MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • ஆண்டுக்கு 6 சிலிண்டர் உறுதி; ஒப்புதல் அளித்த அமைச்சரவை: பேரவையில் அரசு அதிரடி அறிவிப்பு!

ஆண்டுக்கு 6 சிலிண்டர் உறுதி; ஒப்புதல் அளித்த அமைச்சரவை: பேரவையில் அரசு அதிரடி அறிவிப்பு!

'அந்த்யோதயா அன்ன யோஜனா' திட்டத்தில் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்துக்கு, ஜம்மு - காஷ்மீர் அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் சதீஷ் சர்மா சட்டப்பேரவையில் அறிவித்தார்.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Sep 26 2026, 07:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தேர்தல் வாக்குறுதி 12... கொடுத்தது வெறும் 6 சிலிண்டர்!
Image Credit : x

தேர்தல் வாக்குறுதி 12... கொடுத்தது வெறும் 6 சிலிண்டர்!

ஆண்டுக்கு 12 சிலிண்டர் தருவோம்னு சொன்னீங்க... 2 வருஷம் முடிஞ்சு போச்சு... அந்த 24 சிலிண்டர் எங்கே போச்சு? ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய இந்த ஒற்றைக் கேள்வி, ஒட்டுமொத்த அவையையும் அதிர வைத்திருக்கிறது.

ஸ்ரீநகரில் நடந்து வரும் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையின் இலையுதிர்காலக் கூட்டத்தொடரில், நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் சதீஷ் சர்மா ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின் கீழ் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்திற்குத் தகுதிவாய்ந்த அதிகார அமைப்பு முறைப்படி ஒப்புதல் தந்துவிட்டதாகவும், இதற்கான அரசாணைகள் விரல் நுனியில் தயாராகி வருவதாகவும் பெருமிதத்தோடு அறிவித்தார்.

ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்கள் மேசையைத் தட்டி வரவேற்க, முதல்வர் உமர் அப்துல்லாவும், இது ஏழை எளிய மக்களின் கண்ணியமான வாழ்வுக்கான சமூக நீதிப் பரிசு; பட்ஜெட் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம் என்று நெஞ்சை நிமிர்த்தினார். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த அமைதி சுக்குநூறாக உடைந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இது அப்பட்டமான துரோகம் - கொதித்தெழுந்த பா.ஜ.க:
Image Credit : x

இது அப்பட்டமான துரோகம் - கொதித்தெழுந்த பா.ஜ.க:

அரசின் இந்த முடிவை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மா (பாஜக) ஆவேசமாக எழுந்தார். 2024 தேர்தல் களத்தில் என்ன சொன்னீர்கள்? அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் இலவசம் என்றீர்கள். இப்போது என்னடா என்றால், மொத்த மக்களையும் கழற்றி விட்டுவிட்டு, அந்தியோதயா அன்ன யோஜனா பிரிவினருக்கு மட்டும் அதுவும் வெறும் 6 சிலிண்டர் தானா? 2 ஆண்டுகள் ஓடிவிட்டது... மக்களுக்குத் தரவேண்டிய 24 சிலிண்டர்கள் எங்கே? அதற்கு வெள்ளை அறிக்கை கொடுங்கள்!" என்று சுனில் சர்மா வெளுத்து வாங்கினார்.

அத்தோடு விடாமல், வாக்குறுதி அளித்த 1 லட்சம் அரசு வேலைகள் எங்கே? 200 யூனிட் இலவச மின்சாரம் என்னாச்சு? இலவச ரேஷன், கேஸ் என்று ஏழை மக்களை இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவீர்கள்? என்று அவர் அடுக்கடுக்காகக் கேள்விக்கணைகளைத் தொடுக்க, பேரவையே தகித்தது.

34
சிலிண்டர் திருடர்கள் - அதிர்ந்த சட்டப்பேரவை
Image Credit : x

சிலிண்டர் திருடர்கள் - அதிர்ந்த சட்டப்பேரவை

சுனில் சர்மாவின் பேச்சுக்கு வலுசேர்க்கும் வகையில், ஒட்டுமொத்த பாஜக எம்.எல்.ஏ-க்களும் இருக்கைகளை விட்டு எழுந்து நின்று, பொய் அரசு ஒழிக (Jhoote Sarkar Hai Hai), 2 வருஷத்து 24 சிலிண்டர் எங்கே போச்சு?, சிலிண்டர் திருடர்கள் (Cylinder Chor) என்று முழக்கங்களை எழுப்பி அவையை அதிர வைத்தனர்.

ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நேரடி வாக்குவாதம் வெடித்துப் பேரவை போர்க்களமானது. நிலைமை எல்லை மீறவே, சபாநாயகர் அப்துல் ரஹீம் ராத்தர் எழுந்து நின்று எம்.எல்.ஏ-க்களை அமருமாறு எச்சரித்து, பெரும் போராட்டத்திற்குப் பின் அவையை அமைதிக்குக் கொண்டு வந்தார்.

44
வெளியே காத்திருந்த பிடிபி சாட்டையடி
Image Credit : x

வெளியே காத்திருந்த பிடிபி சாட்டையடி

அவைக்குள்ளே பா.ஜ.க அனல் பறக்கவிட, வெளியே மக்கள் ஜனநாயகக் கட்சி (PDP) எம்.எல்.ஏ அகா சையத் முன்தாசிர் அரசுக்கு எதிராகச் சாட்டையைச் சுழற்றினார். 12 சிலிண்டர் தருவோம்னு பிரம்மாண்ட வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியைப் பிடித்தார்கள். இப்போ மொத்தமாக 'யூ-டர்ன்' போட்டுட்டு, 6 சிலிண்டர்னு நிபந்தனை போடுறாங்க.

அன்றாட மக்கள் பிரச்னைகளில் கொடுத்த வாக்குறுதியைக் கூட காப்பாற்றத் துப்பில்லாத அரசு இது என்று வறுத்தெடுத்தார். பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் வழங்கிய கையோடு, இரட்டிப்பு ரேஷன் மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் தருவோம் என்று கூறி ஆட்சியைப் பிடித்த உமர் அப்துல்லா அரசுக்கு, இந்த அரை வாக்குறுதி விவகாரம் பெரும் அரசியல் தலைவலியாக மாறியிருக்கிறது.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஜம்மு காஷ்மீர்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bank Holidays: Festival Season தொடங்குது.! அக்டோபரில் இத்தனை நாள் வங்கிகள் இயங்காது.! உடனே நோட் பண்ணுங்க!
Recommended image2
சபரிமலையில் அரை கிலோ தங்க கிரீடம் மாயம்? போலி வைக்கப்பட்டதா? தமிழக பக்தர்கள் தந்த கிரீடத்திற்கு என்னாச்சு?
Recommended image3
Cooking Oil Price: இனி தினமும் பூரி, வடைதான்.! லிட்டருக்கு ரூ.50 வரை குறையும் சமையல் எண்ணெய்.! என்னதான் காரணம்?!
Related Stories
Recommended image1
Bank Holidays: Festival Season தொடங்குது.! அக்டோபரில் இத்தனை நாள் வங்கிகள் இயங்காது.! உடனே நோட் பண்ணுங்க!
Recommended image2
சபரிமலையில் அரை கிலோ தங்க கிரீடம் மாயம்? போலி வைக்கப்பட்டதா? தமிழக பக்தர்கள் தந்த கிரீடத்திற்கு என்னாச்சு?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved