- Home
- Lifestyle
- Dress Washing Tips: டிரஸ் கலர் சீக்கிரம் மங்குதா? துவைக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க!
Dress Washing Tips: டிரஸ் கலர் சீக்கிரம் மங்குதா? துவைக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க!
Dress Washing Tips: டிரஸ் கலர் சீக்கிரம் மங்குகிறதா? துணி துவைக்கும் போது செய்யும் இந்த தவறுகளை தவிர்த்து, உங்களுக்கு பிடித்த ஆடைகளின் நிறத்தை நீண்ட நாட்கள் புதிதுபோல் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

டிரஸ் கலர் சீக்கிரம் மங்குதா?
புதிதாக வாங்கிய டிரஸ்ஸை முதல் சில முறை அணியும்போது இருக்கும் அந்த பளபளப்பும், நிறமும் தனி அழகாக இருக்கும். ஆனால், சில நாட்களிலேயே துணியின் Colour மங்கிவிடுவதால், எவ்வளவு பிடித்த டிரஸ்ஸாக இருந்தாலும் அதை அணியவே மனசு வராது.
எனவே, துணியின் நிறம் நீண்ட நாட்களுக்கு புதிதுபோல் இருக்க வேண்டும் என்றால், துணி துவைக்கும் போது நாம் செய்யும் சில பொதுவான தவறுகளை தவிர்ப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக Dark Colour துணிகள் மற்றும் பிரிண்ட் செய்யப்பட்ட ஆடைகளை துவைக்கும்போது கூடுதல் கவனம் தேவை.
அதிக நேரம் ஊற வைப்பது
“நன்றாக அழுக்கு போகட்டும்” என்று துணிகளை நீண்ட நேரம் தண்ணீரில் ஊறவைப்பது Colour மங்குவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். எனவே, சிறிது நேரம் மட்டும் ஊறவைத்து உடனடியாக துவைப்பது நல்லது. முதலில், துணிகளை Colour அடிப்படையில் பிரிக்க வேண்டும்.
Dark Colour, Light Colour மற்றும் White Colour துணிகளை ஒன்றாகப் போட்டு துவைக்காமல் தனிதனியாக துவைக்க வேண்டும். இல்லையெனில், அதன் நிறம் மற்ற துணிகளில் படிய வாய்ப்புள்ளது.
குறிப்பாக பிரிண்ட், Embroidery அல்லது Dark Colour உள்ள ஆடைகளை Inside Out முறையில் துவைப்பதால், துணியின் வெளிப்புறத்தில் ஏற்படும் உராய்வு குறையும். இதனால் நிறமும் பிரிண்ட்டும் நீண்ட நாட்களுக்கு அழகாக இருக்க உதவும்.
சூடான நீரில் துவைப்பது
அனைத்து துணிகளுக்கும் Hot Water பயன்படுத்துவது சரியானது அல்ல. அப்படி செய்தால் சில துணிகளின் நிறமும், Fabric தன்மையையும் பாதிக்கப்படும். Dark Colour Dress-களை குளிர்ந்த அல்லது சாதாரண தண்ணீரை பயன்படுத்தி துவைப்பதே சிறந்தது.
அதிக Detergent பயன்படுத்துவது
அதிக துணி பவுடர் (Detergent) போட்டால் துணியில் உள்ள அனைத்து அழுக்குகளும் போய்விடும் என எண்ணி அதிகப்படியான Detergent மற்றும் சோப்பு போடுவது, துணியின் நிறம் மற்றும் தன்மையை பாதிக்கும். எனவே, துவைக்கும் துணியின் அளவு மற்றும் அழுக்குக்கு ஏற்ப சரியான அளவு Detergent பயன்படுத்துவது நல்லது.
துணியை வெயிலில் காய வைப்பது
துவைத்த துணிகளை நீண்ட நேரம் கடுமையான வெயிலில் காய வைப்பதும் நிறம் மங்குவதற்கு காரணமாகலாம். முடிந்தால் ஆடைகளை தலைகீழாக திருப்பி, காற்றோட்டமான நிழலான இடத்தில் உலர்த்துவது சிறந்தது.
washing instructions-ஐ கவனிப்பது அவசியம்
துணியின் care label-ல் குறிப்பிடப்பட்டுள்ள washing instructions-ஐ கவனிப்பது மிகவும் அவசியம். Machine Wash, Hand Wash, Water Temperature போன்ற குறிப்புகளை பின்பற்றினால் துணியின் நிறத்தையும், தரத்தையும் நீண்ட நாட்களுக்கு பராமரிக்க முடியும்.
மொத்தத்தில், நல்ல தரமான Dress வாங்குவது மட்டுமல்லாமல், அதை எப்படி துவைக்கிறோம், எவ்வளவு நேரம் ஊறவைக்கிறோம், எப்படிக் காய வைக்கிறோம் என்பதும் அதன் நிறம் நீண்ட நாட்கள் மங்காமல் இருக்க முக்கியமானது. சிறிய கவனத்துடன் துவைத்தாலே, புதிதாக வாங்கிய Dress-ன் அழகையும் Colour-ஐயும் நீண்ட நாட்களுக்கு பராமரிக்க முடியும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

