இன்றைய TOP 10 செய்திகள்: மதுரை ஆதீனத்துக்கு நிம்மதி... பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு!
மதுரை ஆதீனத்துக்குக் கிடைத்த நிம்மதி, பிரதமர் மோடிக்குக் கிடைத்த பரிசு, விஜயின் தவெக மதுரை மாநாட்டுக்கு காவல்துறையின் விதிமுறைகள் உள்ளிட்ட இன்றைய டாப் 10 முக்கியச் செய்திகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

மோடிக்கு சுக்லாவின் பரிசு
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கான ஆக்ஸியம்-4 விண்வெளி திட்டத்தின் விமானி சுபான்ஷு சுக்லாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். ககன்யான் திட்டம் குறித்து இருவரும் விரிவாகப் பேசினர். சுக்லாவை ஆரத்தழுவி வரவேற்ற பிரதமர் மோடி, அவரது தோளில் கைவைத்து நடந்து சென்றார். சந்திப்பின்போது, சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம்-4 திட்டத்திற்கான இலச்சினையையும் (patch), சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட புவியின் புகைப்படங்களையும் பிரதமரிடம் வழங்கினார்.
தேர்தல் ஆணையத்தை விடாத திமுக.!
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டது, ராகுல் காந்தியின் குற்றம் சாட்டு. இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
எச் .ராஜாவுக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.!
தமிழக பாஜகவில் மூத்த தலைவர்களுக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது எச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலியாக உள்ள ஆளுநர் பதவிகளில் ஒன்று எச்.ராஜாவுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக மதுரை மாநாடு
தமிழக வெற்றி கழகத்தின் மதுரை மாநாட்டிற்கான போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கான வழித்தடங்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கான மாற்றுப்பாதைகள் குறித்த விவரங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, பைக்கில் வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை ஆதினத்துக்கு நிம்மதி
மதுரை ஆதீனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என போலீசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் மதுரை ஆதீனத்தின் மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் எனவும் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன் மீதான வழக்கை ரத்து செய்யக்க்கோரி மதுரை ஆதினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கு
வருவாய் அமைச்சராக இருந்தபோது சொத்து சேர்த்ததாக ஐ.பெரியசாமி மீதான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
விஜய்யை போட்டுத்தாக்கிய சீமான்
செஞ்சிக் கோட்டையை சிவாஜி கட்டவில்லை, தமிழரான கோனேரிக்கோன் மன்னன் கட்டியதாக நாம் தமிழர் கட்சி கூறுகிறது. செஞ்சி கோட்டை மீட்பு பொதுக்கூட்டத்தில் சீமான், தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளை மறைத்ததாகவும், விமர்சித்தார்.
சக்கைப்போடு போடும் கூலி படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கூலி' படம் ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகி, உலகளவில் ரூ.350 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் எப்போது OTTயில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 'கூலி' படத்தின் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் ஆகி வருகின்றன. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படம், திரையரங்கு வெளியீடு முடிந்த பிறகு அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
மோடி - சி.பி.ஆர் சந்திப்பு
துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை பிரதமர் மோடி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து செப்டம்பர் 9-ம் தேதி துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது.
இந்திய ராணுவத்தில் விலங்குகள்
இந்திய ராணுவத்தில் குதிரைகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள் மற்றும் நாய்கள் உட்பட சுமார் 12,600 விலங்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விலங்குகள் குண்டுகளைக் கண்டறிதல், மீட்புப் பணிகள் போன்ற பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.