விமான டிக்கெட் பாதிக்கு பாதி விலை குறைப்பு; இனி ஜாலியாக பறக்கலாம்; பயணிகளுக்கு ஜாக்பாட்!
இந்திய விமான நிறுவனம் டிக்கெட் கட்டணத்தில் மெகா தள்ளுபடியை அறிவித்துள்ளது. பாதிக்கு பாதி டிக்கெட் விலை குறைக்கப்பட்டுள்ளது.
STAR AIR
விமான டிக்கெட் தள்ளுபடி
இந்தியாவில் இப்போது விமான போக்குவரத்து முக்கியமானதாகி விட்டது. நடுத்தர மக்களும் அதிகளவில் விமானங்களில் பயணிக்கத் தொடங்கி விட்டனர். இதன் காரணமாக விமான நிறுவனங்கள் போட்டி போட்டு தள்ளுபடியை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் 'ஸ்டார் ஏர்' நிறுவனம் மெகா தள்ளுபடியை அறிவித்து இருக்கிறது.
அதாவது சஞ்சய் கோதாவத் குழுமத்தின் விமானப் பிரிவான ஸ்டார் ஏர், விமானத் துறையில் அதன் ஆறாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்தியா முழுவதும் உள்ள விமானங்களில் பயணிகளுக்கு தள்ளுபடி கட்டணங்களை வழங்குகிறது. இந்த சலுகையின்படி ஜனவரி 22 முதல் ஜனவரி 29 பயணிகள் ரூ.1950 முதல் தொடங்கும் கட்டணத்திலும், ரூ.3099 முதல் பிஸ்னஸ் கிளாஸ் கட்டணத்திலும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
தள்ளுபடி சிறப்பம்சங்கள்
இந்த சலுகை செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாக இருக்கும். மொத்தமாக 66,666 விமான இருக்கைகளுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த விற்பனையின் முக்கிய சிறப்பம்சங்கள்:
*எந்த ஒரு விமானத்திலும் பயணிக்க ரூ.1,950ல் இருந்து கட்டணம் தொடங்கும்.
*பிஸ்னஸ் கிளாஸ் வகுப்புக்கு ரூ.3099ல் இருந்து டிக்கெட் புக் செய்து கொள்ள முடியும்.
* ஜனவரி 22 முதல் ஜனவரி 29 வரை மட்டுமே இந்த தள்ளுபடி விலையில் புக் செய்ய முடியும்.
* செப்டம்பர் 30ம் தேதி வரை பயணிக்கும் விமானங்களுக்கு புக் செய்து கொள்ளலாம்.
* அனைத்து விமானங்களுக்கும் சிறப்பு தள்ளுபடி பொருந்தும். இதேபோல் பயணிக்கும் நேரம், கால அளவு கட்டுப்பாடுகளுமில்லை.
* மொத்தமாக 66,666 விமான இருக்கைகளுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த இருக்கைகள் நிரம்பி விட்டால் தள்ளுபடி முடிந்து விடும்.
ஒரே ஆண்டில் 16.1 கோடி! புதிய உச்சம் தொட்ட உள்நாட்டு விமானப் பயணங்கள்!
விமான நிறுவனம் பெருமை
'ஸ்டார் ஏர்' நிறுவனத்தின் இந்த தள்ளுபடி பயணிகளுக்கு வரப்பிரசாதாமாக அமைந்துள்ளது. டெல்லி மும்பை, சென்னை பெங்களூரு, சென்னை திருவனந்தபுரம் விமானங்களில் கட்டணம் அதிகமாக இருக்கும் நிலையில், இந்த தள்ளுபடி மூலம் பாதிக்கு பாதி டிக்கெட் விலையில் பயணிக்க முடியும்.
இது குறித்து ஸ்டார் ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேப்டன் சிம்ரன் சிங் திவானா தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். ''எங்கள் விமான நிறுவனம் தொடங்கி ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஒரு காலத்தில் சென்றடைய கடினமாக இருந்த பகுதிகளுக்கு விமானப் பயணத்தை அணுகக்கூடியதாக மாற்றுவதில் நாங்கள் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
பாதுகாப்பான பயணம்
2019 முதல், நாங்கள் 1.3 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளோம், மேலும் எங்கள் ஆண்டுவிழா விற்பனை, பிராந்திய இணைப்பை நாங்கள் தொடர்ந்து விரிவுபடுத்தி மறுவரையறை செய்யும் போது எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு நன்றி சொல்லும் வழியாக இந்த தள்ளுபடியை அறிவிக்கிறோம்'' என்றார். ஸ்டார் ஏர் நிறுவனம் இந்தியாவில் மலிவு விலை விமான சேவை வழங்குவதில் முன்னோடியாக உள்ளது.
இந்தியாவின் 2 ஆம் நிலை மற்றும் 3 ஆம் நிலை நகரங்களுக்கு மலிவு விலையில் விமானப் பயணத்தைக் கொண்டுவருவதில் கவனம் செலுத்தி வரும் இந்த விமான நிறுவனம் தொடக்கத்திலிருந்தே ஈர்க்கக்கூடிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில் ஸ்டார் ஏர் இரண்டு ஆண்டுகளில் கோலாப்பூர்-மும்பை வழித்தடத்தில் பயணிகள் போக்குவரத்தில் சாதனை படைத்தது.
எம்ப்ரேயர் E175 மற்றும் எம்ப்ரேயர் E145 உட்பட ஒன்பது விமானங்களைக் கொண்ட ஸ்டார் ஏர், பாதுகாப்பான, விரைவான மற்றும் நிலையான விமானப் பயணத்தை வழங்க உறுதிபூண்டுள்ளது.
அபராதம் செலுத்தாவிட்டால் டிரைவிங் லைசென்ஸ் ரத்து; அரசு அதிரடி; வாகன ஓட்டிகளே உஷார்!