ஒரே ஆண்டில் 16.1 கோடி! புதிய உச்சம் தொட்ட உள்நாட்டு விமானப் பயணங்கள்!
Domestic flights record in 2024: 2024ஆம் ஆண்டில் 16.1 கோடி பயணிகள் உள்நாட்டு விமானங்களில் பயணித்துள்ளனர். இதன் மூலம் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் 15.2 கோடியை விட 6 சதவீதம் அதிகம்.
Domestic flights
புதன்கிழமை வெளியிடப்பட்ட DGCA தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் 16.1 கோடி பயணிகள் உள்நாட்டு விமானங்களில் பயணித்துள்ளனர். இதன் மூலம் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் 15.2 கோடியை விட 6 சதவீதம் அதிகம்
IndiGo Domestic flights
இண்டிகோ நிறுவனம் 61.9 சதவீத பங்குடன் உள்நாட்டு விமானப் பயணத்தில் முன்னணியில் உள்ளது. ஏர் இந்தியா குழுமம் (ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இரண்டும்) 28.4 சதவீதத்துடன் அடுத்த இடத்தில் உள்ளது. ஆகாசா மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகியவை முறையே 4.6 சதவீதம் மற்றும் 3.7 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளன. 2024 டிசம்பரில், இதுவரை இல்லாத அதிகபட்சமாக உள்நாட்டு விமானப் போக்குவரத்து கிட்டத்தட்ட 1.5 கோடியாக அதிகரித்தது. இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் இருந்த 1.4 கோடியை விட 8 சதவீதம் அதிகமாகும்.
Union aviation secretary Vumlunmang Vualnam
இந்த வளர்ச்சி வரும் காலத்தில் இன்னும் வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களைச் சேர்த்து, கடந்த பத்தாண்டுகளில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 16 கோடியில் இருந்து 2024ல் 38 கோடியாக அதிகரித்துள்ளது என மத்திய விமானப் போக்குவரத்துச் செயலர் வும்லுன்மாங் வுவல்னம் தெரிவித்துள்ளார்.
Domestic flight passengers
“சராசரியான ஒரு நபர் இன்னும் மிகக் குறைவான விமானப் பயணங்களையே மேற்கொள்கிறார்கள் என்றாலும், இந்தியா முழுவதும் விமானப் பயணத்திற்கான தேவை அதிகரித்து வருகிறது. 2047ஆம் ஆண்டில் பயணிகளின் எண்ணிக்கை 3.8 பில்லியனை எட்டும். இது வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் இலக்குடன் ஒத்துப்போகிறது. இப்போது வளர்ச்சியின் வலுவான அடித்தளத்தில் இருக்கிறோம். 2047ஆம் ஆண்டுக்குள் 350 கோடி பேர் விமானத்தில் பயணிப்பார்கள்" என்று வும்லுன்மாங் கூறினார்.
0.5 trips per person per year
இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது 159 ஆக இருக்கும் விமான நிலையங்கள் எண்ணிக்கை, 2047ஆம் ஆண்டுக்குள் 350 ஆக உயரும் என்றார். "தற்போது, இந்தியாவில் உள்ளவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நபருக்கு 0.13 விமானப் பயணங்களை மேற்கொள்கின்றனர். இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு" எனவும் வும்லுன்மாங் குறிப்பிட்டுள்ளார்.
Airport infrastructure
இந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது அல்லது ஒரு நபருக்கு வருடத்திற்கு 0.5 பயணங்கள் என்ற இலக்கை எட்டுவது குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஏனென்றால், அதிக மக்கள்தொகை, வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம், முன்னேறிவரும் பொருளாதாரம் ஆகியவை இந்தியாவில் விமானப் பயணங்கள் அதிகரிக்க சாதகமான சூழலை உருவாக்குகின்றன. இந்த வளர்ச்சியை ஆதரிக்கும் வகையில் விமான நிலைய உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன” என்று வால்நாம் தெரிவித்துள்ளார்.