- Home
- இந்தியா
- CP Radhakrishnan: குடியரசு துணைத் தலைவரான தமிழர்! ஓடோடிச் சென்று வாழ்த்திய பிரதமர்! பிரபல நடிகரும் வாழ்த்து!
CP Radhakrishnan: குடியரசு துணைத் தலைவரான தமிழர்! ஓடோடிச் சென்று வாழ்த்திய பிரதமர்! பிரபல நடிகரும் வாழ்த்து!
குடியரசு துணைத் தலைவரான தமிழர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

குடியரசு துணைத் தலைவரான தமிழர் சி.பி.ராதாகிருஷ்ணன்
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். மொத்தம் 452 வாக்குகள் பெற்ற அவர் இந்தியா கூட்டணி சார்பில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை 152 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றிருந்தார்.
சி.பி.ராதாகிருஷ்ணணுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து
தமிழர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பெருமிதம் கொள்ளச்செய்துள்ளது. மாபெரும் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நாடு முழுவதும் இருந்தும் பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். நாட்டின் 15வது குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணணுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
தேசபக்தி கொண்ட தலைவர்
சி.பி.ராதாகிருஷ்ணணுக்கு பூங்கொடுத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். அப்போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமாகா தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இதேபோல் கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகரும் சி.பி.ராதாகிருஷ்ணனை வாழ்த்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணன் ஜி அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். அர்ப்பணிப்புள்ள பொது சேவகர், தேசபக்தி கொண்ட தலைவர், மற்றும் நேர்மையின் குரல், அவரது பல தசாப்தகால சேவை மற்றும் மக்களின் நலனுக்கான அர்ப்பணிப்பு நமது ஜனநாயகத்தின் உண்மையான உணர்வை எடுத்துக்காட்டுகிறது. அவரது இந்த பயணம் தொடர்ந்து பல லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளித்து, இந்தியாவின் முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தட்டும்'' என்று கூறியுள்ளார்.
சுனில் ஷெட்டியும் வாழ்த்து
மேலும் பிரபல நடிகர் சுனில் ஷெட்டியும் புதிய குடியரசு துணைத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ''இந்தியத் துணைக்குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணன் ஜி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தங்களின் ஞானமும் தொலைநோக்குப் பார்வையும் நாட்டிற்கு வழிகாட்டி, வருங்கால சந்ததியினருக்கு நிச்சயம் பயன் அளிக்கும். தாங்கள் தொடர்ந்து நாட்டுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்ற தேவையான வலிமையையும் வெற்றியையும் பெற வாழ்த்துகிறோம்'' என்று சுனில் ஷெட்டி கூறியுள்ளார்.