தமிழர்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகை கொண்டாடுவதில் மகிழ்ச்சி.. பிரதமர் மோடி
டெல்லியில் அமைந்துள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
11

Image Credit : Asianet News
பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடிய மோடி
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் டெல்லியில் உள்ள இல்லத்தில் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், பராசக்தி படக்குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Latest Videos

