விஜய்க்கு பயங்கர ஷாக்.! நம்ப வைத்து ஆப்படித்த பிரசாந்த் கிஷோர்- அதிர்ச்சியில் தவெக
தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தலைமையில் தவெக போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில், விஜய்யின் அரசியல் ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தலும் தமிழக அரசியல் களமும்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக தற்போதுள்ள கூட்டணியை தக்கவைத்து தேர்தலை எதிர்கொள்ள காய் நகர்த்தி வருகிறது. அதிமுகவும் தனது தலைமையிலான கூட்டணியை விரிவுப்படுத்த பல கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதன் முதல் கட்டமாக பாஜகவோடு கூட்டணியை உறுதி செய்துள்ளது. அடுத்ததாக பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை இணைக்க திட்டமிட்டு வருகிறது. மேலும் தங்கள் அணியில் நடிகர் விஜய்யின் தவெகவை இணைக்க ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் நடிகர் விஜய்யோ தனது தலைமையில் தான் கூட்டணி, ஆட்சியில் பங்கு உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளால் அதிமுக பின்வாங்கியுள்ளது.
விஜய்யின் அரசியல் பயணம்
இதனிடையே 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என அறிவித்துள்ள விஜய் இதற்கான பணிகளை தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் சென்னையில் நேற்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றத் தேர்தலில் தவெக-வின் முதலமைச்சர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டார்.
தவெக தலைமையில் அமையும் கூட்டணி எப்போதும் திமுக மற்றும் பாஜக-வுக்கு எதிராகவே இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது. ஆகஸ்ட் 2025-ல் தவெக-வின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும். செப்டம்பர் முதல் டிசம்பர் 2025 வரை தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். தமிழ்நாடு முழுவதும் 12,500 கொள்கை விளக்க கூட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர்
இதனிடையே நடிகர் விஜய்யின் தனது அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோரை நியமித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டிருந்தார். நிகழ்ச்சியிலும் பிரசாந்த் கிஷோர் விஜய்க்கு ஆதரவாக உரையாற்றியிருந்தார்.
அப்போது தேர்தல் வியூகங்கள், அடுத்ததாக செய்ய வேண்டிய திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பிரசாந்த் கிஷோர் விஜய்க்கான அரசியல் பணிகளை மேற்கொள்ள தனியாக அணியை உருவாக்கினார். பணியாளர்களை நியமித்து பணிகள் தொடங்கினார்.
ஆதவ் ஆர்ஜூனா - பிரசாந்த் கிஷோர் மோதல்.?
ஆனால் தவெகவில் உள்ள முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜூனா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாக கூறப்படுகிறது. மேலும் அரசியல் ஆலோசனை பணியிலும் ஆதவ் ஆர்ஜூனா இடையூறு செய்வதாகவும், பிரசாந்த் கிஷோர் நியமித்த பணியாளர்களை நீக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
மேலும் அரசியல் ஆலோசனைக்கு பல நூறு கோடி ரூபாயை பிரசாந்த் கிஷோர் கேட்டதாகவும் இதனால் இரு தரப்பிற்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படவில்லையென மற்றொரு தரப்பில் கூறப்பட்டது. இதனால் தவெகவின் அரசியல் ஆலோசனை பணியில் பெரிய அளவில் பிரசாந்த் கிஷோர் ஈடுபடாமல் அமைதி காத்து வந்துள்ளார். தவெகவிற்கு அரசியல் ஆலோசனை பணியில் இருந்து பின்வாங்கியதாகவும் தகவல் வெளியானது.
பின் வாங்கும் பிரசாந்த் கிஷோர்
தற்போது ஆதவ் அர்ஜூனா தலைமையிலான டீம் தான் தவெகவிற்கு அரசியல் யுக்திகளை வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரசாந்த் கிஷோர், பீகார் சட்டமன்ற தேர்தல் பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருவதாகவும், நவம்பர் மாதத்திற்கு பிறகு விஜயின் சிறப்பு ஆலோசகராக செயல்படுவது குறித்து முடிவெடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் ஆலோசகராக அவர் செயல்படுவார் என்று சொல்லப்பட்ட நிலையில் தற்பொழுது சிறிது காலம் ஓய்வு எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளது தவெகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.