MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • யுஜிசிக்கு உச்சநீதிமன்றம் செக்.. புதிய விதிமுறைகளுக்கு அதிரடி தடை! நீதிபதிகள் சொன்ன காரணம் இதுதான்!

யுஜிசிக்கு உச்சநீதிமன்றம் செக்.. புதிய விதிமுறைகளுக்கு அதிரடி தடை! நீதிபதிகள் சொன்ன காரணம் இதுதான்!

யுஜிசி புதிய விதிகள் சமத்துவத்திற்குப் பதிலாக கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களில் பாகுபாட்டை ஊக்குவிக்கும் என பல்வேறு இடங்களில் பொதுப்பிரிவு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2 Min read
Author : Rayar A
Published : Jan 29 2026, 02:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
யுஜிசியின் புதிய விதிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை
Image Credit : Getty

யுஜிசியின் புதிய விதிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை

பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அண்மையில் கொண்டு வந்த 'உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான விதிமுறைகள் 2026' என்ற புதிய விதிகளுக்கு உச்சநீதிமன்றம் இன்று (ஜனவரி 29) அதிரடியாக தடை விதித்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை தடுக்கும் வகையில் யுஜிசி இந்த புதிய விதிகளை கொண்டு வந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
பொதுப்பிரிவினரை ஒதுக்கி வைக்கும் விதிகள்
Image Credit : Getty

பொதுப்பிரிவினரை ஒதுக்கி வைக்கும் விதிகள்

யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யட்டது. யுஜிசியின் புதிய விதிகள் சாதி அடிப்படையிலான பாகுபாடு என்பது SC, ST மற்றும் OBC பிரிவினருக்கு எதிராக நடப்பதை மட்டுமே குறிக்கும் என வரையறுக்கப்பட்டிருந்தது. 

இது பொதுப்பிரிவினரை ஒதுக்கி வைப்பதாக அமைந்துள்ளது. இது சமூகத்தில் மேலும் பிளவுகளுக்கு வழிவகுக்கும் என்பதால் யுஜிசியின் புதிய விதிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் தெரிவித்து இருந்தனர்.

உச்சநீதிமன்றம் சொன்ன காரணம்

இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் யுஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு தடை விதித்துள்ளது. யுஜிசியின் புதிய விதிமுறைகள் முற்றிலும் தெளிவற்றதாக உள்ளது. இது தவறாகப் பயன்படுத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் 2012-ஆம் ஆண்டு யுஜிசி விதிமுறைகளே தொடர்ந்து பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.

33
யுஜிசியின் புதிய விதி என்ன சொல்கிறது?
Image Credit : Getty

யுஜிசியின் புதிய விதி என்ன சொல்கிறது?

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டைக் கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட யுஜிசி புதிய விதிமுறைகள், குறிப்பாக பட்டியல் சாதிகள் (SC), பழங்குடியினர் (ST), மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs) பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களின் புகார்களைக் கையாள, நிறுவனங்கள் சிறப்பு குழுக்கள் மற்றும் உதவி எண்களை நிறுவ வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

பொதுப்பிரிவு மாணவர்கள் போராட்டம்

யுஜிசியின் புதிய விதிமுறைகள் பொதுப் பிரிவு மாணவர்களிடையே பரவலான விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்த கட்டமைப்பு தங்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்ட வழிவகுக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விதிகள் சமத்துவத்திற்குப் பதிலாக கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களில் பாகுபாட்டை ஊக்குவிப்பதாக பல்வேறு இடங்களில் பொதுப்பிரிவு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அமைச்சர் விளக்கம்

இது குறித்து விளக்கம் அளித்திருந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ''யுஜிசியின் புதிய விதிகளில் யாருக்கும் எந்தப் பாகுபாடும் காட்டப்படாது. சட்டத்தை யாரும் தவறாகப் பயன்படுத்த முடியாது என்றும் நான் அனைவருக்கும் உறுதியளிக்கிறேன்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
உச்ச நீதிமன்றம்
இந்தியா
மத்திய அரசு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Special Trains: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? இந்த சிறப்பு ரயில்களில் சீட் காலியா இருக்கு!
Recommended image2
DA Hike Good News: அகவிலைப்படி 63% ஆகிறதா? மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! மாத சம்பளத்தில் எவ்வளவு கூடும்?
Recommended image3
VDA Hike: குறைந்தபட்ச ஊதியம் ரூ.1,111.! அனைத்து தொழிலாளர்களுக்கும் புதிய சம்பளம்.! அதிரடியாக உயர்ந்த VDA!
Related Stories
Recommended image1
'ஆன்லைன்ல இனி இந்த கோர்ஸ் படிக்க முடியாது!'.. யுஜிசி ஏன் இந்த முடிவை எடுத்தது? முழு விவரம் உள்ளே!
Recommended image2
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படவில்லை: யுஜிசி விளக்கம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved