MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இரவு சாப்பிட்ட பின் இதை செய்தால் வெயிட் சரசரவென குறையும்

இரவு சாப்பிட்ட பின் இதை செய்தால் வெயிட் சரசரவென குறையும்

உடல் எடை குறைப்பில் மிக முக்கியமான இரவு மற்றும் காலை நேர உணவும், நாம் கடைபிடிக்கும் சில பழக்க வழக்கங்களும் தான். அப்படி இரவு சாப்பிட்ட பிறகு சில பழக்கங்களை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். சமீப காலமாக இந்த பழக்கங்களை பலரும் கடைபிடிக்க துவங்கி உள்ளனர்.

2 Min read
Author : Priya Velan
Published : May 08 2025, 07:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
தாமதமாக இரவு உணவு உட்கொள்வது:

தாமதமாக இரவு உணவு உட்கொள்வது:

பலர் தாமதமாக இரவு உணவு உண்கின்றனர். இது உடல் எடையை குறைப்பதில் பெரும் தடையாக உள்ளது. தாமதமாக சாப்பிடுவதால், உணவு சரியாக செரிக்க நேரம் கிடைப்பதில்லை. மேலும், நாம் தூங்கும் போது உடலின் வளர்சிதை மாற்றம் (Metabolism) குறைகிறது. இதனால், கலோரிகள் எரிக்கப்படாமல் கொழுப்பாக சேமிக்கப்படுகின்றன.இரவு 7 மணிக்குள் அல்லது படுக்கைக்கு செல்லும் நேரத்திற்கு 2-3 மணி நேரத்திற்கு முன்பாக இரவு உணவை முடிப்பது நல்லது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
சரியான ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவை உட்கொள்வது:

சரியான ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவை உட்கொள்வது:

சிலர் இரவு உணவில் அதிக கலோரிகள், கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்கிறார்கள். இது உடல் எடையை அதிகரிக்கச் செய்வதுடன், ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை இரவு உணவில் சேர்ப்பது முக்கியம்.காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள், மற்றும் முழு தானியங்கள் போன்றவற்றை இரவு உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
 

36
போதுமான தூக்கம் இல்லாமை:

போதுமான தூக்கம் இல்லாமை:

உடல் எடை குறைப்பில் தூக்கம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாம் மறந்து விடுகிறோம். இரவு உணவு உண்டவுடன் தூங்கச் செல்வது மட்டுமல்லாமல், போதுமான நேரம் தூங்காமல் இருப்பதும் உடல் எடையை அதிகரிக்கும். தூக்கமின்மை ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து, பசியை அதிகரிக்கும் ஹார்மோனான கிரேலின் அளவை அதிகரிக்கிறது மற்றும் வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்தும் லெப்டின் அளவை குறைக்கிறது. இதனால், நாம் அதிகமாக சாப்பிட நேரிடுகிறது. தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே மொபைல் போன் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்ப்பது நல்ல தூக்கத்திற்கு உதவும்.
 

46
இரவு உணவுக்கு பிறகு உடனடியாக தலைசுற்றல் ஏற்படுவது:

இரவு உணவுக்கு பிறகு உடனடியாக தலைசுற்றல் ஏற்படுவது:

சிலருக்கு இரவு உணவு உண்ட உடனேயே தலைசுற்றல் அல்லது மயக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படலாம். இது இரத்த அழுத்த மாறுபாடு அல்லது செரிமான கோளாறு காரணமாக இருக்கலாம். ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் சரியான நேரத்தில் உணவு உட்கொள்வது இந்த நிலையை தவிர்க்க உதவும்.
 

56
தவறான நொறுக்குத் தீனிகளை (Snacks) :

தவறான நொறுக்குத் தீனிகளை (Snacks) :

இரவு உணவு உண்ட பிறகும் சிலர் பசித்தால், ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிகளை உட்கொள்கிறார்கள். சிப்ஸ், பிஸ்கட், இனிப்புகள் போன்ற அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.  இரவு உணவு உண்ட பிறகு பசித்தால், பழங்கள், தயிர், நட்ஸ் போன்ற ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை சிறிதளவு சாப்பிடலாம். பொதுவாக சாப்பிட்ட உடனேயே நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
 

66
தூங்கச் செல்வதற்கு முன்பு செய்ய வேண்டியவை:

தூங்கச் செல்வதற்கு முன்பு செய்ய வேண்டியவை:

-  இரவு உணவு உண்ட உடனேயே படுத்துக்கொள்வதற்கு பதிலாக, ஒரு 10-15 நிமிடம் மெதுவாக நடப்பது இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கவும், கலோரிகளை எரிக்கவும் உதவும். 

-  தூங்கச் செல்வதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பாவது மொபைல் போன், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களின் பயன்பாட்டை குறைத்து விடுங்கள்.

-  புத்தகம் படிப்பது, மெல்லிய இசை கேட்பது, தியானம் செய்வது போன்ற அமைதியான செயல்களில் ஈடுபடுங்கள்.   

-  நாள் முழுவதும் போதுமான தண்ணீர் குடிப்பது முக்கியம். இரவு உணவுக்குப் பிறகும் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கலாம். 

-  உங்கள் படுக்கையறை அமைதியாகவும், இருட்டாகவும், வசதியாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

-  சரியான வெப்பநிலை தூக்கத்திற்கு மிகவும் முக்கியம். தூங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
வாழ்க்கை முறை
ஆரோக்கியமான எடை இழப்பு பழக்கங்கள்
ஆரோக்கிய குறிப்புகள்
இரவு உணவு நடைப்பயிற்சி
 
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(22.0 ov) 98 & 74/3
Day 2
Schedule ›
26th T20 • WBBLT20
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
காரணமின்றி அதிக சோர்வு, எரிச்சல் வருகிறதா? இது ரத்தசோகையின் அறிகுறியாக இருக்கலாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை!
Recommended image2
Saree Maintaining Tips: புடவை ஆயுசுக்கும் புதுசா இருக்கும்... பெண்களுக்கே தெரியாத 10 புடவை ரகசியங்கள்!
Recommended image3
கண்ணாடிக்கு மாற்றாக லேசிக் சிகிச்சை.! யாருக்கு ஏற்றது, என்னென்ன பரிசோதனைகள் தேவை?!
Related Stories
Recommended image1
இரவு சாப்பிட்ட பின் 10 நிமிட 'குறுநடை'.. இந்த '9' நன்மைகள் கிடைக்கும்!!
Recommended image2
தினமும் இரவில் 'இந்த' நேரத்தில்  சாப்பிடுங்க!! எடை தானாக குறையும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved