MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ஃபேஷன்
  • Expensive Wedding Outfits: இவ்ளோ விலையா? இந்தியாவின் டாப் 8 ஆடம்பர திருமண ஆடைகள்

Expensive Wedding Outfits: இவ்ளோ விலையா? இந்தியாவின் டாப் 8 ஆடம்பர திருமண ஆடைகள்

Expensive Wedding Outfits: ஈஷா அம்பானி, ஆலியா பட், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பிரபலங்கள் அணிந்த விலையுயர்ந்த திருமண ஆடைகளின் விலை எவ்வளவு? அட்டை வடிவமைப்பாளர் யார்? ஆடையின் சிறப்பம்சங்கள்என்ன? உள்ளிட்ட முழு விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

3 Min read
Author : Vishnupriya
Published : Sep 20 2026, 01:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
இந்தியாவின் ஆடம்பர திருமண ஆடைகள்
Image Credit : pinterest

இந்தியாவின் ஆடம்பர திருமண ஆடைகள்

இவ்ளோ விலையா? என்று ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு சில பிரபலங்களின் திருமண ஆடைகள் கோடிக்கணக்கில் விலை கொண்டவை. சாதாரண திருமணங்களில் பட்டு, ஜரி, கற்கள் ஆகியவற்றை வைத்து ஆடைகள் தேர்வு செய்யப்படும் நிலையில், பிரபலங்களின் திருமண ஆடைகளில் அரிய துணிகள், கைவேலைப்பாடுகள், தங்க நூல்கள், ஸ்வரோவ்ஸ்கி (Swarovski) கற்கள், வைரங்கள் என ஆடம்பரத்தின் உச்சமே இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக சில ஆடைகளின் விலை ஒரு சொகுசு வீடு அல்லது பல கார்களின் விலையைவிட அதிகமாக இருக்கிறது. இப்படி இந்தியாவின் டாப் ஆடம்பர திருமண ஆடைகள் யாருடையது? அதன் விலை என்ன என்பதை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
ஈஷா அம்பானி
Image Credit : Pinterest

ஈஷா அம்பானி

இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த திருமண ஆடையாக அதிகம் குறிப்பிடப்படுவது தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானியின் திருமண லெஹங்கா. அபு ஜானி–சந்தீப் கோஸ்லா (Abu Jani Sandeep Khosla) வடிவமைத்த இந்த ஆஃப்-வைட் நிற லெஹங்கா, 16 மடிப்புகளைக் (Panels) கொண்டது.

இதன் சிறப்பம்சமாக ஈஷா அம்பானியின் தாயார் நிதா அம்பானி தனது திருமணத்தின்போது அணிந்த 35 ஆண்டுகள் பழமையான சேலையின் ஒரு பகுதியும் இந்த லெஹங்காவில் இணைக்கப்பட்டிருந்தது.

இந்த லெஹங்காவின் மதிப்பு சுமார் ரூ.90 கோடி என கூறப்படுகிறது. பாரம்பரியமும் நவீன வடிவமைப்பும் இணைந்த இந்த ஆடை, தற்போது நிதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் (Nita Mukesh Ambani Cultural Centre) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

39
ஐஸ்வர்யா ராய்
Image Credit : Pinterest

ஐஸ்வர்யா ராய்

நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், அபிஷேக் பச்சனை திருமணம் செய்தபோது அணிந்திருந்த தங்க நிற காஞ்சிவரம் (Kanjivaram) புடவை இன்றும் பிரபலமான திருமண ஆடைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

நீதா லுல்லா (Neeta Lulla) வடிவமைத்த இந்தப் புடவையில் நுணுக்கமான தங்க நூல் வேலைப்பாடுகளுடன் (Gold embroidery) Swarovski crystals பதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் புடவையின் மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் எனக் கூறப்படுகிறது

49
சோனம் கபூர்
Image Credit : Pinterest

சோனம் கபூர்

நடிகை சோனம் கபூர் தனது திருமணத்தின்போது, வடிவமைப்பாளர் அனுராதா வக்கீல் (Anuradha Vakil) உருவாக்கிய பாரம்பரிய சிவப்பு மற்றும் தங்க நிற லெஹங்காவை அணிந்திருந்தார். நுட்பமான கைவேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்ட இந்த லெஹங்கா சுமார் ரூ.70 முதல் 80 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

59
ஷில்பா ஷெட்டி
Image Credit : Pinterest

ஷில்பா ஷெட்டி

நடிகை ஷில்பா ஷெட்டி தனது திருமணத்தின்போது தருண் தஹிலியானி (Tarun Tahiliani) வடிவமைத்த சிவப்பு நிற திருமண சேலையை அணிந்திருந்தார். இந்த ஆடையில் சுமார் 8,000 Swarovski crystals (ஸ்வரோவ்ஸ்கி படிகங்கள்) மற்றும் வைர வேலைப்பாடுகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் இருக்கும் என குறிப்பிட்டுள்ளன.

69
கரீனா கபூர்
Image Credit : Pinterest

கரீனா கபூர்

நடிகை கரீனா கபூர் தனது திருமணத்தில் பாரம்பரிய ஆடையைத் தேர்வு செய்திருந்தாலும், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் அணிந்திருந்த மனிஷ் மல்கோத்ரா (Manish Malhotra) வடிவமைத்த லெஹங்கா அதிக கவனம் பெற்றது. பர்கண்டி (Burgundy) நிறத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த லெஹங்காவின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

79
ஆலியா பட்
Image Credit : Pinterest

ஆலியா பட்

நடிகை ஆலியா பட், ரன்பீர் கபூரை திருமணம் செய்துகொண்டபோது, வடிவமைப்பாளர் சப்யசாச்சி முகர்ஜி (Sabyasachi Mukherjee) உருவாக்கிய ஐவரி (ivory)நிற organza புடவையை அணிந்திருந்தார்.

பார்ப்பதற்கு மிகவும் எளிமையான தோற்றம் கொண்டிருந்தாலும், அந்தப் புடவையில் நுணுக்கமான Tilla வேலைப்பாடுகள் மற்றும் கையால் நெய்யப்பட்ட tissue veil இடம்பெற்றிருந்தன. இந்தத் திருமண ஆடையின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் என மதிப்பிட்டுள்ளன.

89
அனுஷ்கா சர்மா
Image Credit : Pinterest

அனுஷ்கா சர்மா

நடிகை அனுஷ்கா சர்மா, விராட் கோலியை திருமணம் செய்துகொண்டபோது, சப்யசாச்சி முகர்ஜி Sabyasachi Mukherjee வடிவமைத்த பிங்க் நிற floral லெஹங்காவை அணிந்திருந்தார்.

கையால் செய்யப்பட்ட நுணுக்கமான எம்பிராய்டரி (embroidery) மற்றும் அழகிய floral motifs இடம்பெற்றிருந்த இந்த லெஹங்கா, அவரது திருமணத் தோற்றத்தின் முக்கிய சிறப்பம்சமாக அமைந்தது. இந்த ஆடையின் விலை சுமார் ரூ.30 லட்சம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

99
பிரியங்கா சோப்ரா
Image Credit : Pinterest

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸை திருமணம் செய்தபோது இந்திய திருமண நிகழ்ச்சிக்காக சப்யசாச்சி முகர்ஜி (Sabyasachi Mukherjee) வடிவமைத்த சிவப்பு லெஹங்காவை அணிந்திருந்தார். மிகவும் நுணுக்கமான எம்பிராய்டரி (embroidery), பாரம்பரிய இந்திய வடிவமைப்புகள் ஆகியவை இடம்பெற்றிருந்த இந்த லெஹங்காவின் விலை சுமார் ரூ.18 லட்சம் என கூறப்படுகிறது.

ஏன் இந்த திருமண ஆடைகள் இவ்வளவு விலை?

இந்த ஆடைகளின் விலை வெறும் துணியின் விலையை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. அவற்றில் இடம்பெறும் கைவேலைப்பாடு, அரிய துணிகள், தங்க ஜரி, Swarovski crystals, வைரங்கள், வடிவமைப்பு, பல மணி நேர கைவினை உழைப்பு மற்றும் பிரபல designer-களின் ஆடை வடிவமைப்புத் திறன் (couture craftsmanship) ஆகியவை விலையை அதிகரிக்கின்றன.

முக்கிய குறிப்பு: மேற்கண்ட ஆடைகளில் விலைகள் பல்வேறு செய்தி அறிக்கைகளின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பீடுகள் மட்டுமே. அனைத்து ஆடைகளுக்கும் சம்பந்தப்பட்ட நபர்கள் அல்லது வடிவமைப்பாளர்களால் அதிகாரப்பூர்வ விலை வெளியிடப்படவில்லை. எனவே, குறிப்பிடப்பட்டுள்ள தொகைகளை உறுதியான இறுதி விலையாகக் கருத வேண்டாம்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஃபேஷன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Silver Chain : வெறும் 1000 ரூபாயில், அசத்தலான டிசைனுடன் கலக்கலான வெள்ளி செயின்கள்!
Recommended image2
Anklet Designs : இதுமாதிரியான கொலுசு டிசைன்களை நீங்க பார்த்திருக்க வாய்ப்பே இல்லை!
Recommended image3
Rose Gold Earrings: 2 கிராம்ல அட்டகாசமான ரோஸ் கோல்டு கம்மல்! டெய்லி யூஸ்க்கு சூப்பரா இருக்கும்!
Related Stories
Recommended image1
Fashion Tips: புது டிரஸ் வேண்டாம்..இருக்கும் Dress-க்கே புது Look கொடுக்க இந்த Tricks-ஐ Try பண்ணுங்க!
Recommended image2
Dress Washing Tips: டிரஸ் கலர் சீக்கிரம் மங்குதா? துவைக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved