குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அவர் எத்தனை வாக்குகள் பெற்றார் என்பது குறித்து பார்ப்ப்போம்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் பாஜகவின் தேசிய ஜனநாயக‌ கூட்டணி சார்பில் பாஜக மூத்த தலைவரும், மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிய்ட்டார் காலை 10 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது.

சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி

இதனைத் தொடர்ந்து பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடந்தது. இதன்பிறகு குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவர் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை பெற்றார். மொத்தம் 767 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், அதில் 15 வாக்குகள் செல்லாதது என அறிவிக்கப்பட்டது.