- Home
- இந்தியா
- வெள்ளத்தில் மிதக்கும் வடமாநிலங்கள்! கொட்டித்தீர்க்கும் கனமழை! அடுத்த 5 நாட்களுக்கு வானிலை மையம் அலர்ட்!
வெள்ளத்தில் மிதக்கும் வடமாநிலங்கள்! கொட்டித்தீர்க்கும் கனமழை! அடுத்த 5 நாட்களுக்கு வானிலை மையம் அலர்ட்!
கனமழை காரணமாக வடமாநிலங்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு அங்கு பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Heavy Rain Warning For Northern States
நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. உத்தரகண்டின் உத்தரகாசியில் மேக வெடிப்பு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் ஏற்படட் வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
இதேபோல் உத்தபிரதேச மாநிலத்திலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இது மட்டுமின்றி டெல்லி, பஞ்சாப், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கனமழை கொட்டித் தீர்க்கிறது.
வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்யும் கனமழை
உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தின் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், இன்று (8ம் தேதி) முதல் 12ம் தேதி வரையிலான 5 நாட்களுக்கு பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல்வேறு மாநிலங்களில் மழை எச்சரிக்கை
ஆகஸ்ட் 8 முதல் 12 வரை உத்தரகண்ட், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல் ஹரியானா மற்றும் மேற்கு உத்தரபிரதேசத்தில் மிக கனமழை பெய்யக்க்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஹரியானா மற்றும் மேற்கு உத்தரபிரதேசத்தில் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமின்றி பீகார் மற்றும் ஜார்க்கண்டிலும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
பீகாரிலும் கடும் வெள்ளம்
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பீகாரின் பல பகுதிகள் ஏற்கனவே வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளன. பல ஆறுகள் அபாய அளவைத் தாண்டி பாய்கின்றன. கீர் கங்காவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குஜராத்தைச் சேர்ந்த 141 யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உத்தரகண்டில் சிக்கித் தவிக்கின்றனர். உத்தரகண்ட் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் குஜராத் அரசு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.
கேரளாவிலும் கொட்டித் தீர்க்கும் கனமழை
நமது அண்டை மாநிலமான கேரளாவிலும் தென் மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அங்குள்ள இடுக்கி, திரிச்சூர், மலப்புரம், வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் இன்று கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் பலத்த மழை பெய்ய்ம் எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மழை எப்படி?
தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களான தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையிலும் அவ்வப்போது பரவாலாக மழை கொட்டி வருவது குறிப்பிடத்தக்கது.