ஸ்டட்டின் கீழே சிறிய மணி தொங்குவது போல் இந்த கம்மல் இருக்கும். இதில் செய்யப்பட்டுள்ள பூ வேலைப்பாடுகள் கம்மலுக்கு தனி அழகு தருகின்றன. தினமும் அணிவதற்கு இது ஒரு சூப்பர் சாய்ஸ்.
சிறிய பூ வடிவ ஸ்டட்டும், கீழே அழகான பெல் தொங்கட்டானும் கொண்ட டிசைன் இது. இந்த கம்மலை வயதான பெண்கள் மட்டுமின்றி, இளம் பெண்களும் விரும்பி அணியலாம்.
சிம்பிள் & மாடர்ன் லுக் தரும் இரண்டு அடுக்கு சங்கிலி, பெல் தொங்கட்டான், முத்துக்கள் மற்றும் ஜாலி ஒர்க் கொண்ட நேர்த்தியான வடிவமைப்பு. இது உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்!
கலச வடிவிலான சிறிய ஸ்டட்டின் கீழே சிறிய மணி தொங்குவது போன்ற டிசைன் இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது முகத்திற்கும் இது அச்சிட்டது போல் அழகாகப் பொருந்தும்.
மேலே சிறிய மயில் வடிவ ஸ்டட்டும், கீழே சிறிய பாரம்பரிய ஜும்காவும் கொண்ட அழகான டிசைன் இது. 1 கிராம் எடையில் பாரம்பரிய தோற்றத்தை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.
தங்க வேலைப்பாடுகளுக்கு நடுவே சிறிய வண்ணக் கற்கள் பதிக்கப்பட்ட பெல் டிசைன் இது. பார்ட்டி அல்லது விசேஷங்களுக்கு சிம்பிளாகவும் கிராண்டாகவும் அணிய இது கச்சிதமாக இருக்கும்.