- Home
- Lifestyle
- ஃபேஷன்
- Dress Buying Tips: புது டிரெஸ் வாங்கும்போது Size மட்டும் பாக்காதீங்க.. இந்த விஷயங்களையும் Check பண்ணுங்க!
Dress Buying Tips: புது டிரெஸ் வாங்கும்போது Size மட்டும் பாக்காதீங்க.. இந்த விஷயங்களையும் Check பண்ணுங்க!
Dress Buying Tips: புதிய Dress வாங்கும்போது Size மட்டும் பார்த்தால் போதுமா? Fabric, Fit, Stitching, Colour, Wash Care உள்ளிட்ட இந்த முக்கிய விஷயங்களை Check செய்து வாங்குவது முக்கியம்.

புது டிரெஸ் வாங்கப்போறீங்களா?
ஒரு புதிய டிரெஸ் வாங்கும்போது பார்த்ததும் பிடித்துவிட்டால், அடுத்த நொடியே நம்முடைய கவனம் என்ன Size? என்பதில்தான் இருக்கும். S, M, L, XL என சரியான அளவை தேர்வு செய்துவிட்டால் டிரெஸ் வாங்குவது முடிந்துவிட்டது என்று நினைக்கிறோம்.
ஆனால், கடையில் பார்க்கும்போது அழகாக இருந்த டிரெஸ், வீட்டிற்கு வந்த பிறகு முதல் சலவையிலேயே நிறம் மாறுவது, சுருங்குவது அல்லது தையல் பிரிவது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, Size மட்டும் பார்த்து டிரெஸ் வாங்காமால், துணியோட தரம், தையல், நிறம், Fit உள்ளிட்ட பல விஷயங்களையும் சரிபார்த்து டிரெஸ் வாங்குவது சிறந்தது.
துணியின் தரம் பார்த்து வாங்க வேண்டும்
முதலில், நாம் வாங்கும் டிரெஸ்ஸின் Fabric என்ன என்பதை கவனிக்க வேண்டும். காட்டன் (Cotton), லெனின் (Linen), Rayon, பாலியஸ்டர் (Polyester) அல்லது Blend என எந்த வகை துணி (Fabric) பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கையால் தொட்டு பார்த்து வாங்குவது முக்கியம்.
Size Chart-ஐ மட்டும் நம்பாதீர்கள்
ஒரே S அல்லது M Size டிரெஸ் வெவ்வேறு நிறுவனங்களில் வெவ்வேறு அளவில் இருக்கலாம். குறிப்பாக Online-ல் வாங்கும்போது உங்கள் Bust, Waist, Hip, Shoulder, Length போன்ற அளவுகளை Size Chart-உடன் ஒப்பிட்டு வாங்குவது நல்லது.
தையல் தரத்தை செக் பண்ணுங்க
டிரெஸ் வாங்கும்போது, "எடுத்தோம் கவுத்தோம்" என மேற்புறம் மட்டும் பார்க்காமல், உள்ளே திருப்பிப் பார்த்து தையல் நேராகவும், சீராகவும் உள்ளதா, Loose Threads இருக்கிறதா, துணி சுருங்கியுள்ளதா? என்பதை சரிபார்க்க வேண்டும்.
குறிப்பாக, Zipper, Button, Hook போன்றவற்றை திறந்து, மூடிப் பார்த்து சரியாக செயல்படுகிறதா? என்பதை உறுதி செய்து கவனமாக வாங்க வேண்டும்.
Wash Care-ஐ கவனியுங்கள்
Dark அல்லது Bright Colour ஆடைகளை வாங்கும்போது நிறம் எளிதில் மங்குமா? என்பது குறித்து டிரெஸ்ஸின் Care Label-ல் கொடுக்கப்பட்டுள்ள Washing Instructions-ஐ தவறாமல் படிக்க வேண்டும்.
Hand Wash Only, Dry Clean Only போன்ற பராமரிப்பு விதிமுறைகள் இருந்தால், அதை தொடர்ந்து பராமரிக்க முடியுமா என்பதை யோசித்து வாங்குங்கள். அதிக பராமரிப்பு தேவைப்படும் உடையை அடிக்கடி பயன்படுத்தினால் கூடுதல் செலவும், நேரமும் ஏற்படலாம்.
Fit மற்றும் Comfort
Size சரியாக இருந்தாலும் போடும்போது தோள்பட்டை, கழுத்து, கைப்பகுதி அல்லது இடுப்பில் அதிக இறுக்கம் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். உட்காரும்போதும், கைகளை அசைக்கும்போதும் சிரமம் இல்லாமல் இருக்க வேண்டும்.
எனவே, அடுத்த முறை புதிய Dress வாங்கும்போது எனக்கு எந்த Size? என்பதை மட்டும் கேட்காமல், துணி எப்படி? Fit எப்படி? தையல் தரம் எப்படி? Wash Care என்ன? என்பதையும் Check செய்த பிறகே வாங்குங்கள். இதனால் அழகாக இருப்பதோடு, நீண்ட நாட்கள் பயன்படுத்தக்கூடிய ஆடையையும் தேர்வு செய்ய முடியும்.

