MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • Air india plane crash: 38 வினாடிகளில் எல்லாம் முடிந்தது.. விமானத்தில் நிமிடத்திற்கு நிமிடம் நடந்தது என்ன.?

Air india plane crash: 38 வினாடிகளில் எல்லாம் முடிந்தது.. விமானத்தில் நிமிடத்திற்கு நிமிடம் நடந்தது என்ன.?

ஜூன் 12 அன்று நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கான முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகி, விமானம் புறப்பட்ட சில நொடிகளில் என்ஜின்கள் நின்று விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Jul 12 2025, 02:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஏர் இந்தியா விமான விபத்து
Image Credit : AAIB report and ANI

ஏர் இந்தியா விமான விபத்து

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய விமான விபத்து ஜூன் 12 அன்று நடைபெற்றுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (AI-171, போயிங் 787-8 ட்ரீம்லைனர்) புறப்பட்ட சில நொடிகளில் மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி வெடித்து சிதறியது. 

இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 242 பயணிகளில் 241 பேர் உள்ளிட்ட 260 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் விமான விபத்து நடைபெற்று ஒரு மாத காலம் முடிவடைந்துள்ள நிலையில் இன்று விமான விபத்திற்கான காரணம் தொடர்பாக முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் விமான விபத்திற்கு முன்பாக நடந்தது என்ன.? என தகவல்கள் இடம்பெற்றுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
விபத்தின் போது விமானத்தில் நடந்தது என்ன.?
Image Credit : ANI

விபத்தின் போது விமானத்தில் நடந்தது என்ன.?

அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மதியம் 1:38 மணிக்கு புறப்பட்டது.விமானம் 32 வினாடிகள் மட்டுமே வானத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. புறப்படும் போது, விமானம் மணிக்கு 284 கிமீ வேகத்தை எட்டியது. அடுத்த இரண்டு வினாடிகளில், விமானம் மணிக்கு 287 கிமீ வேகத்தை எட்டியது. அதன் பிறகு விமானத்தின் சக்கரங்கள் தரையில் இருந்து உயர்ந்தன.

அடுத்த மூன்று வினாடிகளில், விமானம் மணிக்கு 334 கிமீ வேகத்தை எட்டியது. உடனடியாக, அப்போது யாரும் எதிர்பாராத வகையில் இரண்டு என்ஜின்களும் திடீரென நின்றுவிட்டன. இதனால் விமானம் பறக்க வேண்டிய உயரத்தை இழந்து RAT (ராம் ஏர் டர்பைன்) ஐப் பயன்படுத்த வேண்டியிருந்தது. இரண்டு என்ஜின்களும் நின்றாலோ அல்லது ஹைட்ராலிக் சக்தி இழந்தாலோ RAT பயன்படுத்தப்பட்டது ஆனால் உயரத்தில் மட்டுமே RAT வேலை செய்யும் என்பதால் விமானத்தில் நிலைப்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகியதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Related image1
விமானம் நொறுங்கும் நொடியில் பைலட்கள் பேசியது என்ன.? வெளியான கடைசி திக் திக் நிமிடங்கள்
Related image2
ஏர் இந்தியா விமான விபத்து: என்ஜின் ஏன் நின்றது.? 10 அதிர்ச்சி தகவல்கள்
34
விமானம் புறப்பட்டது முதல் விபத்து வரை நிமிடத்திற்கு நிமிட விவரங்கள்
Image Credit : ANI

விமானம் புறப்பட்டது முதல் விபத்து வரை நிமிடத்திற்கு நிமிட விவரங்கள்

  • 11:17 – விமானம் டெல்லியிலிருந்து அகமதாபாத்தை வந்தடைந்தது.
  • 11:55 – விமானிகளுக்கு மூச்சுப் பரிசோதனையை மேற்கொண்டனர்.
  •  விமானம் பறக்கத் தயாராக உள்ளது.
  • 12:10 – தொழில்நுட்ப ஆய்வுக்குப் பிறகு விமானம் புறப்பட அனுமதி வழங்கப்பட்டது.
  • 12:35 – சிசிடிவி காட்சிகள், விமானப் பணியாளர்கள் ஏறும் வாயிலுக்கு வருவதைக் காட்டுகிறது.
  • 1:18:38 – விமானம் பே 34 இலிருந்து புறப்பட்டது.          
  • 1:25:15 - விமானம் டாக்ஸி அனுமதி பெற்றது.
  • 1:26:08 - விமானம் டாக்ஸி ஓட்டத் தொடங்கியது.
  • 1:37:33 - விமானம் புறப்பட அனுமதி பெற்றது.
  • 1:37:33 – விமானம் புறப்படுவதற்காக மெதுவாக நகர தொடங்கியது.
44
செயழிலந்த என்ஜின்- கட் ஆன எரிபொருள் இணைப்பு
Image Credit : X-@aviationbrk

செயழிலந்த என்ஜின்- கட் ஆன எரிபொருள் இணைப்பு

  • 1:38:33 – விமானம் மணிக்கு 283 கிமீ வேகத்தை எட்டியது.
  • 1:38:35 – விமானம் மணிக்கு 287 கிமீ வேகத்தை எட்டியது.
  • 1:38:39 – விமானம் புறப்பட்டது.
  • 1:38:42 – விமானம் மணிக்கு 333 கிமீ வேகத்தை எட்டியது.

அதன் பிறகு திடீரென: எஞ்சின் 1, 2 எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சுகள் CUTOFF க்கு சென்றன.

  • 1:38:47 – RAT (ராம் ஏர் டர்பைன்) நிலைநிறுத்தப்பட்டது. விமானம் கீழே இறங்கத் தொடங்கியது.
  • 1:38:52 – எஞ்சின் 1 கட்ஆஃப் RUNக்குக் கொண்டுவரப்பட்டது.
  • 1:38:54 – APU நுழைவாயில் கதவு திறக்கத் தொடங்குகிறது.
  • 1:38:56 – எஞ்சின் 2 கட்ஆஃப் RUN க்கு கொண்டு வரப்பட்டது.
  • 1:39:05 – பைலட் மேடே அழைப்பை மேற்கொண்டார்.
  • 1:39:11 – EAFAR பதிவு நிறுத்தப்பட்டது, விமானம் விபத்துக்குள்ளானது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
இந்தியா
ஏர் இந்தியா
வானூர்திப் பயணங்கள்
விபத்து

Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay: தேசிய அரசியலில் சங்கமிக்கும் தமிழக முதல்வர் விஜய்.! ஒரே நேரத்தில் இரட்டை குதிரை சவாரி.! சோனியா, மோடியை சந்திக்கும் தளபதி.!
Recommended image2
CNG Price Hike: மீண்டும் எகிறிய CNG விலை! 2 வாரத்தில் 4-வது அடி... மக்கள் தலையில் அடுத்த சுமை!
Recommended image3
Petrol Diesel GST: பெட்ரோல், டீசல் GST-க்குள் வந்தால் என்ன நடக்கும்? விலை குறையுமா?
Related Stories
Recommended image1
விமானம் நொறுங்கும் நொடியில் பைலட்கள் பேசியது என்ன.? வெளியான கடைசி திக் திக் நிமிடங்கள்
Recommended image2
ஏர் இந்தியா விமான விபத்து: என்ஜின் ஏன் நின்றது.? 10 அதிர்ச்சி தகவல்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved