- Home
- இந்தியா
- Sleep Internship: 60 நாள் தூங்கி ரூ.9.6 லட்சம் வென்ற இளம்பெண்! யார் அந்த இந்தியன் ஸ்லீப் லேடி?
Sleep Internship: 60 நாள் தூங்கி ரூ.9.6 லட்சம் வென்ற இளம்பெண்! யார் அந்த இந்தியன் ஸ்லீப் லேடி?
Sleep Internship : வேக்ஃபிட் நிறுவனம் நடத்திய ஸ்லீப் இன்டர்ன்ஷிப் போட்டியில் மும்பையை சேர்ந்த ஜினியா சாட்டர்ஜி தூங்கியே ரூ. 9.6 லட்சம் வென்றுள்ளார். 60 நாட்கள் நடந்த இந்த போட்டியில் அவர் முதல் பரிசை தட்டிச்சென்றுள்ளார்.

60 days continuous sleeping challenge
அலுவலகமா இருந்தாலும் சரி, மீட்டிங்கா இருந்தாலும் சரி, வேலை செய்யுறப்பவே தூங்குற ஆளுங்க நிறைய பேர் இருக்காங்க. தூக்கமே வராம கஷ்டப்படுறவங்க ஒரு பக்கம்னா, எந்த கவலையும் இல்லாம எங்க வேணாலும் தூங்குறவங்க இன்னொரு பக்கம். ஆபீஸ்ல தூங்கிட்டே சம்பளம் வாங்கலாம்னு நாம விளையாட்டா சொல்றதுண்டு. ஆனா இங்க ஒருத்தர் தூங்கியே 9.6 லட்ச ரூபாயை ஜெயிச்சிருக்காங்க!
இந்த தூங்குற போட்டிக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான பேர் அப்ளை பண்ணிருந்தாங்க. கடைசியா 10 பேர் செலக்ட் ஆனாங்க. அதுல ஒரு இளம்பெண் தான் வின்னர். அட, இது என்னப்பா புதுசா இருக்கு? முன்கூட்டியே தெரிஞ்சிருந்தா நானும் போயிருப்பேனேனு நினைக்குறீங்களா?
ரூல்ஸ் என்ன?
வேக்ஃபிட் நிறுவனம் அவங்களோட ஸ்லீப் இன்டர்ன்ஷிப் திட்டத்துக்காக இந்த போட்டியை நடத்தினாங்க. மும்பையை சேர்ந்த ஜினியா சாட்டர்ஜி தான் இதுல வின்னர். இதன் மூலமா 9.6 லட்ச ரூபாயை அவர் ஜெயிச்சிருக்கார். நல்லா தூங்கணும், சரியான ரொட்டீனை மெயின்டெயின் பண்ணணும், வார வாரம் நடக்குற சேலஞ்ச்ல கலந்துக்கிட்டு லீடர்போர்டுல இடம் பிடிக்கணும். இதுதான் இந்த போட்டியோட ரூல்ஸ். 60 நாட்கள் நடந்த இந்த போட்டியில, அவங்களோட தூக்கத்தை டிராக் பண்ணுவாங்க. தினசரி ஸ்கோரை அதிகப்படுத்துறது தான் போட்டியாளர்களின் வேலை.
இது வெறும் தூங்குற போட்டி மட்டுமில்ல. வார வாரம் அவங்களோட கிரியேட்டிவிட்டி மற்றும் திறமையை சோதிக்கும் பல வித்தியாசமான டாஸ்க்குகளும் இருந்துச்சு. ஸ்லீப் சினிமா, ஸ்லீப் பிங்கோ போன்ற டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுச்சு. அண்டர்கவர் ஸ்லீப் மிஷன் என்ற டாஸ்க்ல, போட்டியாளர்கள் மத்தவங்ககிட்ட பேசும்போது 'போர்வை' அல்லது 'தலையணை' என்ற வார்த்தையை யாருக்கும் தெரியாம 10 தடவை பயன்படுத்தணும். வார வாரம் பெஸ்ட்டா பண்றவங்களுக்கு ப்ரோ ஸ்லீப்பர் என்ற பட்டமும் கொடுத்தாங்க.
டாப் 3 போட்டியாளர்கள்
போட்டியோட கடைசியில ரத்னகிரி மணிகண்டன், ஜினியா சாட்டர்ஜி, மெஹெக் கோட் ஆகியோர் டாப் 3 இடங்களை பிடிச்சாங்க. ஆனா, வாராந்திர சேலஞ்ச்ல அதிக வெற்றி பெற்றதால ஹைதராபாத்தை சேர்ந்த கரீம் கான் வைல்ட் கார்டு என்ட்ரியா வந்தாரு. இதனால் 4 பேர் பிக் பெட் என்ற கிராண்ட் பினாலேக்கு போனாங்க. ரியாலிட்டி ஷோ மாதிரி நடந்த இந்த ஃபைனல்ல, பல டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுச்சு.
மெமரி ஃபோம் சேலஞ்ச்
மெமரி ஃபோம் சேலஞ்ச்ல, போட்டியாளர்கள் ஒரு போட்டோவை பார்த்து அதே மாதிரி பெட்ரூம் செட் அப்பை உருவாக்கணும். இது அவங்களோட நினைவாற்றல், கவனிக்கும் திறன் மற்றும் டீம் வொர்க்கை சோதித்துச்சு. அடுத்து ஸ்லீப் ஆக்ஷன் என்ற டாஸ்க்ல, அவங்களுக்கு தேவையான தலையணை, போர்வை, ஏசி, லைட் மற்றும் சவுண்ட் செட்டிங்ஸ் ஆகியவற்றை ஏலம் எடுக்கணும். இதுல தொகுப்பாளரும் இன்ஃப்ளூயன்சருமான அனுஜ் குப்தா பாடிய ரேப் தாலாட்டும் இருந்துச்சு. செட் அப் ரெடியானதும், அவங்க கடைசி நைட்டை அங்க கழிச்சாங்க. அந்த ராத்திரி அவங்களோட தூக்கத்தின் ஸ்கோரை வெச்சு தான் வின்னரை முடிவு பண்ணாங்க.
கடைசியா ஸ்கோரை வெச்சு பார்க்குறப்போ, ஜினியா சாட்டர்ஜி வின்னரா அறிவிக்கப்பட்டார். அவர் 9.6 லட்ச ரூபாயை ஜெயிச்சு, ஸ்பான்சர் ட்ரிப்புடன் இன்டர்ன்ஷிப்பின் 5வது சீசனை முடிச்சு வச்சார். 2019ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஸ்லீப் இன்டர்ன்ஷிப் முதல் 4 சீசன்ல 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்களை வாங்கியிருக்கு. இதுவரை 65 பேருக்கு தலா 1 லட்ச ரூபாய் ஸ்டைபெண்ட் கொடுக்கப்பட்டிருக்கு.













