MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • SIR: வழக்கறிஞராக மாறிய முதல்வர்.. உச்சநீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி நேரடி வாதம்.. வியந்த நீதிபதிகள்!

SIR: வழக்கறிஞராக மாறிய முதல்வர்.. உச்சநீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி நேரடி வாதம்.. வியந்த நீதிபதிகள்!

‘’ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீட்டிற்குச் சென்று கணவரின் குடும்பப்பெயரைப் பயன்படுத்துகிறார். தேர்தல் ஆணையம் அவரை நீக்குகிறார்கள். அவரது பெயரை நீக்க இது ஒரு காரணமா?'' என்று மம்தா பானர்ஜி தனது வாதத்தை முன்வைத்தார்.

2 Min read
Author : Rayar r
Published : Feb 04 2026, 04:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்
Image Credit : Asianet News

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்

தமிழகத்தை போல் மேற்கு வங்கத்திலும் S.I.R எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மேற்கொண்ட தேர்தல் ஆணையம் பல லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்கியுள்ளது. றப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை எதித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஓ பிரையன் உள்ளிட்ட மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

24
உச்சநீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி வாதம்
Image Credit : Asianet News

உச்சநீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி வாதம்

இந்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், தனது தரப்பு தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வழக்கறிஞராக மாறி உச்சநீதிமன்றத்தில் இன்று (பிப்ரவரி 4) நேரடியாக வாதாடியுள்ளார்.

 வழக்கறிஞர் உடை அணிந்து வாதாடிய மம்தா பானர்ஜி, ''வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி தவறுகளைச் சரிசெய்வதற்குப் பதிலாக மேற்கு வங்கத்தைக் குறிவைத்து உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது'' என்று குற்றம்சாட்டினார்.

சூப்பராக வாதாடிய மம்தா பானர்ஜி

''இந்த சிறப்புத் திருத்தம் நீக்குதலுக்கானது. சேர்ப்பதற்கானது அல்ல. தர்க்கரீதியான முரண்பாடுகள் என்ற பெயரில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் தவறாக குறிவைக்கப்பட்டுள்ளனர். 

தத்தா மற்றும் டட்டா, ராய் மற்றும் ரே, கங்குலி மற்றும் கங்கூலி போன்ற பொதுவான வங்காள குடும்பப்பெயர் வேறுபாடுகள் பொருத்தமின்மையாக கருதப்பட்டு தேர்தல் ஆணையம் நீக்குகிறது. 

ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீட்டிற்குச் சென்று கணவரின் குடும்பப்பெயரைப் பயன்படுத்துகிறார். தேர்தல் ஆணையம் அவரை நீக்குகிறார்கள். அவரது பெயரை நீக்க இது ஒரு காரணமா?'' என்று மம்தா பானர்ஜி தனது வாதத்தை முன்வைத்தார்.

Related Articles

Related image1
SIR: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சூப்பர் சான்ஸ்.. 10 நாள் அவகாசம் நீட்டிப்பு!
Related image2
SIR ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தல்.. நாடாளுமன்றத்தில் கர்ஜித்த கமல்ஹாசன்.. அதிர்ந்த ஆளுங்கட்சி!
34
தலைமை நீதிபதி உறுதி
Image Credit : ANI

தலைமை நீதிபதி உறுதி

அப்போது பேசிய தலைமை நீதிபதி சூர்யா காந்த், ''இறந்தவர்கள் அல்லது தகுதியற்ற வாக்காளர்கள், காரணம் எதுவாக இருந்தாலும், நீக்கப்பட வேண்டும். அதே வேளையில் சிறிய எழுத்துப்பிழைகள் அல்லது வட்டார வழக்கு வேறுபாடுகள் நீக்குவதற்கான காரணமாக இருக்க முடியாது. எந்தவொரு அப்பாவி குடிமகனும் விடுபடாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்'' என்று உறுதியளித்தார்.

தொடர்ந்து ஆதார் அட்டை விவகாரத்தில், நீதிமன்றத்தின் உத்தரவுகள் இருந்தபோதிலும் அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று முதல்வர் மம்தா பானர்ஜி சுட்டிக்காட்டியபோது குடியுரிமை ஆவணமாக ஆதார் அட்டையின் செல்லுபடியாகும் தன்மை குறித்த கேள்வி நிலுவையில் இருப்பதால் அதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது.

44
தேர்தல் ஆணையம் மீது மம்தா குற்றச்சாட்டு
Image Credit : Social Media

தேர்தல் ஆணையம் மீது மம்தா குற்றச்சாட்டு

மேலும் மம்தா பானர்ஜி ''இந்திய தேர்தல் ஆணையம் மாநில அலுவலகங்களை SIRநடவடிக்கையில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. அதற்கு பதிலாக "பாஜக ஆளும் மாநிலங்களில் அமர்ந்திருக்கும் நுண் பார்வையாளர்களை நியமித்து வாக்காளர்களின் பெயர்களை நீக்க AI-ஐப் பயன்படுத்துகிறது'' என்று குற்றம்சாட்டினார். 

இதற்கு பதில அளித்த தேர்தல் ஆணையம், ''"பி.எல்.ஓ-க்கள் மற்றும் பிற அதிகாரிகளை நியமிக்குமாறு மாநில அரசுக்கு நாங்கள் பல கடிதங்கள் எழுதியுள்ளோம். ஆனால் அவர்கள் ஒத்துழைக்காததால் நாங்களே நுண் பார்வையாளர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது'' என்று கூறியது.

இந்தியாவில் இதுதான் முதன்முறை

அனைத்து வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், மம்தா பானர்ஜியின் மனுவுக்குப் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கை ஒத்திவைத்தது. இந்திய வரலாற்றிலேயே ஒரு மாநில முதல்வர் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக வாதம் செய்தது இதுவே முதன்முறையாகும். மம்தா பானர்ஜி கைதேர்ந்த வழக்கறிஞர்கள் போல வாதம் செய்ததை பார்த்து நீதிபதிகள் வியந்து போயினர்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தேர்தல்
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
குறைகிறது தங்கம்- வெள்ளி விலை..! மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு..!
Recommended image2
குடும்ப தலைவிகளே அக்கவுண்ட் செக் பண்ணீங்களா..? வருடத்திற்கு 2 இலவச சிலிண்டர்.. முதல்வர் அறிவிப்பு
Recommended image3
ரயில் டிக்கெட்டை கேன்சல் பண்றீங்களா..? ஒரு பைசா ரீ பண்ட் ஆகாது..! புதிய விதியால் பயணிகள் ஷாக்
Related Stories
Recommended image1
SIR: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சூப்பர் சான்ஸ்.. 10 நாள் அவகாசம் நீட்டிப்பு!
Recommended image2
SIR ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தல்.. நாடாளுமன்றத்தில் கர்ஜித்த கமல்ஹாசன்.. அதிர்ந்த ஆளுங்கட்சி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved