ஓஹ்! இந்த அதிகாலை மந்திரம் தெரிஞ்சாலே பெரிய பணக்காரனாகிடலாமா? இது தெரியாம போச்சே
5 AM கிளப் ரகசியம்: பெரிய CEOக்கள், தொழிலதிபர்கள், வெற்றியாளர்கள் அதிகாலை 5 மணிக்கு எழுந்திருப்பதைப் பற்றி அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். முகேஷ் அம்பானி, எலான் மஸ்க், டிம் குக், விராட் கோலி, அக்ஷய் குமார் - இவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு விஷயம் - அதிகாலையில் எழுந்திருப்பது.இதன் ரகசியத்தையும், அறிவியல் தொடர்பையும் தெரிந்து கொள்ளுங்கள்.

The 5AM Club
5AM கிளப் என்றால் என்ன?
5AM கிளப் என்பது பிரபல எழுத்தாளர் ராபின் ஷர்மா தனது 'தி 5AM கிளப்' என்ற புத்தகத்தில் உலகிற்கு அறிமுகப்படுத்திய ஒரு கருத்தாக்கம். தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து, வாழ்க்கையின் 3 முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் வெற்றி பெற முடியும் என்பதே இதன் பொருள்.
Morning Wakeup Tips
அதிகாலை செய்ய வேண்டிய மூன்று முக்கிய விஷயங்கள்
20 நிமிட உடற்பயிற்சி, ஓட்டம்; 20 நிமிட மனதை ஒருமுகப்படுத்துதல் - தியானம்; 20 நிமிட வளர்ச்சி கற்றல் - புத்தகம் படித்தல், ஒருவரின் வாழ்க்கையை மாற்றும். முன்னேறுவதற்கு இது பெரிதும் உதவும்.
Benefits of Early Morning Wakeup
அதிகாலை எழுந்திருப்பதன் அறிவியல் தொடர்பு
அதிகாலையில் மூளை புத்துணர்ச்சியுடன் இருக்கும். அப்போது மூளை அமைதியாகவும், தெளிவாகவும் இருக்கும். அதனால் நன்றாக கவனம் செலுத்த முடியும். அதிகாலை எழுபவர்களின் மன உறுதியும், சுய கட்டுப்பாடும் நாளின் மற்ற நேரங்களை விட அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
Mukesh Ambani
வெற்றியாளர்களும் அவர்களின் காலை வழக்கமும்
ஆப்பிள் CEO டிம் குக் அதிகாலை 4:30 மணிக்கு எழுந்திருப்பார். ஓப்ரா வின்ஃப்ரே அதிகாலை எழுந்து தியானம், உடற்பயிற்சி, எழுதுதல் போன்றவற்றைச் செய்வார். முகேஷ் அம்பானி அதிகாலை 5 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி, தியானம் செய்வார்.
5AM கிளப்பில் சேர்வது எப்படி?
நீங்களும் 5AM கிளப்பில் சேரலாம். ஒரு வாரம் தினமும் 15 நிமிடங்கள் முன்னதாக எழுந்திருங்கள். இரவில் சீக்கிரம் தூங்கச் செல்லுங்கள். கைபேசிக்காக செலவிடும் நேரத்தைக் குறைக்கவும். பல வெற்றியாளர்கள் வெற்றி அதிகாலையில் தொடங்குகிறது என்று நம்புகிறார்கள்.