்களைச் சேர்க்கலாம். அல்லது மெழுகுவர்த்தியின் வெளிப்புறத்தில் காய்ந்த பூக்களை வைத்து அலங்கரித்து அழகான தோற்றத்தைக் கொடுக்கலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Washing Machine: வாஷிங் மெஷினில் துணிகள் மட்டும் இல்ல.. இதையெல்லாம் கூட துவைக்கலாமா? இதோ 5 சூப்பர் ஐடியாக்கள்!
Recommended image2
House Lizards: வீட்டில் பல்லி தொல்லை அதிகமாக இருக்கிறதா? விரட்ட ஈஸியான டிப்ஸ்!
Recommended image3
Top 5 Snakes: ஜாக்கிரதை! உயிரைப் பறிக்கும் உலகின் டாப் 5 விஷப் பாம்புகள்.. ஒருமுறை கடித்தாலே மரணம் நிச்சயம்!
Related Stories
Recommended image1
நிறத்துக்காக தர்பூசணியில் போடப்படும் ஊசி.! விஷமாக மாறும் பழங்கள்? கலப்பட தர்பூசணியை வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?
Recommended image2
ஏசி இல்லாமலேயே ஜில்லுனு தூங்கலாம்.! கோடைக்காலத்திற்கு ஏற்ற இந்த 5 சிறந்த பாய் வகைகளை டிரை பண்ணுங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved