MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ஒரு பிள்ளை இருக்கும் பெற்றோர் செய்யக்கூடாத '5' தவறுகள்.. பின்விளைவுகள் பயங்கரம்

ஒரு பிள்ளை இருக்கும் பெற்றோர் செய்யக்கூடாத '5' தவறுகள்.. பின்விளைவுகள் பயங்கரம்

Parenting Mistakes :  ஒரு குழந்தையை வளர்க்கும் பெற்றோர்கள் சில தவறுகளை அடிக்கடி செய்கிறார்கள். அது என்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Jan 14 2025, 03:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Single child parents mistakes in tamil

Single child parents mistakes in tamil

வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் அவர்கள் ஒன்றாக சேர்ந்து விளையாடுவது மட்டுமல்லாமல், அடிக்கடி சண்டையும் போட்டுக் கொள்வார்கள். எனவே, ஒரே ஒரு பிள்ளை இருக்கும் வீட்டில் பெற்றோர்கள் அந்த குழந்தை மீது கொஞ்சம் அக்கறையாக இருக்க வேண்டும். ஏனெனில் அந்த குழந்தைக்கு தனிமையுணர்வு வந்துவிடும். இத்தகைய சூழ்நிலையில், ஒற்றைக் குழந்தையை வளர்க்கும் பெற்றோர்கள் அடிக்கடி சில தவறுகளை செய்கிறார்கள். இதனால் அந்த குழந்தை மிகவும் மோசமாக பாதிக்கப்படும். எனவே, ஒரு பிள்ளையை வளர்க்கும் பெற்றோர் செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

26
Single child parents mistakes in tamil

Single child parents mistakes in tamil

எதிர்பார்ப்புகளை திணிக்காதே!

பொதுவாகவே பெற்றோர்கள் தங்களது ஆசைகளை தங்களது பிள்ளைகள் மீதுதான் திணிப்பார்கள். இப்படி பெற்றோர்கள் குழந்தைகள் மீது அழுத்தம் கொடுப்பதால் அது அவர்களது வளர்ச்சியை மட்டுமல்ல, மனரீதியாகவும் குழந்தைகளை பாதிக்கும் தெரியுமா? ஆம், இதன் காரணமாக குழந்தை மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். எனவே நீங்கள் உங்கள் குழந்தையை புரிந்துகொண்டு, உங்களது விருப்பங்களை அவர்கள் மீது திணிப்பதை தவிர்ப்பது நல்லது. 

36
Single child parents mistakes in tamil

Single child parents mistakes in tamil

தனிமை:

ஒரு குழந்தை இருக்கும் வீட்டில் அந்த குழந்தையைச் சுற்றி எப்போதும் குடும்பத்தினர் இருப்பார்கள். இதனால் அந்த குழந்தைக்கு தனிமையில்லாமல் இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலைகள், குழந்தைக்கு சிறிது நேரம் தனிமை கொடுப்பது மிகவும் அவசியம். இதனால் அவர்கள் தங்கள் கூறிய நேரத்தை பிரயோஜனமாக செலவழிப்பார்கள். மேலும்  உங்களுடன் செலவழிக்கும் நேரத்தின் மதிப்பையும் அறிந்து கொள்வார்கள்.

இதையும் படிங்க:  பெற்றோர் குழந்தைங்க கிட்ட 'எப்படி' நடந்துக்கனும்? முக்கியமான '5' டிப்ஸ்

46
Single child parents mistakes in tamil

Single child parents mistakes in tamil

குழந்தையின் முடிவை நீங்கள் எடுக்காதீங்க!

வீட்டில் ஒரு குழந்தை இருக்கும் போது அந்த குழந்தையின் வாழ்க்கை தொடர்பான அனைத்து முடிவுகளையும் பெற்றோர்கள்தான் எடுக்க விரும்பினார்கள். ஆனால் அது தவறு. குழந்தைகள் தங்கள் வாழ்க்கை முடிவுகளை எடுக்க அவர்களுக்கு ஒரு காலம் வரும். எனவே அந்த சமயத்தில் குழந்தைகளின் முடிவுகளை பெற்றோர்கள் சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையெனில், அது தொடர்பாக குழந்தையிடம் ஆலோசிக்கலாம்.

இதையும் படிங்க:  குளிர்காலத்துல குழந்தைகளுக்கு எந்த உணவுகளை கொடுக்க கூடாது தெரியுமா?

56
Single child parents mistakes in tamil

Single child parents mistakes in tamil

முழு சுதந்திரம் கொடுங்கள்:

ஒரு குழந்தை இருக்கும் வீட்டில் குடும்ப உறுப்பினர்களின் பார்வை அந்த குழந்தையின் மீது எப்போதும் இருக்கும். அந்த குழந்தை எங்காவது வெளியே சென்றால் கூட அவர்களை வெளியே விடாமல் பெற்றோர்கள் தடுக்கிறார்கள் இதனால் அந்த குழந்தை சிறையில் இருப்பது போல் உணர ஆரம்பிக்கும். எனவே உங்கள் குழந்தைக்கு முழு சுதந்திரம் கொடுங்கள். வேண்டுமானால், நீங்கள் உங்கள் குழந்தையை தூரத்தில் இருந்து கண்காணிக்கலாம்.

66
Single child parents mistakes in tamil

Single child parents mistakes in tamil

அதிக பாதுகாப்பு அவசியமில்லை:

பெற்றோர்கள் தங்கள் குழந்தையை பாதுகாப்பது அவசியம் தான் ஆனால் பாதுகாப்பிற்கும், அதிக பாதுகாப்பிற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதை ஒவ்வொரு பெற்றோரும் புரிந்து கொள்ள வேண்டும். அதுவும் குறிப்பாக வீட்டில் ஒரு குழந்தை இருக்கும் பெற்றோர்கள் கண்டிப்பாக இதை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் உங்கள் குழந்தையின் சில விஷயங்களில் தலையிடாமல் இருப்பது தான் நல்லது. மேலும் குழந்தைகளை தானாகவே முடிவெடுக்க பழக்கப்படுத்துங்கள். குழந்தைகள் தங்களது சொந்தம் முடிவுகளில் எடுக்க ஆரம்பிக்கும் போது அவர்களது தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
பெற்றோர் ஆலோசனை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vegetables Pesticide Removal: காய்கறி, பழங்களில் படிந்து இருக்கும் ஆபத்து.. நீக்க 5 சூப்பர் டிப்ஸ்!
Recommended image2
Hair Growth Foods: முடி ரொம்ப கொட்டுதா? அடர்த்தியா முடி வளர இந்த 11 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க.!
Recommended image3
Tulsi Planter Designs: வீட்டுக்கு அழகு சேர்க்கும் துளசி மாடம்... இந்த 4 டிசைன்ஸ் சூப்பரா இருக்கும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved