இரவு சாப்பிட்ட பின் 10 நிமிட 'குறுநடை'.. இந்த '9' நன்மைகள் கிடைக்கும்!!

Walk After Dinner Benefits : இரவு உணவுக்குப் பிறகு சிறிது நேரம் நடப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு காணலாம். 

health benefits of a short walk after dinner in tamil mks

பொதுவாக இரவு உணவு சாப்பிட்ட பிறகு அமிலத்தன்மை, அஜீரணம், வாயு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதற்கு முக்கிய காரணம் சாப்பிட்டுவிட்டு உடனே தூங்குவது தான். இந்த பிரச்சினையை தடுக்க சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நடைபயிற்சி செய்வது மிகவும் நல்லது ஏனெனில் நடைபெற்று செரிமான தொடர்பான பல பிரச்சினைகளில் இருந்து உங்களை விலக்கி வைக்கும். ஆனால் இரவு சாப்பிட்ட பிறகு வாக்கிங் செல்வது செரிமானத்திற்கு மட்டுமல்ல உங்களது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று உங்களுக்கு தெரியுமா? இத்தகைய சூழ்நிலையில், இரவு சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் வாக்கிங் செல்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

health benefits of a short walk after dinner in tamil mks

இரவு சாப்பிட்ட பிறகு வாக்கிங் செல்வதால் கிடைக்கும் நன்மைகள்:

1. செரிமானத்தை மேம்படுத்தும்:

இரவு உணவுக்குப் பிறகு சில நிமிடம் குறுநடை போவதால் உங்களது செரிமானம் அமைப்பு தூண்டப்பட்டு குடல் வழியாக உணவு நகர்த்தப்படுகிறது. இதனால் வீக்கம், அஜீரண போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. எனவே இரவு சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் வாக்கிங் சென்றால்  செரிமான செயல்முறை மேம்படுத்தப்படும்.

2. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்:

சாப்பிட்ட பிறகு, குறிப்பாக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் ரத்த சர்க்கரை அளவு அடிக்கடி உயர்வதை நீங்கள் காண்பீர்கள். எனவே இரவு உணவுக்குப் பிறகு சில நிமிடம் குறுநடை போனால், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைகிறது. இது ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும். குறிப்பாக டைப் 2 நீரிழிவு போன்ற நூல்களை தடுக்க இப்படி நடப்பது ரொம்பவே நல்லது.

இதையும் படிங்க:  வாக்கிங் போறத வைச்சு உடல் 'ஆரோக்கியத்தை' கண்டுபிடிக்கலாம்.. எப்படி தெரியுமா? 

3. எடை இழப்புக்கு உதவும்:

இரவு உணவிற்குப் பிறகு சிறிது நேரம் நடை பயிற்சி செய்தால் கலோரிகள் எரிக்கப்படும் வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கும். அதாவது நீங்கள் சுமார் 15-20 நிமிடங்கள் நடைபயிற்சி செய்தால் எடை எரிப்பதற்கான வாய்ப்பை குறைக்கிறது. முக்கியமாக இந்த நடைப்பயிற்சியானது உங்களது உடலில் கலோரிகள் கொழுப்பாக சேமிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. ஆனால் ஆரோக்கியமான உணவுடன் இணைந்தால் மட்டுமே இது சாத்தியம்.

4. தூக்கத்தின் தரம் மேம்படும்:

இரவு சாப்பிட்ட பிறகு ஒரு சிறிய நடை உங்களது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் தெரியுமா? மேலும் நீங்கள் தீவிர உடற்பயிற்சி செய்தால் உங்களது தூக்கம் சீர்குலைந்து விடும். அதுவே நீங்கள் லேசான நடை பயிற்சி செய்தால் உங்களது உடல் தளர்ந்து ஓய்வெடுக்க தயாராக்கப்படும். மேலும் இது மன அழுத்த ஹார்மோனை குறைத்து, நீங்கள் இரவில் நன்றாக தூங்க உதவுகிறது.

இதையும் படிங்க:  இந்த '1' விஷயம் சரியா பண்ணாம 10,000 காலடிகள் நடந்தாலும் வேஸ்ட்தான் தெரியுமா?

5. மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது:

இரவு உணவிற்கு பிறகு சிறிது நேரம் நடப்பது உங்களது மனநிலை அதிகரிக்கவும் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. ஏனெனில் நடைபயிற்சியானது எண்டோர்பின்களை வெளியிடுகிறது. இதனால் பதட்டம், கவலை போன்றவற்றை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமின்றி வெளியில் நடப்பதன் மூலம் இயற்கை காற்றை சுவாசிக்க முடியும். இது மனதையும், உடலையும் அமைதிப்படுத்தும்.

health benefits of a short walk after dinner in tamil mks

6. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:

இரவு சாப்பிட்ட பிறகு லேசான நடைபெறுச்சு உங்களது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதாவது இரவு உணவுக்குப் பிறகு நடந்தால் ரத்த ஓட்டம் மேம்படும். இதனால் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு குறையும். இதன் காரணமாக இதய நோய் அபாயம் குறையும். நீங்கள் தினமும் இரவு உணவிற்கு பிறகு நடைபயிற்சி செய்தால் உங்களது இதயம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.

7. வீக்கம் மற்றும் அசெளகரியம் குறையும்:

நீங்கள் இரவு கனமான உணவை சாப்பிட்டால் உங்களுக்கு வீக்கம் ஏற்படும். காரணமாக வாயு மற்றும் அசெளகரியம் போன்ற உணர்வுகளை நீங்கள் அனுபவிக்கலாம். இத்தக சூழ்நிலையில் நீங்கள் இரவு சாப்பிட்ட பிறகு சிறிது தூரம் நடைபயிற்சி சென்றால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் குறையும்.

8. மனதை தெளிவுபடுத்தும்:

இரவு உணவுக்கு பிறகு சிறிது தூரம் வாக்கிங் சென்றால் உங்களது மனம் அலைந்து திரிவதற்கு பதிலாக ஆக்கப்பூர்வமாக சிந்திக்க தூண்டும். அதாவது பிஸியான சூழ்நிலையில் இருந்து உங்களை விலைக்கு வைக்கும். மேலும் இந்த நடைபயிற்சியானது உங்களது மனதை தெளிவுபடுத்தி புதிய சிந்தனையை சிந்திக்க தூண்டும்.

9. சுறுசுறுப்பான வாழ்க்கை முறை:

இரவு சாப்பிட்ட பிறகு சிறிது தூரம் நடைபயிற்சியான ஒரு உடற்பயிற்சியாக உங்களது தினசரி வழக்கத்தின் ஒரு பகுதியாக மாறிவிடும். இந்தப் பழக்கம் உங்களது தினசரி வாழ்க்கையில் இணைந்து விட்டால் நாள் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க இது உதவுகிறது. மேலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு இது அடித்தளமாக அமைகிறது.

இரவு சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?

இரவு உணவுக்குப் பிறகு எவ்வளவு நேரம் நடக்க வேண்டும் என்ற கேள்வி பெரும்பாலானோருக்கு இருக்கும். எனவே இரவு உணவுக்கு பிறகு குறைந்தது நீங்கள் 10-15 நிமிடங்கள் ஆவது கண்டிப்பாக நடந்தால் மட்டுமே செரிமான தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் மற்றும் உங்களது சர்க்கரை அளவு இயல்பாக இருக்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios