HMPV வைரஸ் பரவல்! வேறு வழியில்லாமல் திருப்பதி தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு!
சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருவதால், திருப்பதிக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
HMPV
சீனாவில் உருவான கொரோனோ வைரஸ் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடியது. இதனால் அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல லட்சம் பேர் உயிரிழந்தனர். கொரோனாவில் பாதிப்பில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். இதனால் சீனாவில் வைரஸ் உருவாகிறது என்றாலே பொதுமக்கள் ஒரே வித பீதியுடனே இருந்து வருகின்றனர்.
HMPV Virus
இந்நிலையில் சீனாவில் மனித மெட்டாப்நிமோனியா வைரஸ் அதாவது HMPV வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவிலும் இதன் வேகம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் HMPV பாதிப்பு உறுயாகி உள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. இதனால் கர்நாடகா மாநிலங்களில் முகக்கவசம் காட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழக அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! இவர்களுக்கு ரூ.1000 உயர்வு!
Tirumala Tirupati Devasthanams
அதேபோல் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு வைகுண்ட ஏகாதசி விழா மற்றும் சொர்க்க வாசல் தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்நிலையில் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு
முகக்கவசம் காட்டாயம் என திருப்பதி வேதஸ்தானம் கூறியுள்ளது.
Face Masks Mandatory
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு: திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். HMPV வைரஸ் தொற்று பரவல் காரணமாக தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! அடுத்த 12 நாட்கள் லீவே இல்லை! தொடர்ந்து ஸ்கூல் தான்!
Tirupati
வைகுண்ட ஏகாதிசி தினமான 10-ம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை திருமலையில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். சொர்க்கவாசல் திறந்திருக்கும் நாட்களில் தரிசன டிக்கெட் அல்லது இலவச தரிசன டோக்கன் ஆகிய ஏதாவது ஒன்றை எடுத்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படும். டிக்கெட் இல்லாமல் நேரடியாக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுக்கு தரிசன அனுமதி கிடையாது என பி.ஆர்.நாயுடு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.